உடல் பருமனை அசால்டாய் குறைக்க ஆலிவ் எண்ணெய் உதவும்: இப்படி யூஸ் பண்ணுங்க!!

Olive Oil For Reducing Obesity: ஆலிவ் எண்ணெயில் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரித்து, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, நம் உடலுக்கு நிறைவான உணர்வை அளிக்கும் பல பண்புகள் உள்ளன.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 23, 2024, 06:56 PM IST
  • ஆலிவ் எண்ணெய் உட்கொள்பவர்களுக்கு அல்சைமர் நோய் குறைவாக வருவதாக ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.
  • இதில் ஆன்டிஆக்ஸிடெண்ட்கள் அதிகமாக உள்ளன.
  • இதனால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.
உடல் பருமனை அசால்டாய் குறைக்க ஆலிவ் எண்ணெய் உதவும்: இப்படி யூஸ் பண்ணுங்க!! title=

Olive Oil For Reducing Obesity: உடல் பருமன் இந்நாட்களில் பலரை பாடாய் படுத்தி வரும் பிரச்சினைகளில் ஒன்றாக உருவெடுத்து வருகிறது. தவறான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவு முறை காரணமாக நாளுக்கு நாள் உடல் பருமனால் (Obesity) பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை அதிகம் ஆகிக்கொண்டிருக்கின்றது. கடந்த சில ஆண்டுகளில் உடனடியாக உண்ணக்கூடிய உணவுகள், அதாவது துரித உணவுகளின் பழக்கம் அதிகமாகி கொண்டு வருகின்றது. இவை எளிதாக கிடைப்பதாலும், இதை செய்ய அதிக நேரம் எடுக்காது என்பதாலும் இவை மிகவும் பிரபலமாகவும் ஆகி வருகின்றன. இவற்றில் சோடியம், கொழுப்பு ஆகியவை மிக அதிகமாக இருப்பதால் இவற்றால் பக்க விளைவுகளும் அதிகமாக ஏற்படுகின்றன. உடல் பருமன் அதிகரிக்க இந்த உணவுகள் மிகப்பெரிய காரணங்களாகின்றன.

உடல் பருமன்

உடல் எடை மிக வேகமாக அதிகரித்து விடுகிறது. ஆனால், இதை குறைப்பது மிகவும் கடினமான ஒரு பணியாக இருக்கின்றது. உடல் எடையை குறைக்க சிலர் ஜிம் செல்கிறார்கள், சிலர் கடினமான உணவு கட்டுப்பாடுகளையும் மேற்கொள்கிறார்கள். ஆனால் அனைவராலும் இவற்றை செய்ய முடிவதில்லை. அப்படி செய்தாலும், அனைவருக்கும் இதனால் தேவையான பலன்கள் கிடைப்பதில்லை. சில இயற்கையான எளிய வழிகளிலும் உடல் பருமனை குறைக்கலாம்.

தொப்பை கொழுப்பு (Belly Fat) பிரச்சினையும் இந்நாட்களில் அதிகமாகி வருகின்றது. தொப்பை பகுதியில் கொழுப்பு சேர்ந்து விட்டால் அதை கரைப்பது மிகவும் கடினமாகும். தொப்பை கொழுப்பை கரைத்து உடல் பருமனை குறைக்கும் (Weight Loss) ஒரு எளிய வழியை பற்றி இந்த பதிவில் காணலாம்

ஆலிவ் எண்ணெய்

ஆலிவ் எண்ணெயில் (Olive Oil) வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரித்து, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, நம் உடலுக்கு நிறைவான உணர்வை அளிக்கும் பல பண்புகள் உள்ளன. இது எடை இழப்புக்கு உதவியாக இருக்கின்றது. தினமும் தங்கள் உணவில் ஆலிவ் வெண்ணையை பயன்படுத்துபவர்களால் வேகமாக உடல் எடையை குறைக்க முடியும் என ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. ஆலிவ் எண்ணெயின் பயன்பாடு இரத்த அழுத்தத்தையும் சீராக்க உதவுகின்றது.

ஆலிவ் எண்ணெய் வயிற்றுக்கு நிறைவான உணர்வை அளிக்கின்றது. இதில் ஆரோக்கியமான கொழுப்புகள் உள்ளன. இது சருமம் மற்றும் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் ஏற்றது.

மேலும் படிக்க | Health Alert: ஹார்ட் அட்டாக் வருவதற்கு ஒரு மாதம் முன்பே வரும் ஹெல்ட் அலர்ட்! கவனமா இருங்க!

ஆலிவ் எண்ணெயில் கலோரிகள் அதிகமாக (High Calorie) இருந்தாலும் அது உடல் எடையை குறைக்க உதவும். ஏனென்றால் ஆலிவ் எண்ணெயில் இருக்கும் அதிக கலோரி நாள் முழுவதும் வயிற்றுக்கு நிறைவான உணர்வை அளிக்கின்றது. இது நம் உடல் ஆற்றலுக்கும் தேவையான ஊக்கத்தை அளிக்கின்றது. இதன் காரணமாக நாம் ஆரோக்கியமற்ற, தேவையற்ற உணவுகளை உட்கொள்வது தவிர்க்கப்படுகின்றது. ஆலிவ் எண்ணெயை உட்கொண்டால் துரித உணவுகள், இனிப்புகள் மற்றும் எண்ணை பதார்த்தங்களை உண்ண வேண்டும் என்ற ஏக்கமும் குறைகிறது. இது தொப்பை கொழுப்பை குறைத்து உடல் எடையை குறைப்பதில் வெகுவாக உதவும்.

ஆலிவ் எண்ணெயில் கலோரிகள் அதிகமாக இருந்தாலும் ஆரோக்கியமற்ற கொழுப்புகள் இல்லை. எனினும், அளவுக்கு அதிகமாக இதை உட்கொள்ளக் கூடாது. தேவையான அளவிற்கு அதிகமாக இதை பயன்படுத்தினால் அது உடல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கலாம்.

ஆலிவ் எண்ணெயால் உடலுக்கு ஏற்படும் பிற நன்மைகள்:

- இதில் ஆன்டிஆக்ஸிடெண்ட்கள் அதிகமாக உள்ளன. இதனால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது

- ஆலிவ் எண்ணெய் உட்கொள்பவர்களுக்கு அல்சைமர் நோய் குறைவாக வருவதாக ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது

- இதய பாதுகாப்பிற்கு நல்லது

- ஆலிவ் எண்ணெய் செரிமானத்தை சீராக்குகின்றது

(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | 40 வயசு பெண்ணா? 20 வயசு அழகியா மாற இந்த கால்சியம் உணவுகளை சேர்த்துக்கோங்க!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News