உடல் எடை குறைக்க டிப்ஸ்: அசிங்கமான தொப்பையை குறைக்க நாம் பல முயற்சிகளை மேற்கொள்ளவோம். அந்த முயற்சிகளில் ஒன்று, டயட் அல்லது உடற்பயிற்சி செய்வது தான். ஆனால், இவை இரண்டும் இல்லாமல் கூட நம்மால் எளிதாக உடல் எடையை குறைக்க முடியும். அது எப்படி என்பதை தெரிந்துக்கொள்வோம்.
வீட்டு சாப்பாடு: நீங்கள் சாப்பிடும் உணவுகளை நீங்களே சமைத்து சாப்பிடுவது சிறந்தது. ஏனெனில் வீட்டில் நாமக்கே சமைத்து சாப்பிட்டால் அளவோடும், ஆரோக்கியமாவும் சாப்பிடுவோம். இதற்கு சரியான ஆரோக்கியமான உணவை சமைக்க கற்றுக்கொள்வது சிறந்தது. விதவிதமாக சமைத்து சாப்பிடுபவர்களுக்கு அதிக ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை எப்படி ருசியாக சமைத்து சாப்பிட வேண்டும் என்பது தெரியும். அதில் காய்கறி, பழங்கள் போன்ற பலவகையான உணவுகளும் அடங்கும். எனவே, உங்களுக்கு தேவையான உனவை நீங்களே சமைத்து சாப்பிட்டால் எவ்வளவு சாப்பிடுகிறீர்கள் என்பதற்கான அளவையும் அறிந்து கொள்வீர்கள்.
மேலும் படிக்க | வேகமாக உடல் எடையை குறைக்கும் ரகசியம்: இந்த உணவுகளை ஊறவைத்து சாப்பிடுங்க
புரத சத்துக்கள்: உடல் எடை குறைக்க முடிந்த வரை புரதம் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ளலாம், ஏனெனில் புரதம் நிறைந்த உணவுகள் கொண்டால் நீண்ட நேரத்திற்கு பசி எடுக்காமல் இருக்கும். இது, உங்கள் உடலுக்கு ஆற்றல் அளிக்கும் சத்துக்களையும் அதிகரிக்கும். இதற்கும், டயட்டில் இருப்பதற்கும் பெரிய வித்தியாசம் இல்லை என்றாலும், டயட்டில் இருக்கும் போது உங்களுக்கு பசி ஏற்படும் அளவிற்கு புரதம் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொண்டால் ஏற்படாது.
போதுமான அளவு உறக்கம்: உடல் எடை அதிகமாக இருப்பவர்கள், பெரும்பாலும் இரவில் அதிகம் தூங்காதவர்களாக இருப்பார்கள். இரவில் தாமதமாக தூங்கி, காலையில் சீக்கிரம் எழுந்துக் கொள்பவர்களுக்கும் இது பொருந்தும். இரவில் தூக்கமின்றி தவிப்பது கண்ணுக்கு தெரியாமலே நம் உடலில் பல பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும். எனவே, இரவில் உங்கள் உடலுக்கு தேவையான ஓய்வை எடுத்துக்கொள்வது நன்மை பயக்கும்.
உணவை மென்று சாப்பிட வேண்டும்: எந்த உணவாக இருந்தாலும் சரி அல்லது எந்த அளவில் சாப்பிட்டாலும் சரி அந்த உணவை நன்கு மென்று சாப்பிட கற்றுக்கொள்ளுங்கள். இப்படி நன்கு உணவை மென்று சாப்பிடுவதால் உணவு எளிதில் செரிமானம் ஆகும். இதனால் உடல் எடை கூடாமல் பார்த்துக்கொள்ளலாம்.
தினசரி செயல்பாடுகள்: டயட், உடற்பயிற்சி இல்லாமல் உடல் எடையை குறைக்க விரும்புவோர் தங்களுக்கான வேலைகளை தாங்களே செய்து கொள்ள வேண்டும். இது உங்களுக்கு நல்லொழுக்கத்தை கற்றுக்கொடுக்கும், உங்கள் உடல் ஆற்றலுடன் செயல்படவும் உதவும். இதனால் நீங்கள் நாள் முழுவதும் ஆக்டிவாக இருப்பீர்கள்.
படியை உபயோகிக்வும்: அலுவலகம், வீடு என அனைத்து இடங்களும் முடிந்த வரை லிஃப்ட் அல்லது எலிவேட்டரை உபயோகிப்பாதை விட்டுவிட்டு படியேறி பழகுவது நல்லது. படி ஏறுவது, நம் இதயத்தை பாதுகாக்கும் நல்ல கார்டியோ உடற்பயிற்சியாகவும் பார்க்கப்படுகிறது. எனவே இனி, எங்கு சென்றாலும் முடிந்தவரை லிஃப்ட் அல்லது எலிவேட்டரை பயன்படுத்துவதை விடுத்து படிகளை பயன்படுத்துதல் உடலுக்கு வேலை கொடுக்கும் நல்ல பயிற்சியாக அமையும். இதனால் உடல் எடையும் குறையும்.
மேலும் படிக்க | 2 வாரத்தில் முகம் கண்ணாடி போல் ஜொலிக்க வேண்டுமா, அப்போ இப்படி பண்ணுங்க
(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