பிரான்சில் இருந்து இந்தியா வந்தடைந்தது 3 ரபேல் போர் விமானங்கள்..!!!

கடந்த 2016 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த தனியார் நிறுவனத்திடமிருந்து 36 ரபேல் போர் விமானங்களை வாங்க இந்திய அரசு ஒப்பந்தம் செய்தது. இது தொடர்பாக ₹59 ஆயிரம் கோடி மதிப்பிலான ஒப்பந்தம் கையெழுத்தானது. அதில் இரண்டு கட்டமாக 8 ரபேல் (Rafale) விமானங்கள் ஏற்கனவே இந்தியா வந்து சேர்ந்து விட்டன. அவை குடியரசு தின விழா அணிவகுப்பிலும் வான் சாகசங்கள் நிகழ்த்தின.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jan 28, 2021, 01:20 AM IST
  • கடந்த 2016 ஆம் ஆண்டு பிரான்ஸிடமிருந்து 36 ரபேல் போர் விமானங்களை வாங்க இந்திய அரசு ஒப்பந்தம் செய்தது.
  • ஒப்பந்தத்தின்படி அனைத்து 36 ரபேல் விமானங்களும் 2022 ஆம் ஆண்டுக்குள் இந்தியா வந்தடையும்.
  • அதில் இரண்டு கட்டமாக 8 ரபேல் விமானங்கள் ஏற்கனவே இந்தியா வந்து சேர்ந்து விட்டன.
பிரான்சில் இருந்து இந்தியா வந்தடைந்தது 3 ரபேல் போர் விமானங்கள்..!!! title=

கடந்த 2016 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த தனியார் நிறுவனத்திடமிருந்து 36 ரபேல் போர் விமானங்களை வாங்க இந்திய அரசு ஒப்பந்தம் செய்தது. இது தொடர்பாக ₹59 ஆயிரம் கோடி மதிப்பிலான ஒப்பந்தம் கையெழுத்தானது. அதில் இரண்டு கட்டமாக 8 ரபேல் (Rafale) விமானங்கள் ஏற்கனவே இந்தியா வந்து சேர்ந்து விட்டன. அவை குடியரசு தின விழா அணிவகுப்பிலும் வான் சாகசங்கள் நிகழ்த்தின.

இந்த நிலையில் மூன்றாம் கட்டமாக மேலும் 3 விமானங்கள் பிரான்சில் இருந்து புறப்பட்டு,  இன்று இந்தியா வந்து சேர்ந்தன. சுமார் 7,000 கி.மீ. பயணம் செய்து  இந்தியா வந்துள்ள இந்த விமானங்களில் நடுவானில் எரிபொருளை நிரப்புவதற்காக ஐக்கிய அரபு அமீரக விமானப் படையின் டேங்கர் விமானம் உதவி செய்தது. இதற்கு இந்திய விமான படை, தனது அதிகார பூர்வ டிவிட்டர் கணக்கில் ட்வீட் செய்து நன்றி தெரிவித்துள்ளது.

இந்திய விமான படைக்கு, இந்தியா வந்துள்ள மேலும் 3 ரபேல் (Rafale) விமானங்கள் கூடுதல் வலு சேர்க்கும் என்று பிரான்சில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. பிரான்ஸ் நிறுவனத்திடம் இந்திய அரசு மேற்கொண்டுள்ள ஒப்பந்தத்தின்படி அனைத்து 36  ரபேல் விமானங்களும் 2022 ஆம் ஆண்டுக்குள் இந்தியா வந்தடையும் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ | டிரம்ப் மீதான கண்டன தீர்மானம் வெற்றி பெறுமா.. அரசியல் வல்லுநர்கள் கூறுவது என்ன..!!!

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News