ரபேல் மற்றும் தேஜாஸ் இந்திய வானத்தில் கர்ஜனை செய்து சாகசங்கள் காட்டியது. இந்திய விமான படை எந்த நாட்டையும் விட குறைந்தது அல்ல என்பதை நிரூபித்துள்ளது.
விமானப்படை தினத்தை முன்னிட்டு, இன்று ரபேல் (Rafeal) இந்திய வானத்தில் கர்ஜித்து இந்தியாவின் எதிரிகளுக்கு எச்சரித்தது. சாகசத்தில் ரபேலுடன் ஜாகுவார் விமானமும் இணைந்தது.
இந்திய விமானப்படை தனது 88 வது தினத்தை இன்று கொண்டாடுகிறது. இந்த வகையில், ஒவ்வொரு ஆண்டும் போலவே, இந்த ஆண்டு காசியாபாத்தின் ஹிண்டன் விமான தளத்தில் கொண்டாட்டங்கள் நடைபெற்றன.
இந்திய விமானப்படை போர் விமானம் ஹிண்டன் ஏர்பேஸில் ஏராளமான சாதனைகளை நிகழ்த்தியது.
#WATCH Indian Air Force fighter jet carries out vertical charlie manoeuvre at Hindon Air Base in Ghaziabad, as IAF celebrates its 88th anniversary today.#AirForceDay2020 pic.twitter.com/K68On8puHb
— ANI UP (@ANINewsUP) October 8, 2020
விமானப்படை தினத்தில் தனது வலிமையைக் காட்ட முதல் முறையாக ரபேலுக்கு வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்பை தவறமல் பயன்படுத்திக் கொண்ட நபேல், தனது வலிமையை காட்டி, மக்களின் நம்பிக்கையை வென்று தனது பலத்தைக் காட்டினார். ரபேலுடன், சூர்யகிரன் அணியும் சாகசங்களை நிகழ்த்தியது. இந்த நேரத்தில், ஜாகுவார் போர் விமானங்களும் மக்களை கவரும் வகையில் சாகசங்களை நிகழ்த்தியது.
சினூக் ஹெலிகாப்டர்கள், அப்பாச்சி ஹெலிகாப்டர்கள், குளோப்மாஸ்டர், சுகோய் போன்றவை போர் விமானங்கள் ஹிண்டன் விமான நிலையத்தில் தங்கள் வலிமையைக் காட்டின.
இராணுவத்தின் முப்படைகளும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டன. மேலும், பல மூத்த அதிகாரிகளும் ஹிண்டன் ஏர்பேஸில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். பாதுகாப்புப் படைத் தலைவர் பிபின் ராவத்தும் கலந்து கொண்டார். அணிவகுப்பின் போது, விமானப்படைத் தலைவர் ஆர்.கே.எஸ் பதவுரியா முதலில் அணிவகுப்பு மரிய்யாதையை பெற்றுக் கொண்டார்
முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி, 88 வது விமானப்படை தினமான இன்று, இந்திய விமானப்படைக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
அவர், தனது ட்வீட்டில், இந்திய விமானபடை, நாட்டின் வான் பகுதியை பாதுகாப்பாக வைத்திருப்பதோடு மட்டுமல்லாமல், பேரழிவு காலங்களில் மனிதகுல சேவையில் முக்கிய பங்கு வகிக்கிறது என்று தெரிவித்துள்ளார். தாய் நாட்டை பாதுகாக்கும் வீரர்களின் துணிச்சல், வீரம் மற்றும் அர்ப்பணிப்பு அனைவருக்கும் உத்வேகம் அளிக்கிறது என கூறியுள்ளார்.
ALSO READ | Indian Air Force Day 2020: பிரதமர், குடியரசுத் தலைவர் வாழ்த்து..!!!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYe