குஜராத்தில் தனது தாயிடம் ஆசி பெற்றார் பிரதமர் மோடி!!

குஜராத்தில் காந்தி நகரில் தனது தாயிடம் ஆசி பெற்றார் பிரதமர் நரேந்திர மோடி!!

Last Updated : Apr 23, 2019, 08:23 AM IST
குஜராத்தில் தனது தாயிடம் ஆசி பெற்றார் பிரதமர் மோடி!!

குஜராத்தில் காந்தி நகரில் தனது தாயிடம் ஆசி பெற்றார் பிரதமர் நரேந்திர மோடி!!

மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இதுவரை 2 கட்டங்களாக 186 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. இந்நிலையில் 3-ஆவது கட்டமாக 13 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 116 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் அகமதாபாத்தில் உள்ள வாக்குச்சாவடியில் பிரதமர் மோடி இன்னும் சற்று நேரத்தில் தனது வாக்கினை பதிவு செய்ய உள்ளார். அதற்கு முன்னதாக குஜராத் காந்திநகரில் உள்ள தனது தாயின் இல்லத்திற்கு வந்தடைந்த பிரதமர் மோடி, அவரிடம் ஆசி பெற்றார். அப்போது வீட்டின் முன் கூடியிருந்த மக்களையும் பிரதமர் மோடி சந்தித்தார்.

உத்தரப் பிரதேச மாநிலம், வாரணாசியில் போட்டியிடும் பிரதமர், அகமதாபாத்தில் தனது வாக்கை பதிவு செய்ய உள்ளார். முன்னதாக,  வாக்களிப்பது  நம் ஒவ்வொருவரின் தலையாய கடமை. நாட்டு மக்கள் அனைவரும் தேர்தலில் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

More Stories

Trending News