மே 2022 மாத ராசி பலன்: தனுசு முதல் முதல் மீனம் வரை

மே மாதம் சில ராசிக்காரர்களுக்கு சில விஷயங்களில் திடீர் ஆதாயம் கிடைக்கும். இருப்பினும், வெற்றியைப் பெற கடினமாக உழைக்க வேண்டியிருக்கும்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 30, 2022, 05:36 PM IST
மே 2022 மாத ராசி பலன்: தனுசு முதல் முதல் மீனம் வரை title=

மே 2022 மாத ராசி பலன்கள்:

தனுசு - இந்த மாதம் அதிர்ஷ்டம் உங்களுடன் இருக்கும். உங்கள் தடைபட்ட வேலைகளும் விரைவாக முடிவடையும். வேலை தேடுபவர்களுக்கு இந்த மாதம் பணியிடத்தில் நல்ல சூழ்நிலை இருக்கும். மேலதிகாரியும் உங்கள் வேலையில் மகிழ்ச்சியாக இருப்பார். வியாபாரக் கண்ணோட்டத்தில் எல்லாம் நன்றாகவே நடக்கும். செல்வம் பெருகும், ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் வருமானம் கிடைக்கும். இளைஞர்களுக்கு தொழில் ரீதியாக நல்ல காலம் இருக்கும். இந்த மாதம் உங்கள் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். நோய்களை எதிர்த்துப் போராடும் திறன் அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். வாழ்க்கைத் துணையைப் புரிந்துகொள்வதில் சில சிக்கல்கள் இருக்கலாம். அதுவும் பிரிவினைக்கு காரணமாக இருக்கலாம்.

மகரம் - இந்த ராசிக்காரர்களுக்கு சில விஷயங்களில் திடீர் ஆதாயம் கிடைக்கும், சில வேலைகளில் தடை ஏற்படலாம். இது டென்ஷனை உண்டாக்கும் ஆனால் மன உளைச்சலுக்கு ஆளாக வேண்டிய அவசியமில்லை. வேலை தேடுபவர்களுக்கு இந்த மாதம் ஏற்ற இறக்கமாக இருக்கும். இந்த மாதம் தொழிலதிபர்களுக்கு நல்லது. புதிய வருமான ஆதாரங்கள் திறக்கும். பழைய மூலங்களிலிருந்தும் வருமானம் வரும். ஆனால் தவறான வழியில் பணம் சம்பாதிக்க நினைக்க வேண்டாம். உங்கள் உடல்நலம் தொடர்பான பிரச்சனைகள் தீரும். ஆனால் ஒருவித காயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. குடும்ப வாழ்க்கையில் சிறிது குழப்பம் ஏற்படலாம். குடும்பத்தில் சில பிரச்சனைகள், சொத்து தகராறு போன்றவை ஏற்படலாம். தாயாரின் உடல்நலம் தொடர்பான பழைய பிரச்சனைகள் வரலாம்.

மேலும் படிக்க | மே 2022 மாத ராசி பலன்: மேஷம் முதல் கடகம் வரை

கும்பம் - இந்த மாதம் உங்களுக்கு நல்ல நேரம் என்பதால் மகிழ்ச்சியாக இருக்கப் போகிறீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற்ற வாய்ப்பு உண்டு, விடாமுயற்சியுடன் செயல்பட வேண்டும். தொழிலதிபர்களுக்கும் இது ஒரு நல்ல நேரம். நீங்கள் நெடு நாட்களாக எதிர்பார்த்த பணத்தைப் பெறலாம்.  இது உங்களுக்கு வணிகத்தில் வெற்றிகரமான நேரம். உடல்நிலை சீராக இருக்கும், பெரிய பிரச்சனை எதுவும் வராது. குடும்ப வாழ்க்கை சாதாரணமாக இருக்கும், ஆனால் நீங்கள் வியாபாரத்தில் வீணாக ஓட வேண்டியிருக்கும். இதன் காரணமாக நீங்கள் குடும்பத்தை விட்டு விலகி இருக்க வேண்டியிருக்கும். இந்த நேரத்தில் மாணவர்களுக்கு வெற்றி கிடைக்கும். தொழில் உயரும்.

மேலும் படிக்க | மே 2022 மாத ராசி பலன்: சிம்மம் முதல் விருச்சிகம் வரை

மீனம் - மீன ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் சிரமங்கள் நிறைந்ததாக இருக்கும். வேலை தேடுபவர்கள் தங்கள் பணியிடத்தில் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். அரசாங்க வேலை வாய்ப்புகள் கூட கிடைக்கும், ஆனால் வெற்றிக்காக ஓடி ஓடி கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். தொழில் ரீதியாக இந்த மாதம் சிறப்பாக இருக்கும். தொழிலதிபர்களுக்கு நிதி நிலைமை மிகவும் நன்றாக இருக்கும், ஆனால் செலவுகள் அதிகமாக இருக்கும். இந்த அதிகரித்த செலவுகளால் நீங்கள் எரிச்சல் அடையலாம். இந்த மாதம் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை சாதாரணமாக இருக்கும். நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குடும்ப வாழ்க்கையில் பிரச்சனைகள் ஏற்படலாம். சில பழைய விஷயங்களில் மனைவியுடன் தகராறு ஏற்படலாம், இதன் காரணமாக உறவில் இடைவெளி ஏற்படலாம்.

மேலும் படிக்க | Solar Eclipse: கிரகணத்தின் போது சூரியனின் அருளைப் பெற செய்ய வேண்டியவை 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News