இடஒதுக்கீடு முடிவுக்கு வருகிறதா? உச்சநீதிமன்ற தீர்ப்பும் பரபரப்பும் -முழு விவரம்

அரசு பதவி உயர்வில் இடஒதுக்கீடு: உச்சநீதிமன்ற தீர்ப்பபால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. முழு விவரத்தையும் புரிந்து கொள்ளுவோம். அது எங்கே, ஏன் தொடங்கியது என்று பார்ப்போம்.

Last Updated : Feb 10, 2020, 07:09 PM IST
இடஒதுக்கீடு முடிவுக்கு வருகிறதா? உச்சநீதிமன்ற தீர்ப்பும் பரபரப்பும் -முழு விவரம் title=

புது தில்லி: அரசு பதவி உயர்வு வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு தொடர்பான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மேற்கோளிட்டு மத்திய அரசை காங்கிரஸ் குறிவைத்துள்ளது. கட்சியின் முன்னணித் தலைவர் ராகுல் காந்தி உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை பாஜகவுடனும், இடஒதுக்கீடு குறித்த ஆர்எஸ்எஸ் சிந்தனையுடனும் இணைத்து, இடஒதுக்கீட்டை ஒழிக்க பாஜக-ஆர்எஸ்எஸ் முயற்சிப்பதாகக் கூறினார். மேலும் இடஒதுக்கீடு விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாட்டை கண்டித்து நாடுதழுவிய போராட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் அறிவித்துள்ளது. 

மறுபுறம், பாராளுமன்ற விவகார அமைச்சர் பிரஹலாத் ஜோஷி மற்றும் பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் ஆகியோர் உத்தரகண்ட் அரசு 2012 ல் இடஒதுக்கீடு இல்லாமல் காலியாக உள்ள அரசு பதவிகளை நியமிக்க அறிவிப்பு வெளியிட்டது. ஆனால் அது உயர் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது என்றும் கூறினார். அதாவது மாநில அரசின் அறிவிப்பு உயர் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது. இதனையடுத்து உத்தரகண்ட் மாநில அரசு, உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. 

அந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், அரசு வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற எந்த கட்டாயமும் மாநில அரசுக்கு இல்லை. அதேபோல எந்த தனிநபரும் பதவி உயர்வில் இட ஒதுக்கீடு கோருவதற்கு எந்த அடிப்படை உரிமையும் இல்லை. வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று மாநில அரசுக்கு நீதிமன்றமும் உத்தரவிட முடியாது. வேலைவாய்ப்பு மற்றும் பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்க வேண்டுமா அல்லது கூடாதா என்பதை முடிவு செய்வதில் ஒரு மாநில அரசுக்கே முழுமையான அதிகாரம் இருக்கிறது. அதேநேரத்தில், மாநிலஅரசு இடஒதுக்கீடு கண்டிப்பாக வழங்க வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை. மாநில அரசு விரும்பினால் இடஒதுக்கீடு வழங்கலாம் என உச்ச நீதிமன்றம் கூறியதுடன்,  உத்தரகண்ட் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்தது. 

இத தீர்ப்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அதாவது அனைத்து அரசியல் கட்சிகளும் இந்த தீர்ப்பை மறுபரிசீலினை செய்ய வேண்டும் என்றும், இடஒதுக்கீட்டுக்கு எதிரான உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன.

2012 உத்தரகண்ட் அரசின் அறிவிப்பு:
எஸ்.டி-எஸ்.டி சமூக மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்காமல் மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு பதவிகளையும் நிரப்ப உத்தரவிட்டு உத்தரகண்ட் அரசு 2012 செப்டம்பர் 5 அன்று ஒரு அறிவிப்பை வெளியிட்டது. உத்தரகண்ட் அரசு, அதன் அறிவிப்புகளை வெளியிடும் போது, ​​உத்தரபிரதேச பொது சேவைகள் (பட்டியல் சாதியினர், பட்டியல் பழங்குடியினர் மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு) சட்டம் 1994 இன் பிரிவு 3 (7), கீழ் மாநில அரசு இடஒதுக்கீடு வழங்க அனுமதி கொடுக்க முடியாது என்று கூறியது.

உத்தரகண்ட் அரசின் உத்தரவு எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மனு..
உத்தர்கண்ட் அரசாங்கத்தின் இந்த உத்தரவுக்கு எதிராக வரித்துறையில் உதவி ஆணையராக கியான் சந்த் என்பவர் மாநில அரசின் உத்தரவை ரத்து செய்யக் கோரி மனு தாக்கல் செய்தார். உத்தரகண்ட் உருவாக்கப்பட்ட பின்னர், புதிய மாநிலத்திலும் அரசாங்கம் இந்தச் சட்டத்தை ஏற்றுக்கொண்டுள்ளது. எனவே இடஒதுக்கீடு வழங்க முடியாது என்ற உத்தரகண்ட் அரசின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் மனுவில் கூறப்பட்டு இருந்தது.

