1947 முதல் 2019 வரை இந்தியப் பிரதமராக பதவி வகித்தவர்களின் பட்டியல்!!

இதுவரை 17 மக்களவை தேர்தல் நடந்து முடிந்துள்ளது. நாடு சுதந்திரம் அடைந்த நாள் முதல் இந்திய பிரதமராக பதவி வகித்தவர்களின் பட்டியலை பார்ப்போம்.

Shiva Murugesan சிவா முருகேசன் | Updated: May 30, 2019, 07:00 PM IST
1947 முதல் 2019 வரை இந்தியப் பிரதமராக பதவி வகித்தவர்களின் பட்டியல்!!
Pic Courtesy : Wki

இந்திய நாடாளுமன்றம் என்பது இந்தியக் குடியரசு நாட்டில் சட்டம் இயற்றும் அதிகாரம் கொண்ட மன்றமாகும். இது மாநிலங்களவை (Rajya Sabha) மற்றும் மக்களவை (Lok Sabha) என்று இரு பகுதிகளைக் கொண்டுள்ளது. இவை இரண்டும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டவை ஆகும்.

மக்களவை எனபது மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படும் 543 உறுப்பினர்களையும் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படும் இரண்டு உறுப்பினர்களையும் கொண்டிருக்கின்றது. மக்களவைக்கு ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடைபெறும். தேர்தலில் அதிக இடங்களை வெல்லும் கட்சி ஆட்சி பொறுப்பில் அமரும். ஆட்சி பொறுப்பில் அமரும் கட்சி, ஒருவரை பிரதமராக நியமிக்கும். 

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை உள்ள கட்சி அல்லது கூட்டணியின் தலைவரை குடியரசுத் தலைவர் பிரதமராக நியமிப்பார். பிரதமரின் ஆலோசனைக்கேற்ப பிற அமைச்சர்களை குடியரசுத் தலைவர் அங்கீகரிப்பார். செயல் அதிகாரம் பிரதமரிடமும் அவரின் தலைமையின் கீழ் இயங்கும் அமைச்சரவையிடமும் இருக்கும்.

இதுவரை 17 மக்களவை தேர்தல் நடந்து முடிந்துள்ளது. கடந்த ஏப்ரல் 11 ஆம் தேதி முதல் மே 19 வரை 17 வது மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடந்து. அதன் வாக்கு எண்ணிக்கை மே 23 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. நடந்த முடிந்த தேர்தலில் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி 353 இடங்களை வென்று மத்தியில் ஆட்சி அமைக்கும் பொறுப்பை பெற்றுள்ளது.

17வது அமைச்சரவை இன்று பதவியேற்க்க உள்ளது. மோடி மீண்டும் பிரதமராக பதவி ஏற்க்க உள்ளார். இந்தநிலையில், நாடு சுதந்திரம் அடைந்த நாள் முதல் இந்திய பிரதமராக பதவி வகித்தவர்களின் பட்டியலை பார்ப்போம்.

இந்திய பிரதமர்கள் பட்டியல்:-

1. ஜவஹர்லால் நேரு (15 ஆகஸ்ட் 1947 - 27 மே 1964)

2. குல்சார்லால் நந்தா (27 மே 1964 - 9 ஜூன் 1964) (11 சனவரி 1966 - 24 சனவரி 1966) 

3. லால் பகதூர் சாஸ்திரி (9 ஜூன் 1964 - 11 ஜனவரி 1966)

4. இந்திரா காந்தி (24 ஜனவரி 1966 - 4 மார்ச் 1977) (14 சனவரி 1980 - 31 அக்டோபர் 1984) 

5. மொரார்ஜி தேசாய் (24 மார்ச் 1977 - 28 ஜூலை 1979)

6. சரண் சிங் (28 ஜூலை 1979 - 14 ஜனவரி 1980)

7. ராஜீவ் காந்தி (31 அக்டோபர் 1984 - 2 டிசம்பர் 1989)

8. விஸ்வநாத் பிரதாப் சிங் (2 டிசம்பர் 1989 - 10 நவம்பர் 1990)

9. சந்திர சேகர் (10 நவம்பர் 1990 - 21 ஜூன் 1991)

10. பி. வி. நரசிம் ராவ் (21 ஜூன் 1991 - 16 மே 1996)

11. அட்டல் பிஹாரி வாஜ்பாயி (16 மே 1996 - 1 ஜூன் 1996) (19 மார்ச் 1998 - 22 மே 2004)

12. எச். டி. தேவே கவுடா (1 ஜூன் 1996 - 21 ஏப்ரல் 1997)

13. இந்தர் குமார் குஜரால் (21 ஏப்ரல் 1997 - 19 மார்ச் 1998)

14. மன்மோகன் சிங் (22 மே 2004 - 26 மே 2014)

15. நரேந்திர மோடி (26 மே 2014 - 30 மே 2019) (மே 31 முதல் அடுத்து ஐந்து வருடம்......)