கர்நாடக வெள்ள பாதிப்புகுறித்து மாநில முதல்வரிடம் கேட்டறிந்ததாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்!
கார்நாடக மாநிலத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக மாநிலத்தின் மங்களூரு, குடகு, மைசூரு, உத்தர் கன்னடா ஆகிய மாவட்ங்களில் சுமார் 1500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வெள்ளத்தில் சிக்கி தவித்து வருகின்றனர்.
ராணுவ வீரர்களின் உதவியுடன் மீட்பு பணி தீவிரமாக நடைப்பெற்று வருகிறது, எனினும் குறைந்த வெளிச்சம் காரணமாகவும், வானிலை மேகமூட்டம் காரணமாகவும் மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.
கர்நாடக மாநிலம் குடகில் மட்டும் இதுவரை 8 பேர் மழைக்கு பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பலியானவர்களின் குடும்பத்திற்கு தலா 6 லட்சமும், மழையால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டத்திற்கு ரூ.200 கோடி நிவராண நிதியாகவும் முதல்வர் அறிவித்துள்ளார்.
948 மீட்பு படை வீரர்களின் உதவியோடு இதுவரை 1250 பேர் மீட்கப்பட்டு 30-க்கும் மேற்பட்ட முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Spoke to Karnataka CM Shri @hd_kumaraswamy Ji regarding the flood situation in parts of the state. Extended all possible support in the rescue and relief operations. I pray for the safety and well-being of those in the flood affected areas. @CMofKarnataka
— Narendra Modi (@narendramodi) August 19, 2018
இந்நிலையில் தற்போது கர்நாட முதல்வர் HD குமாரசாமி அவரகளிடம் தொலைபேசி வாயிலாக கேட்டு அறிந்ததாகவும், வெள்ள நிவாரண பணிகளுக்கு தேவையான உதவிகளை முடிந்தவரை செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் கர்நாடக வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக பிராத்திப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்!