‘கோயில்களுக்குள் கற்பழிப்புகள் நடக்கின்றன’ - திக்விஜய் சிங்..!

காவி உடை அணிந்தவர்கள் கோயில்களுக்குள் பாலியல் பலாத்காரம் செய்கிறார்கள் என காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங் தெரிவித்துள்ளார்!!

Last Updated : Sep 17, 2019, 04:25 PM IST
‘கோயில்களுக்குள் கற்பழிப்புகள் நடக்கின்றன’ - திக்விஜய் சிங்..! title=

காவி உடை அணிந்தவர்கள் கோயில்களுக்குள் பாலியல் பலாத்காரம் செய்கிறார்கள் என காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங் தெரிவித்துள்ளார்!!

மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் திக்விஜய் சிங் இன்று மற்றொரு சர்ச்சை கருத்தை தெரிவித்துள்ளார். காவி உடை அணிந்தவர்கள் கோயில்களுக்குள் பாலியல் பலாத்காரம் செய்கிறார்கள் என்றும், 'சூரன்' [பௌடர்] விற்பனை செய்கிறார்கள் என்றும் கூறியுள்ளார்.

மத்திய பிரதேச ஆத்யாத்மிக் விபாக் (போபாலில் ஆன்மீகத் துறை) ஏற்பாடு செய்திருந்த சந்த் சமகத்தில் திக்விஜயா சிங் உரையாடினார். அப்போது, பண்டைய சனாதன தர்மத்தை அவதூறு செய்தவர்களை கடவுள் கூட விடமாட்டார். காவி உடையணிந்த பண்டிதர்கள் கோயில்களுக்குள் கற்பழிப்பு செய்து சூரனை விற்பனை செய்கிறார்கள் என மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் முன்னிலையில் திக்விஜயா சிங் தெரிவித்துள்ளார்.

மேலும், 'ஜெய் ஸ்ரீ ராம்' என்ற கோஷம் அரசியல் ஆர்வமுள்ளவர்களால் கடத்தப்பட்டுள்ளது என்றும் திக்விஜயா சிங் கூறினார். "இந்த முழக்கம் உண்மையில் 'ஜெய் ஸ்ரீ ராம்' ஆக இருக்க வேண்டும். ராமர் என்ற பெயரில் கோஷத்தை எழுப்பும் போது, நாம் ஏன் சீதாவை மறக்கிறோம்?" என்று சாதுக்கள் ஜெய் சியா ராம் முழக்கத்தை எழுப்பிய போது திக்விஜயா சிங் கூறினார்.

இந்நிகழ்ச்சியை மாநில ஆன்மீகத் துறை ஏற்பாடு செய்ததோடு, நர்மதா மண்டகினி அறக்கட்டளைத் தலைவர் கம்ப்யூட்டர் பாபா தலைமையில் மாநிலம் முழுவதும் உள்ள புனிதர்கள் பங்கேற்றனர். கம்ப்யூட்டர் பாபா, சாதுக்கள் சார்பாக, அரசு நிலங்களை நிரந்தரமாக ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பினார்.

கோயில்களுக்கும் இலவச மின்சாரம் வழங்கப்பட வேண்டும், புனிதர்களுக்கு முதியோர் ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும் ”என்று கம்ப்யூட்டர் பாபா கூறினார். 

 

Trending News