உயர்நீதிமன்றத்தில் உத்தரகண்ட் அரசு வாதம்:
உயர்நீதிமன்றத்தில் உத்தரகண்ட் அரசு, உத்தரபிரதேச பொது சேவைகள் (பட்டியல் சாதியினர், பட்டியல் பழங்குடியினர் மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு) சட்டம் 1994 இன் பிரிவு 3 (7) உச்ச நீதிமன்ற உத்தரவு மற்றும் பிரிவு 3 (7) ஜூலை 10, 2012 முதல் முடிவடைந்ததாகக் கருதப்பட்டது. இடஒதுக்கீட்டை உறுதி செய்ய, எஸ்சி-எஸ்டி சமூகத்தைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கையைக் கண்டறிய வேண்டியது அவசியம் என்று உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது என்பதை மேற்கோள் காட்டினர்.

மாநில அரசின் அறிவிப்பை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது:
உத்தரகண்ட் அரசின் அறிவிப்புக்கு எதிரான வழக்கு தொடர்ந்து நடைபெற்று வந்தது. இருதரப்பு வாதங்களை கேட்டு வந்த உயர் நீதிமன்றம், 2019 ஆம் ஆண்டில் உத்தரகண்ட் அரசு 2012 வெளியிட்ட அறிவிப்பை ரத்து செய்தது. உத்தரகண்ட் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரமேஷ் ரங்கநாதன் மற்றும் நீதிபதி என்.எஸ். பிரதான் ஆகியோர் இந்த அறிவிப்பை ரத்து செய்திருந்தனர். அரசியலமைப்பின் 16 (4 ஏ) பிரிவின் கீழ் மாநில அரசு விரும்பினால் சட்டங்களை உருவாக்க முடியும் என்றும் கூறியது.

உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசு மனு தாக்கல்:
உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பால் பல கட்சிகள் பாதிக்கப்பட்டன. மொத்தம் 7 கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் சிறப்பு மனுவை (எஸ்.எல்.பி) தாக்கல் செய்தன. அனைத்து மனுவும் அரசியலமைப்பின் 16 வது பிரிவின் விளக்கம் தொடர்பாக இருந்தது. சட்டப்பிரிவு 16 இன் முக்கிய விதியனா "பொது வேலைவாய்ப்பு விஷயத்தில் வாய்ப்பின் சமத்துவம்" ஆகும். அதாவது, உச்சநீதிமன்றத்தின் பெஞ்ச் செப்டம்பர் 26, 2018 அன்று ஒரு தீர்ப்பை வழங்கியது. அதில் அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பிற்கு எதிராக 16 (4 ஏ) மற்றும் 16 (4 பி) சட்டப்பிரிவுகள் கருதப்படவில்லை. இந்த இரண்டு சட்டப்பிரிரவின் கீழ் பதவி உயர்வு வழங்குவதில் மாநில அரசுகள் முடிவு எடுக்கலாம் என உச்ச நீதிமன்றம் பெஞ்ச் கூறியதையும் நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வந்தனர்.

அரசியலமைப்பின் 16 (4) மற்றும் 16 (4-ஏ) பிரிவுகளில் இது தொடர்பான திட்டங்கள் எதுவும் இல்லை என்றும், இடஒதுக்கீடு என்பது யாருடைய அடிப்படை உரிமையல்ல என்றும் உத்தரகண்ட் அரசு உச்ச நீதிமன்றத்தில் வாதிட்டது. அரசியலமைப்பின் இந்த இரண்டு சட்டப்பிரிவுகளும் எஸ்.சி-எஸ்.டி சமூகத்திற்கு அரசாங்க வேலைகளில் பிரதிநிதித்துவம் கட்டாயம் அளிக்க வேண்டும் என்று கூறப்படவில்லை. தேவைப்பாட்டால் மட்டுமே அவர்களுக்கு மாநில அரசு சட்டத்தை உருவாக்கி கொள்ளலாம் என்ற உத்தரகண்ட் அரசாங்கத்தின் வாதத்தை 2020 பிப்ரவரி 7 அன்று உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. இட ஒதுக்கீடு வழங்க ஒரு சட்டத்தை உருவாக்க முடியும் இதனுடன், உத்தரகண்ட் அரசாங்கத்தின் அறிவிப்புகள் செல்லுபடியாகும் என்று அறிவித்து, 5 செப்டம்பர் 2012 உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.

உச்ச நீதிமன்றம் கூறியது...
உச்சநீதிமன்றம் தனது உத்தரவில், பதவி உயர்வுகளில் இட ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு கட்டாயப்படுத்த முடியாது என்று கூறியுள்ளது. பதவி உயர்வுக்கு இடஒதுக்கீடு கோருவதற்கான அடிப்படை உரிமை யாருக்கும் இல்லை. மாநில அரசு இடஒதுக்கீடு வழங்குவதற்கான வழிமுறைகளை நீதிமன்றத்தால் வெளியிட முடியாது. வேலைவாய்ப்பு மற்றும் பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்க வேண்டுமா அல்லது கூடாதா என்பதை முடிவு செய்வதில் ஒரு மாநில அரசுக்கே முழுமையான அதிகாரம் இருக்கிறது. அதேநேரத்தில், மாநிலஅரசு இடஒதுக்கீடு கண்டிப்பாக வழங்க வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை. மாநில அரசு விரும்பினால் இடஒதுக்கீடு வழங்கலாம் என உச்ச நீதிமன்றம் கூறியதுடன்,  உத்தரகண்ட் உயர்நீதிமன்றத்தின் உத்தரவு தள்ளுபடி செய்து, அந்த உத்தரவு சட்டத்திற்கு எதிரானது எனக் சுப்ரீம்கோர்ட் கூறியது.

உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.

Trending News