பிரிட்டன் ராணி மரணம்; செப். 11ம் தேதி ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படும்: இந்தியா

பிரிட்டன் ராணி மறைவையொட்டி செப்டம்பர் 11ம் தேதி ஒரு நாள் அரசு துக்கம் அனுசரிக்கப்படும் என என மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Sep 9, 2022, 03:44 PM IST
  • இங்கிலாந்தை நீண்டகாலம் அரசாட்சி செய்த இரண்டாம் எலிசபெத் மகாராணி.
  • ராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை இரங்கல் தெரிவித்துள்ளார்.
  • குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவும் ராணியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார்.
பிரிட்டன் ராணி மரணம்; செப். 11ம் தேதி ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படும்: இந்தியா title=

பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவையடுத்து, செப்டம்பர் 11ஆம் தேதி இந்தியா முழுவதும் ஒரு நாள் அரசு துக்கம் அனுசரிக்கப்படும் என இந்திய அரசு முடிவு செய்துள்ளதாக உள்துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 9, 2022) அறிவித்தது. உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் செப்டம்பர் 8, 2022 அன்று காலமானார். மறைந்த ராணிக்கு மரியாதை செலுத்தும் வகையில், செப்டம்பர் 11 ஆம் தேதி இந்தியா முழுவதும் ஒரு நாள் அரசு துக்கம் அனுசரிக்கப்படும் என இந்திய அரசு முடிவு செய்துள்ளது” என கூறப்பட்டுள்ளது

"துக்க நாளில், அனைத்து கட்டிடங்களிலும் இந்தியா முழுவதும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும், மேலும் அன்றைய தினம் அதிகாரபூர்வ அரசு விழா எதுவும் இருக்காது" என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தை நீண்டகாலம் அரசாட்சி செய்த இரண்டாம் எலிசபெத் மகாராணி வியாழன் அன்று தனது 96 வது வயதில் காலமானதை அடுத்து, உலகெங்கிலும் இருந்து இரங்கல் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. 

மேலும் படிக்க | எலிசபெத் ராணியின் மரணத்திற்கு பின் கோஹினூர் வைரம் இனி யாரிடம் செல்லும்..!!

ராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை இரங்கல் தெரிவித்துள்ளார். 2015 மற்றும் 2018 ஆம் ஆண்டு இங்கிலாந்து பயணங்களின் போது ராணியுடனான தனது மறக்கமுடியாத சந்திப்புகளை பிரதமர் ட்விட்டரில் நினைவு கூர்ந்தார். "அவரது அரவணைப்பையும் கருணையையும் என்னால் ஒருபோதும் மறக்க முடியாது. ஒரு சந்திப்பின் போது, ​​மகாத்மா காந்தி தனக்கு பரிசளித்த கைக்குட்டையை என்னிடம் காட்டினார்" என்று பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார்.

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவும் ராணியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார். "இங்கிலாந்தின் மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவில், உலகம் ஒரு சிறந்த ஆளுமையை இழந்துவிட்டது. 7 தசாப்தங்களாக அவர் தனது நாட்டையும் மக்களையும் வழிநடத்தி வந்த ஒரு சகாப்தம் முடிவுக்கு வந்து விட்டது. இங்கிலாந்து மக்களின் துயரத்தில் நான் பகிர்ந்து கொள்கிறேன், மேலும், குடும்பத்திற்கு எனது இதயப்பூர்வமான இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். " என்று குடியரசுத் தலைவர் ட்வீட் செய்துள்ளார்.

மேலும் படிக்க | இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத் காலமானார்: பிரிட்டனின் சூரியன் அஸ்தமமானது

மேலும் படிக்க | பாகுபலி-2: இங்கிலாந்து ராணிக்கு முதல் சிறப்புக் காட்சி 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News