மழைக்காலத்தில் தொற்றுநோய்கள் அதிகம் ஏற்படும். அதுமட்டுமல்லாமல் சளி உள்ளிட்ட உடல்நலப்பிரச்சனைகளும் அதிகம் ஏற்படும் காலமாக இருப்பதால் வீட்டில் இருக்கும் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரையும் அதீத அக்கறையோடு கவனித்துக் கொள்ள வேண்டும். அவர்கள் சாப்பிடும் உணவிலும் கட்டாயம் கவனம் செலுத்த வேண்டும்.
பொதுவாக கீரை உள்ளிட்ட உணவுகள் மழைக்காலத்தில அதிக சாப்பிட வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துவார்கள். ஏனென்றால், அதில் இருக்கும் நார்ச்சத்துகள், ஆன்டிஆக்ஸிடன்டுகள் உள்ளிட்டவை உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை கொடுத்து, தொற்றுநோய்களின் பாதிப்பில் சிக்காமல் பாதுகாக்கும் அருமருந்து உணவுகள். இது உண்மை என்றாலும் கூட, கீரைகள் மற்றும் இலைக் காய்கறிகளினால் பாதிப்பும் இருக்கிறது.
மேலும் படிக்க | குளிர்காலத்தில் தயிர் சாப்பிடலாமா? மருத்துவர்களின் அறிவுரை!
இலைக்காய்கறிகள் மற்றும் கீரைகள் ஆகியவற்றில் மழைக்காலங்களில் பாக்டீரியா, உடலுக்கு தீங்குவிளைவிக்கும் தொற்று நுண்ணுயிரிகள் இருக்க வாய்ப்புகள் உள்ளது, அதுவும் சுகாதாரமற்ற இடங்களில் வளரும் காய்கறிகள், கீரைகளில் நிச்சயம் இருக்கும். இதனால் இந்த காய்கறிகள் மற்றும் கீரைகளை தவிர்ப்பது மட்டுமே நல்லது. ஒருவேளை அவற்றை எப்படி கண்டுபிடிப்பது? என்ற கேள்வி உங்கள் மனதில் எழலாம். இத்தகைய தருணத்தில், இலைக் காய்கறிகள் மற்றும் கீரைகளை சுத்தமாக கழுவி பயன்படுத்த வேண்டும். அவற்றை நன்கு சமைத்த பின்னர் சாப்பிடுவது மட்டுமே சிறந்தது.
மழைக்காலத்தில் தொற்றுகள் எப்படி வேண்டுமானாலும் பரவலாம். கண்ணுக்கு அவை தெரியாது என்பதால், அனைவரும் மிகவும் கவனமுடனும் முன்னெச்சரிக்கையாகவும் இருப்பது அவசியம். இல்லையென்றால் தேவையில்லாமல் தொற்றுநோய்களுக்கு ஆளாகி, உடல்நல பாதிப்புகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
மேலும் படிக்க | முள்ளங்கி இலை: சிறுநீரக கல் முதல் மூலநோய் வரை, பல பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வு
மேலும் படிக்க | Mandous Cyclone: மாண்டஸ் புயலால் வீட்டை இழந்து தவிக்கும் புதுச்சேரி மக்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://app