கிழிந்துபோன ரூபாய் நோட்டு உங்க கிட்ட இருக்கா? புதிய அப்டேட் தந்த ரிசர்வ் வங்கி

How To Exchange Torned Rupee Notes: உங்களிடம் சேதடைந்த ரூபாய் நோட்டு இருந்தால், அதை எப்படி மாற்றிக்கொள்வது?, அதற்கு நீங்கள் செய்ய வேண்டியவை என்ன? என்பதை தெரிந்துக்கொள்வோம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Dec 11, 2023, 10:00 AM IST
  • சேதமடைந்த பணமாக ரிசர்வ் வங்கி எடுத்துக்கொள்ளும்.
  • எந்த வகையான நோட்டுகள் கிழிந்த நோட்டுகளாக்கும்?
  • 500 ரூபாய் நோட்டுக்கு என்ன விதி?
கிழிந்துபோன ரூபாய் நோட்டு உங்க கிட்ட இருக்கா?  புதிய அப்டேட் தந்த ரிசர்வ் வங்கி title=

ரிசர்வ் வங்கி முக்கிய அப்டேட்: டிஜிட்டல் பரிவர்த்தனை இந்தியாவில், வளர்ந்து வந்தாலும் பல இடங்களில் இன்னும், பண நோட்டுகள் வழங்கி பொருள் வாங்கும், முறை மாற்றமடையவில்லை. அவ்வாறு செலுத்தப்படும் பணம், சேதமடைந்திருந்தால் அதைப் பெற்றுக்கொள்ளப் பலரும் மறுப்பர். ஒருவேளை உங்களிடம் அப்படிப்பட்ட ரூபாய் நோட்டு இருந்தால் அதை எப்படி மாற்றிக் கொள்வது, முழு தொகையும் பெற உங்களுக்கு உரிமை இருக்கிறதா?.. என்பது பற்றி விரிவாகப் பார்க்கலாம்.

பணம் நிர்வாகத்தில் ரிசர்வ் வங்கியின் பங்கு என்ன?
ரிசர்வ் வங்கிதான் மத்திய அரசின் ஆலோசனையின் பெயரில், பணத்தை நிர்வாகம் செய்கிறது. அதேபோல ஒரு பணத்தை வடிவமைப்பதில், அரசின் ஆலோசனை பெற்றுத்தான் செயல்படும். வரிசை எண்களின் அடிப்படையில் ரிசர்வ் வங்கி எவ்வளவு பணம் வேண்டும் என்பதை அச்சகங்களிடம் கோரும். அவற்றை 5 லாக்கர்களில் ரிசர்வ் வங்கி பாதுகாத்து வைத்திருக்கும். பரிசோதித்தபின், வங்கிகள் மூலம் ரிசர்வ் வங்கி புழக்கத்திற்குக் கொண்டுவரும்.

அதேபோல, வங்கிகளிலிருந்து பெறப்பட்ட பழைய ரூபாய் நோட்டுகள், பரிசோதிக்கப்பட்டு அது நல்ல நிலையிலிருந்தால் மீண்டும் வங்கிகள் மூலம் மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்படும். பயன்படுத்த முடியாத நிலையிலிருந்தால், அவற்றைத் தூள் தூளாக்கப்பட்டு அழிக்கப்படும்.

மேலும் படிக்க | இன்னும் கொஞ்ச நாள் மட்டுமே இருக்கு... ஆதார் அட்டையில் உடனே இதை செய்யுங்கள்

சேதமடைந்த ரூபாய் நோட்டுக்கு ரிசர்வ் வங்கி எதைக் கணக்கிடுகிறது?
இந்நிலையில் உங்களிடம் மடங்கியும், வரிசை எண்கள் மங்கியும், எரிந்தும் காணப்படுவது சேதமடைந்த பணத்தாளாக கருதப்படுகிறது. பணத்தாள் இரண்டு துண்டுகளாகி, வரிசை எண் இரண்டிலும் சரியாக இருந்தால் அதை சேதமடைந்த பணமாக ரிசர்வ் வங்கி எடுத்துக்கொள்ளும்.

ஒரு ரூபாய் நோட் கிழிந்திருந்தாலோ, ஒரு பகுதி காணாமல் போயிருந்தாலோ, அது சிதைந்த நோட்டாக மட்டுமே கருதப்படும். அவ்வாறு சிதைந்த நோட்டுகள் எந்த வங்கியிலும் வழங்கப்பட்டு மாற்றலாம். ரிசர்வ் வங்கி விதி 2009 படி, அந்த ரூபாய் நோட்டுக்கான மதிப்பினை பெற்றுக்கொள்ளலாம். எரிந்து, கருகிப்போன, பிரிக்க முடியாத அளவு ஒட்டிக்கொண்ட பணத்தை எந்த வங்கி கிளைகளிலும் பெற்றுக்கொள்ளப்படாது. பணம் வைத்திருப்பவர், அதை ரிசர்வ் வங்கியின் பண வழங்கல் துறைக்குச் சென்று ஒப்படைக்கும்படி அறிவுறுத்தலாம். அங்குப் பரிசீலிக்கப்பட்டுத் தீர்வு காணப்படும்.

அழுக்கடைந்த பணத்தை ஒரு தனிப்பட்ட நபர், ஒரு நாளில் 20 நோட்டுகளை ரூ.5000 வரை மதிப்பு கொண்டதாக இருந்தால் எளிதில் மாற்றிக்கொள்ளலாம். 20 நோட்டுகளுக்கு அதிகமாகவோ, ரூ. 5000-க்கும் அதிகமாகவோ வங்கிகள் மாற்ற முன்வந்தால், அதற்கு ஜூலை 01, 2015 தேதியிட்ட DBR. No. Leg. BC.21/09.07.006/2015-16 சுற்றறிக்கையின்படி ரசீது வழங்கி வங்கிக்கணக்கில் வரவு வைக்கலாம். 

எந்த வகையான நோட்டுகள் கிழிந்த நோட்டுகளாக்கும்?
சவுத் இந்தியன் வங்கியின் பொது மேலாளரும், வங்கிச் செயல்பாட்டுக் குழுமத்தின் தலைவருமான சிவராமன் கே, ரூபாய் நோட்டின் ஒரு பகுதி காணாமல் போயிருந்தாலோ அல்லது இரண்டுக்கும் மேற்பட்ட துண்டுகளால் நோட்டு செய்யப்பட்டாலோ அது கிழிந்த நோட்டு என்று அழைக்கப்படுகிறது என்றார்.

500 ரூபாய் நோட்டுக்கு என்ன விதி?
அதே சமயம் ரூ.500 நோட்டின் நீளம் 15 செ.மீ., அகலம் 6.6 செ.மீ., பரப்பளவு 99 சதுர சென்டிமீட்டர். அப்படியானால், ரூ.500 நோட்டின் அளவு 80 சதுர சென்டிமீட்டராக இருந்தால், முழுத் தொகையும், 40 சதுர சென்டிமீட்டராக இருந்தால் பாதித் தொகையும் திருப்பி அளிக்கப்படும்.

மேலும் படிக்க | ஆன்லைன் மூலம் இலவசமாக கிரெடிட் கார்டு வாங்குவது எப்படி?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News