துலாம் ராசியில் நுழையும் சுக்கிரன்; அமோக வாழ்வைப் பெறும் ‘5’ ராசிகள்!

Venus Transit: வாழ்க்கையில் சகல சௌபாக்ய யோகங்களையும் தரவல்லவர் சுக்கிரன். திருமண பந்தத்துக்கு காரணமானவர் என்பதால் இவருக்கு களத்திர காரகன் என்ற அந்தஸ்தும் உண்டு. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Oct 9, 2022, 03:59 PM IST
  • சுக்கிரனின் இந்த சஞ்சாரம் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும்.
  • திடீர் பண வரவு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. முதலீடுகளில் வருமானம் பெருகும்.
  • சுக்கிரன் கிரக நிலை சுபமாக இருந்தால், வாழ்க்கை அமோகமாக இருக்கும்.
துலாம் ராசியில் நுழையும் சுக்கிரன்; அமோக வாழ்வைப் பெறும் ‘5’ ராசிகள்! title=

ஜோதிட சாஸ்திரத்தில், கிரகங்களின் பெயர்ச்சிகள் ராசி மாற்றங்கள்  ஆகியவை மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.  கிரக மாற்றங்களால் மனித வாழ்க்கையில்  சில சமயங்கள் சுப பலன்களையும், சில சமயங்களில் அசுப பலன்களையும் கொடுக்கின்றன. வாழ்க்கையில் சகல சௌபாக்ய யோகங்களையும் தரவல்லவர் சுக்கிரன். திருமண பந்தத்துக்கு காரணமானவர் என்பதால் இவருக்கு களத்திர காரகன் என்ற அந்தஸ்தும் உண்டு. ஜாதகத்தில் சுக்கிரன் சிறப்பாக அமைந்திருந்தால் செல்வ வளம், வசதிகள், திருமண வாழ்க்கை, ஆற்றல், அழகு மற்றும் காதல் விவகாரங்களில் வெற்றி போன்றவற்றை அடையலாம். சுக்கிரன் ஒருவரது ஜாதகத்தில் நல்ல அம்சங்களுடன் அமைந்தால் எல்லா விதமான சுபசௌபாக்யமும் கிடைக்கும். பருவ வயதில் திருமணம் கூடிவரும். நீங்காத செல்வமும், நிறைவான சந்தோஷமும் கிடைக்கும்.

அத்தகைய சூழ்நிலையில், சுக்ரனின் இந்த ராசி மாற்றம் காரணமாக, அனைத்து ராசிகளின் வாழ்க்கையிலும் ஏதேனு ஒரு வகையில் தாக்கம் காணப்படும். அன்பு, பொருள் மகிழ்ச்சி மற்றும் ஆடம்பரத்திற்கு காரணியான சுக்கிரன் கிரகம் அக்டோபர் 18-ம் தேதி இரவு 9.22 மணிக்கு ராசியை விட்டு துலாம் ராசியில் பிரவேசிக்கப் போகிறார். சுக்கிரனின் இந்த சஞ்சாரம் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். ஜாதகத்தில் சுக்கிரன் கிரக நிலை சுபமாக இருந்தால், அந்த நபருக்கு பொருளும் இன்பமும் கிடைத்து, வாழ்க்கை அமோகமாக இருக்கும் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. சுக்ரனின் இந்த ராசி மாற்றத்தினால் பலன் பெற போகும் ராசிகளை அறிந்து கொள்ளலாம்:

மேஷம்: 

சுக்கிரனின் பெயர்ச்சி காரணமாக, மேஷ ராசிகளுக்கு , செய்யும் காரியங்கள் அனைத்திலும் மகத்தான வெற்றிகள் கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளன. அவர்களின் வருமானம் அதிகரிக்கும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. வாழ்க்கை துணையுடன் உறவு சிறப்பாக இருக்கும். பேச்சுத் திறனால் அனைவரையும் தன் வசப்படுத்துவார்கள்.

மேலும் படிக்க | சௌபாக்கியத்தை அருளும் ‘சுக்ரன்’ கிரகம் வலுவாக இருக்க சில பரிகாரங்கள்

சிம்மம்: 

சிம்ம ராசிக்காரர்களுக்கு அனைத்து வகையிலும் வருமானம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. வாழ்க்கையில் இது வரை இருந்த பதற்றம் நீங்கும். வியாபாரத்தில் பெரிய வெற்றி கிடைக்க வாய்ப்பு உள்ளது. திருமண வாழ்க்கையில் குழந்தை பாக்கியம் உண்டாகும். வருமானம் அதிகரிக்கும். வெளிநாட்டு வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் அதிக லாபம் பெறுவார்கள்.

கன்னி:

துலாம் ராசியில் சுக்கிரன் பெயர்ச்சி ஆகும் நிலையில் கன்னி ராசிக்காரர்களுக்கு வருமானம் அதிகரிக்கும். இந்த நேரத்தில் இந்த ராசிகளுக்கு திடீர் பண வரவு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. முதலீடுகளில் வருமானம் பெருகும். தொழில் மற்றும் வியாபாரத்திற்கு இந்த நேரம் மிகவும் சாதகமாக இருக்கும். ஒவ்வொரு காரியத்திலும் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் உறவினர்களின் உதவி இருக்கும்.

தனுசு:

சுக்கிரனின் சஞ்சாரத்தால் நிதித்துறையில் மகத்தான வெற்றியைப் பெற வாய்ப்பு உள்ளது. வாழ்க்கையில் சந்தோஷமும் நிம்மதியும் இருக்கும். இவர்களின் எல்லா விருப்பங்களும், ஆசைகளும், நோக்கங்களும் நிறைவேறும். பொருள் வசதிகளை முழுமையாக அனுபவிப்பார்கள். பொதுவாக வாழ்க்கையில் வசந்த காலம் ஏற்படும்.

மேலும் படிக்க | ஜாதகத்தில் வியாழன் கிரகம் வலுவாக இருக்க செய்ய வேண்டிய பரிகாரங்கள்

மகரம்:

சுக்கிரனின் சஞ்சாரத்தால் உங்கள் தொழிலில் பெரிய மாற்றம் ஏற்படும். வருமானம் பெருகும். உத்தியோகம், பதவி உயர்வு, உயர்வு கிடைக்க வாய்ப்பு உண்டு. பணியிடத்தில் கடின உழைப்பிற்கு ஏற்ற பலன் கிடைக்கும். குடும்பத்தில் சந்தோஷமும் நிம்மதியும் இருக்கும். குழந்தைகளிடம் இருந்து நால் செய்தி வரும். திடீர் பண வரவு ஏற்படும் வாய்ப்பு உண்டு. 

மேலும் படிக்க | ரிஷப ராசிக்குள் நுழையும் சுக்ரன்; பண மழையில் நனையப் போகும் 3 ராசிக்காரர்கள்

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது. )

மேலும் படிக்க | இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் ஜூன் 14 முதல் ஜொலிக்கும் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News