ஒரிசா சிறுமி ஒருவர் கடத்தப்பட்டு 28 நாட்கள் கூட்டு வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது!
ஒரிசாவின் புபனேஷ்வர் பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவர் பலத்த காயங்களுடன் கடந்த ஞாயிறு அன்று கரோஹஸ்த்ரா ஆற்றியில் மீட்கப்பட்டுள்ளார். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட இச்சிறுமியை அப்பகுதி மக்கள் மருத்துமனையில் அனுமதித்துள்ளனர், அப்போது இச்சிறுமி கூட்டு வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து காவல்துறையினர் இச்சிறுமியை விசாரிக்கையில், குஷாக்கிப் பகுதிகுட்பட்ட ரௌத்ரபூர் கிராமத்தை சேர்ந்த இவர் கடந்த மாதம் 20-ஆம் நாள் மதுபான் பஜார் சென்றபோது மர்ம நபர்களால் கடத்தப்பட்டுள்ளார் எனவும், மர்ம நகர் கொண்ட குழுவால் 28 நாட்கள் தொடர்ந்து கூட்டு வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டுள்ளார் எனவும் தெரியவந்துள்ளது. மேலும் இவரை கொலை செய்யும் முயற்சியில் தாக்கி பின்னர் ஆற்றில் வீசியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இச்சிறுமியின் பெற்றோர் காவல்துறையில் கொடுத்த புகாரின் பேரில் விசாரணை நடைப்பெற்று வருகிறது. விசாரணையில் சிறுமி கடத்தப்பட்ட நாள் அன்று அவரது மாமன், வீட்டியில் இருந்து அவரை அழைத்து சென்றதாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில் குற்றம்சாட்டப்பட்ட சிறுமியின் மாமன் உள்பட இச்சம்பவத்தில் ஈடுப்பட்ட பிறரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்!