Budget 2024: நீல நிற புடவையில் நிர்மலா சீதாராமன்... உணர்த்துவது என்ன?

Budget 2024, Nirmala Sitharaman Saree: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கலின்போது அணிந்துள்ள புடவையின் நிறம் உணர்த்துவது என்ன என்பதை இதில் காணலாம். 

Written by - Sudharsan G | Last Updated : Feb 1, 2024, 11:54 AM IST
  • நிர்மலா சீதாராமன் இன்று மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
  • இது அவருக்கு தொடர்ச்சியான 6ஆவது பட்ஜெட் உரையாகும்.
  • பட்ஜெட் உரை குறித்து பலத்த எதிர்பார்ப்பு உள்ளது.
Budget 2024: நீல நிற புடவையில் நிர்மலா சீதாராமன்... உணர்த்துவது என்ன? title=

Budget 2024, Nirmala Sitharaman Saree: மத்திய நிதயமைச்சர் நிர்மலா சீதாராமன், பிரதமர் மோடி தலைமையிலான இரண்டாவது ஆட்சிகாலத்தின் கடைசி இடைக்கால பட்ஜெட்டை மக்களவையில் இன்று தாக்கல் செய்தார். குறிப்பாக, நிர்மலா சீதாராமனுக்கு இது தொடர்ச்சியான 6ஆவது பட்ஜெட் உரையாகும். இதற்கு முன் நிதி அமைச்சராக இருந்த போது மன்மோகன் சிங் 6 முறை தொடர்ச்சியாக பட்ஜெட் உரையை ஆற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

முன்னதாக அவர் டெல்லி ராஷ்டிரபதி பவனில் உள்ள குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்து வாழ்த்து பெற்றார். நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உடன் மத்திய இணை அமைச்சர்கள் பகவத் கிஷன்ராவ் கரத் மற்றும் பங்கஜ் சௌத்ரி ஆகியோரும் இருந்தனர். தொடர்ந்து அவர் அங்கிருந்து நாடாளுமன்றத்திற்கு சென்றார். 

பட்ஜெட் தாக்கல் செய்யும் அன்று அரசு தரப்பில் என்ன அறிவிப்புகள் வர உள்ளன, எந்தெந்த திட்டத்திற்கு அதிக நிதி ஒதுக்கப்பட உள்ளன என்பது குறித்தான எதிர்பார்ப்புகள் அதே வேளையில், நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கலுக்கு எப்படி தயாராகியிருக்கிறார் என்பதும் மக்களின் கவனத்தை அதிகம் கவரும். குறிப்பாக, பட்ஜெட் தாக்கலை முன்னிட்டு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அணிந்திருக்கும் உடை கூட, பட்ஜெட் குறித்து குறியீட்டளவில் பல தகவல்களை தெரிவிக்கும் என கூறப்படுகிறது.

மேலும் படிக்க | பிப்ரவரி 12ல் ரிசர்வ் வங்கி குழுவை சந்திக்கும் நிர்மலா சீதாராமன்!

நீல நிறம் உணர்த்துவது என்ன?

குறிப்பாக, அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பட்ஜெட் தாக்கலை முன்னிட்டு, நீலம் மற்றும் கிரீம் நிறத்திலான டஸ்ஸார் வகை புடவையை அணிந்திருக்கிறார். முழுமையாக நீல நிறத்திலான அந்த புடவை முழுவதும் கிரீம் நிற வேலைப்பாடுகள் இடம்பெற்றுள்ளன. நீல நிறம் என்பது நிதானத்திற்கும், அமைதிக்கும் பெயர்பெற்றது. எனவே, இந்த பட்ஜெட்டில் அதிரடியாக இல்லாமல், நிதானமாக இருக்கும் என்பதை குறிப்பதாக உள்ளதாக கூறப்படுகிறது. 

கடந்த முறை சிவப்பு நிறத்திலான உடையை அணிந்திருந்த நிலையில், இந்தாண்டு நீல நிறத்தில் அணிந்துள்ளார். நிர்மலா சீதாராமன், இந்திய உடைகள் தீராத காதல் கொண்டவர் என கூறப்படுகிறது. குறிப்பாக, உள்ளூர் நெசவாளர்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில், பட்ஜெட் தாக்கல் போன்ற பொது நிகழ்ச்சிகளுக்கு கைத்தறி புடவைகளையே நிர்மலா சீதாராமன் அணிவார்.

கடந்தாண்டு...

கர்நாடகாவை சேர்ந்தவரும் மத்திய அமைச்சருமான பிரகலாத் ஜோடி பரிசளித்த கைத்தறி புடவையை நிர்மலா சீதாராமன் கடந்த ஆண்டு பட்ஜெட் தாக்கலின்போது அணிந்திருந்தார். கர்நாடகா தார்வாட் மாவட்டத்தின் நவலகுண்டா என்ற பகுதியில் புகழ்பெற்ற கை வேலைப்பாடுகள் (எம்பிராய்டரி) கொண்ட சிவப்பு இல்கல் வகை புடவையை அவர் அன்று அணிந்திருந்தார். 

நிர்மலா சீதாராமன் எப்போதும் கண்ணுக்கு பளீச்சென்று இருக்காத சற்று மங்கிய நிறத்திலான புடவையை அணிந்திருப்பார், குறிப்பாக கிரீம் நிறம் புடவையை அவர் பல நிகழ்வுகளில் அணிந்திருப்பதை நாம் பார்த்திருப்போம்.

சிவப்பு நிற கவர்

எப்போதும் பட்ஜெட் தாக்கலின்போது அவர் சிவப்பு நிற கவரையும் கையில் வைத்திருப்பார். 2019ஆம் ஆண்டில் 'பாஹி கட்டா' என்ற பட்ஜெட் புத்தகத்துடன் பட்ஜெட்டை தாக்கல் செய்து வந்தார். இது கடந்த 2021ஆம் ஆண்டு கொரோனா தொற்று காலகட்டத்தில், காகிதம் இல்லாத பட்ஜெட்டாக மாற்றம் அடைந்தது. அன்று முதல் அந்த சிவப்பு நிற கவரில் டேப்லெட் இடம்பெற தொடங்கியது. அதனை இன்றும் பார்க்க முடிந்தது.

2019 டூ 2022 வரை 

நிர்மலா சீதாராமன் 2019இல் முதல்முறையாக பட்ஜெட் தாக்கல் செய்தபோது தங்க நிற பாட்ரில் பின்ங் நிற மங்கல்புரி புடைவையை அணிந்திருந்தார். தொடர்ந்து 2020ஆம் ஆண்டில் நீல நிற பார்டரில் முழுமையாக மஞ்சள் நிற பட்டுப் புடவையை நிர்மலா சீதாராமன் அணிந்திருந்தார். 2021ஆம் ஆண்டில் சிவப்பு, வெள்ளை நிறம் கலந்த போச்சம்பள்ளி சேலையை அவர் அணிந்திருந்தார். 2022ஆம் ஆண்டில் சீதாராமன் பழுப்பு நிறத்திலான பொம்காய் புடவையை அணிந்திருந்தார். 

மேலும் படிக்க | Budget 2024: சீனியர் சிட்டிசன்களின் ஆசை நிறைவேறுமா? மீண்டும் 50% வரை தள்ளுபடி கிடைக்குமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News