மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய அப்டேட்: மாறுகிறதா அகவிலைப்படி கணக்கிடும் சூத்திரம்?

7th Pay Commission, DA Hike: அகவிலைப்படி 50 சதவீதத்தை எட்டியவுடன் ஏழாவது ஊதிய குழுவின் பரிந்துரைகளின் படி பலவித மாற்றங்கள் நிகழும். அடுத்த டிஏ ஹைக் ஜூலை 2024 -இல் இருக்கும்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 27, 2024, 06:47 PM IST
  • அகவிலைப்படி எவ்வாறு கணக்கிடப்படுகின்றது?
  • அரசு ஊழியர்களுக்கான சூத்திரம் என்ன?
  • மத்திய பொதுத்துறை ஊழியர்களுக்கான சூத்திரம் என்ன?
மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய அப்டேட்: மாறுகிறதா அகவிலைப்படி கணக்கிடும் சூத்திரம்?

7th Pay Commission, DA Hike: மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை மார்ச் மாதம் மத்திய அரசாங்கம் அதிகரித்து அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. ஊழியர்களுக்கான அகவிலைப்படி நான்கு சதவீதம் அதிகரிக்கும் என்பது சமீபத்தில் வெளிவந்த ஏஐசிபிஐ குறியீட்டின் மூலம் தெளிவாகி உள்ளது

Add Zee News as a Preferred Source

மாதா மாதம் தொழிலாளர் பணியகத்தால் வெளியிடப்படும் தொழில்துறை தொழிலாளர்களுக்கான சமீபத்திய நுகர்வோர் விலை குறியீட்டின் (CPI-IW) அடிப்படையில் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான (Pensioners) அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் தீர்மானிக்கப்படுகின்றன. அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் ஒரு ஆண்டில் இரண்டு முறை அதாவது ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் திருத்தப்படுகின்றன. 

கடந்த ஆண்டின் ஜூலை முதல் டிசம்பர் வரையிலான ஏஐசிபிஐ  குறியீட்டு (AICPI Index) எண்களின் அடிப்படையில் ஜனவரி மாத அகவிலைப்படியும், ஜனவரி முதல் ஜூன் வரையிலான ஏஐசிபிஐ குறியீட்டு எண்களின் அடிப்படையில் ஜூலை மாத அகவிலைப்படியும் தீர்மானிக்கப்படுகின்றன. 2023 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் அகவிலைப்படி நான்கு சதவீதம் அதிகரித்த நிலையில், 2024 ஜனவரி முதலான அகவிலைப்படியிலும் நான்கு சதவீத அதிகரிப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. டிஏ (DA) 4% அதிகரித்தால் மத்திய அரசு ஊழியர்களின் (Central Government Employees) மொத்த அகவிலைப்படி 50 சதவீதமாக உயரும்.

மேலும் படிக்க | Jackpot! இந்த ‘2’ ரூபாய் நோட்டு இருந்தா லட்சங்களில் பணத்தை அள்ளலாம்..!!

அகவிலைப்படி கணக்கீடு (DA Calculation)

அகவிலைப்படி (Dearness Allowance) 50 சதவீதத்தை எட்டியவுடன் ஏழாவது ஊதிய குழுவின் (7th Pay Commission)  பரிந்துரைகளின் படி பலவித மாற்றங்கள் நிகழும். அடுத்த டிஏ ஹைக் (DA Hike) ஜூலை 2024 -இல் இருக்கும். எனினும் இது ஒரு புதிய சூத்திரத்தின் (DA Formula) மூலம் கணக்கிடப்படும் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அகவிலைப்படி 50 சதவீதத்தை எட்டியுடன் அகவிலைப்படியின் தொகை அடிப்படை சம்பளத்துடன் சேர்க்கப்பட்டு அகவிலைப்படி பூஜ்ஜியமாக்கப்படும். அதன் பிறகு ஒவ்வொரு மாதமும் 0%, 1%, 2% என்ற வகையில் அகவிலைப்படி அதிகரிக்கும்.

அகவிலைப்படி எவ்வாறு கணக்கிடப்படுகின்றது?

அரசு ஊழியர்களுக்கான சூத்திரம்:

அகவிலைப்படி= {(அனைத்திந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் சராசரி (அடிப்படை ஆண்டு -2001 =100) கடந்த 12 மாதங்களுக்கு-115.76)/115.76} x 100.

மத்திய பொதுத்துறை ஊழியர்களுக்கான சூத்திரம்:

அகவிலைப்படி= {(அனைத்திந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் சராசரி (அடிப்படை ஆண்டு -2001 =100) கடந்த 3 மாதங்களுக்கு-126.33)/126.33} x 100.

DA Hike: அறிவிப்பு எப்போது?

பொதுவாக ஜனவரி மாத அகவிலைப்படி அதிகரிப்பு பற்றிய அறிவிப்பு மார்ச் மாதத்தில் வருகிறது. இதற்கான துல்லியமான தேதி பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வரவில்லை. கடந்த ஆண்டு ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி அதிகரிப்பு மார்ச் 24 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இந்த ஆண்டும் மார்ச் மாத நடுப்பகுதியில் இந்த அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

அகவிலைப்படி அதிகரிக்கப்பட்டால் அதனால் சுமார் 47.58 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும் 69.76 ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள்.இந்த அறிவிப்பிற்காக ஊழியர்கள் காத்திருக்கிறார்கள்.

மேலும் படிக்க | ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட்நியூஸ்.. இப்படி ஒரு பிளானா? உடனே தெரிஞ்சிக்கோங்க

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News