அதிக நேரம் அமர்ந்தே வேலை செய்கிறீர்களா?... கவனம் தேவை

நீண்ட நேரம் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு உடல்நலத்த்தில் ஏகப்பட்ட பிரச்னைகள் உருவாகலாம்.

Written by - க. விக்ரம் | Last Updated : Sep 10, 2022, 07:29 PM IST
  • நீண்ட நேரம் அமர்ந்திருப்பதால் பிரச்னைகள் உருவாகின்றன
  • உரிய முறையில் அமராமல் இருந்தால் முதுகு வலியும் உருவாகும்
  • இதனைத் தடுக்க உடல் இயக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்
அதிக நேரம் அமர்ந்தே வேலை செய்கிறீர்களா?... கவனம் தேவை title=

கணினிமயமாகிவிட்ட இந்த உலகத்தில் பெரும்பாலானோர் அமர்ந்துகொண்டே வேலை செய்கிறார்கள். அப்படி அமர்ந்துகொண்டு செய்வது ஒருவகையில் வசதி என பலர் நினைக்கிறார்கள். ஆனால் அப்படி நீண்ட நேரம் அமர்ந்துகொண்டு வேலை செய்தால் உடலுக்கு ஏகப்பட்ட பிரச்னைகள் வருகின்றன. அப்படி வராமல் தடுப்பதற்கு உடல் இயக்க செயல்பாட்டில் நிச்சயம் கவனம் செலுத்த வேண்டும். அலுவலகத்திற்கு வேலைக்கு செல்பவர்கள் பெரும்பாலும் லிஃப்ட்டை பயன்படுத்துவார்கள். தவிர்க்க முடியாத சூழலில் மாடிப்படி ஏறுவதற்குள் மிகவும் சிரமப்பட்டு மூச்சுவிட்டால், உடனே கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். அதிலும் இருக்கையில் சென்று அமர்வதற்குள் உடல் சோர்வாக இருப்பதாக உணர்ந்தால் உஷாராக வேண்டும். ஏனெனில் அது உடல் பலவீனத்திற்கான அறிகுறியாகும். தினமும் வேலைக்கு வருவதற்கு முன்பு உடற்பயிற்சிக்கு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்குங்கள். 

காலையில் அலுவலகம் செல்லும்போது இருக்கும் உற்சாகம், பணி முடிந்து செல்லும்போது நிறைய பேருக்கு இருக்காது. வீடு போய் சேருவதற்குள் சோர்ந்து போய்விடுவார்கள். குறிப்பாக வீட்டுக்கு சென்றதும் உடல் அசதியால், சாப்பிடக்கூட விருப்பமில்லாமல் தூங்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படலாம். நாள் முழுவதும் இருந்த இடத்தை விட்டு எங்கும் நகரவில்லை என்பதுதான் அதற்கு காரணமாகும். 

பெரிதாக நடக்காதவர்கள் எப்போதாவது கழிவறைக்கு சென்று வந்திருப்பார்கள். அப்படி கழிவறைக்கு மட்டும் சென்று வந்துவிட்டு கம்ப்யூட்டர் முன்பு அதிக நேரம் உட்கார்ந்திருப்பது உடலில்ன் ஆற்றலை சேமிக்காது. மாறாக ஆற்றலை அபகரிக்கும். அரை மணி நேரம் அல்லது ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறையாவது சில நிமிடங்கள் எழுந்து நடமாடுவது நல்லது. 

Life Style

அதேபோல் அமரும் முறையிலும் கவனம் செலுத்த வேண்டும். பலர் ஒழுங்காக அமராமல் சாய்ந்தபடி அமர்ந்திருப்பார்கள். அப்படி அமர்ந்திருப்பதால் முதுகிலும் பிரச்னை ஏற்பட்டு தீராத வலியை கொடுக்கலாம்.

நீண்டகாலமாக உட்கார்ந்து வேலை செய்பவர்களுக்கு தசை இயக்கங்களில் குறைபாடு ஏற்படலாம். உடல் இயக்க செயல்பாடு இல்லாமையின் காரணமாக, தசைகள் பலவீனமடைந்து இந்த பாதிப்பு ஏற்படும். உடல் தசைகள்தான் எல்லா இடத்திற்கும் உடலை தூக்கிக்கொண்டு செல்கிறது. தசைகள் உறுதியாகவோ, வலுவாகவோ இல்லாவிட்டால் உடல் பலவீனமடைந்துவிடும்.

மேலும் படிக்க | 50 வயது ஆகிவிட்டதா? இந்த உணவுகளை தவறாமல் எடுத்துக்கொள்ளுங்கள்!

ஆரம்பக்கட்ட அறிகுறியாக சோர்வு தோன்றும். பின்னர் பல்வேறு நோய் பாதிப்புகளை எதிர்கொள்ள நேரிடும். ஆதலால் தசைகளுக்கு போதிய பயிற்சி அளிக்க வேண்டியது அவசியம். எனவே அமர்ந்து வேலை செய்பவர்கள் நிச்சயம் உடலை இயக்கத்தில் வைத்திருக்க வேண்டியது அத்தியாவசியமான ஒன்றாகும்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News