2.0: மிகுந்த உற்சாகத்தில் சூப்பர்ஸ்டார் ரசிகர்கள்! நவ., 3 சிறப்பு ட்ரீட்!!

ரஜினிகாந்த் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள ’2.0’ படத்தின் டிரெய்லர் வரும் நவம்பர் 3ம் தேதி வெளியிடப்படும் என ஏ.ஆர். ரஹ்மான் அறிவித்துள்ளார். 

Updated: Oct 28, 2018, 02:13 PM IST
2.0: மிகுந்த உற்சாகத்தில் சூப்பர்ஸ்டார் ரசிகர்கள்! நவ., 3 சிறப்பு ட்ரீட்!!

ரஜினிகாந்த் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள ’2.0’ படத்தின் டிரெய்லர் வரும் நவம்பர் 3ம் தேதி வெளியிடப்படும் என ஏ.ஆர். ரஹ்மான் அறிவித்துள்ளார். 

இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில் ரஜினி, எமி ஜாக்சன் நடிப்பில் மிக பிரமாண்டமாக உருவாகி வரும் 2.0 திரைப்படம் வரும் நவம்பவர் 29-ம் நாள் வெளியாகிறது. முன்னதாக இப்படத்தின் பாடல்கள் மற்றும் டீசருக்கு வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. 

நீண்ட நாட்களாக நடைபெற்று வந்த இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.  கடந்த சில வாரங்களுக்கு முன் இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது இந்த படத்தின் டிரெய்லர் தீபாவளி விருந்தாக நவம்பர் 3 ஆம் தேதி வெளியிடப்படும் என ஏ.ஆர். ரஹ்மான் தெரிவித்துள்ளார்.