Astrology: இந்த 5 ராசிக்காரர்களுக்கு சனிக்கிழமை சவாலாக இருக்கும், அதிக கவம் தேவை

சனிக்கிழமைகள் சில ராசிக்காரர்களுக்கு சிக்கல் மிகுந்த நாளாக உள்ளது. சனிக்கிழமைகளில் இந்த ராசிக்காரர்கள் சற்று கவனமாக இருந்து சவால்களை லாவகமாக எதிர்கொள்வது நல்லது.   

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 20, 2021, 06:08 AM IST
Astrology: இந்த 5 ராசிக்காரர்களுக்கு சனிக்கிழமை சவாலாக இருக்கும், அதிக கவம் தேவை   title=

Horoscope November 20, 2021: நட்சத்திரங்கள் தங்கள் தன்மையையும் போக்கையும் மாற்றிக்கொண்டே இருக்கின்றன. இவற்றால் நம் வாழ்விலும் பெரும் தாக்கம் ஏற்படுகின்றது. கிரகங்களின் மாற்றத்தால் ஒவ்வொரு நாளும் நாம் பல்வேறு மாற்றங்களை எதிர்கொள்கிறோம். சில நேரங்களில் நமக்கு பலத்த வெற்றி கிடைக்கிறது. சில நேரங்களில் நமது நேரம் மிக சாதாரணமாக இருக்கிறது.

சனிக்கிழமைகள் சில ராசிக்காரர்களுக்கு சிக்கல் மிகுந்த நாளாக உள்ளது. சனிக்கிழமைகளில் இந்த ராசிக்காரர்கள் சற்று கவனமாக இருந்து சவால்களை லாவகமாக எதிர்கொள்வது நல்லது. சனிக்கிழமை சவாலை எதிர்கொள்ளும்  ராசிகளைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.

ரிஷபம் (Taurus): குடும்ப வாழ்க்கையில் நிலையற்ற தன்மை ஏற்படலாம். உங்கள் பெற்றோருடன் சில கருத்தியல் வேறுபாடுகள் இருக்கும். காதல் விவகாரங்களுக்கு ஏற்ற காலம் இது. பணியிடத்தில் தேவை இல்லாத பேச்சை தவிர்க்கவும். கடின உழைப்பால் மட்டுமே மேலதிகாரிகளை திருப்திப்படுத்த முடியும். நீண்ட பயணத்தை தவிர்ப்பது நல்லது.

ALSO READ: திருவண்ணாமலை தீபம் குறித்த இந்த முக்கியத் தகவல்கள் தெரியுமா?

கன்னி (Virgo): உங்கள் பேச்சில் அதிக அளவில் கவனம் தேவை. உங்கள் கருத்துகள் தவறாக எடுத்துக்கொள்ளப்படலாம். கன்னி ராசிக்காரர்கள் (Virgo) புதிய முயற்சிகளை நன்கு ஆராய்ந்து பின்னர் எடுக்க வேண்டும். உங்கள் வாழ்க்கையை மேம்படுத்தவல்ல செய்திகளை பெறுவீர்கள். எனினும், கன்னி ராசிக்காரர்கள், பொதுவாகவே சனிக்கிழமைகளில் கவனமாக இருப்பது நல்லது.

விருச்சிகம் (Scorpio): நீங்கள் செய்யும் அனைத்து நடவடிக்கைகளிலும் வெற்றி காண்பீர்கள். ஆனால், அந்த வெற்றிகளை தக்க வைத்துக்கொள்ள மிகவும் கவனத்துடன் செயல்பட வேண்டும். சனிக்கிழமைகளில் மேற்கொள்ளும் பிரயாணங்களிலும், தொடங்கும் புதிய முயற்சிகளிலும் அதிக கவனம் தேவை. விருச்சிக (Scorpio) ராசிக்காரர்கள் புதிய நண்பர்களை ஜாக்கிரதையாக தேர்ந்தெடுப்பது நல்லது. அலைச்சல், உடல் சோர்வு நிறைந்த நாளாக இருக்கலாம்.

மகரம் (Capricorn): சனிக்கிழமைகள் பொதுவாக மகர ராசிக்காரர்களுக்கு (Capricorn) கலவையான பலன்களைக் கொண்ட நாளாக இருக்கும். தேவையற்ற சிக்கல்களில் சிக்கிகொள்ளும் வாய்ப்பு உள்ளது. வீண் அலைச்சல், வாக்குவாதம், சண்டை சச்சரவுகளுக்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. தேவை இல்லாத இடங்களில் பேச்சைத் தவிர்ப்பது நல்லது.

கும்பம் (Aquarius): கும்ப ராசிக்கார்ரகள் பொருளாதார ரீதியாக வளமாக இருப்பீர்கள். மரியாதை மற்றும் புகழ் அதிகரிக்கும். வியாபாரமும் விரிவடையும். உங்கள் கடின உழைப்பு பலன் தரும். ஆனால், இவை அனைத்தும் இருக்கும் போதும் கவனக்குறைவு ஏற்படாமல் பார்த்துக்கொள்வது நல்லது. நீங்கள் செய்யும் சிறிய தவறும் உங்களை பெரிய சிக்கலில் சிக்க வைக்கக்கூடும்.

ALSO READ: சாமுத்திரிகா சாஸ்திரம்: உங்கள் உடலின் ‘இந்த’ பாகங்கள் துடிக்கிறதா; எச்சரிக்கை!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News