புதுடெல்லி: உலகில் மொபைல் போன் உற்பத்தியில் ஒரு முக்கியமான மையமாக மாறும் பாதையில் இந்தியா முன்னேறி வருகிறது. உற்பத்தியுடன் இணைந்த ஊக்க திட்டத்தின் கீழ் (production-linked incentive), மொபைல் போன்கள் தயாரிக்கும் 16 சர்வதேச நிறுவனங்களின் உற்பத்தி திட்டங்களுக்கு அரசு ஒப்புதல் அளித்தது.
Samsung, Foxconn Hon Hai, Rising Star, Wistron மற்றும் Pegatron போன்ற நிறுவனங்களின் திட்டங்களும் இதில் அடங்கும். Foxconn Hon Hai, Wistron மற்றும் Pegatron ஆகிய மூன்று நிறுவனக்களுக்கு - ஆப்பிள் ஃபோன்களின் ஒப்பந்த உற்பத்தியாளர்கள்.
உள்நாட்டு மொபைல் பிரிவின் கீழ், லாவா, பகவதி (மைக்ரோமேக்ஸ்), பேட்கேட் எலெக்ட்ரானிக்ஸ், யுடிஎல் நியோலிங்க்ஸ் மற்றும் ஆப்டிமஸ் எலெக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட இந்திய நிறுவனங்களுக்கும் அன்மைச்சகம் ஒப்புதல்களைப் பெற்றுள்ளன.
மேலும் படிக்க | அட.... ஒரு நாள் CM மாதிரி, ஒரு நாள் PM.. எந்த நாட்டில தெரியுமா..!!!
AT&S, Ascent Circuits, Visicon, Walsin, Sahasra, மற்றும் Neolync உள்ளிட்ட மின்னணு பாகங்கள் உற்பத்தி பிரிவின் கீழ் ஆறு நிறுவனங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன.
மொபைல் உற்பத்தி திட்டங்களுக்கு அரசு ஒப்பதல் அளித்துள்ள நிலையில், வரும் ஐந்தாண்டுகளில், ரூ .10.5 லட்சம் கோடி அளவிற்கு உற்பத்தி பெருகும் என்றும் ரூ.6.5 லட்சம் கோடி என்ற அளவில் ஏற்றுமதி இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆப்பிள் (37%) மற்றும் சாம்சங் (22%), என்ற அளவில், மொபைல் போன்களின் உலகளாவிய விற்பனையில், 60% வருவாயைக் கொண்டுள்ளன. மேலும் இந்தத் திட்டம் இந்தியாவில் அவர்களின் உற்பத்தி தளம் விரைவில் உருவாக்கப்படும் என கூறப்படுகிறது,
எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொடர்பு மற்றும் சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், "தயாரிப்புடன் இணைந்த ஊக்கத் திட்டத்திற்கு வெளி நிறுவனங்கள் மற்றும் உள்நாட்டு மொபைல் போன் தயாரிப்பாளர்கள் மற்றும் மின்னணு சாதன உற்பத்தியாளர்கள் ஆகியோரிடமிருந்து ஏராளமான விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன. உலக அளவிலான உற்பத்தி இடமாக இரு க்ளோபல் ஹப் ஆக, இந்தியா முன்னேறி வருகிறது. பிரதமரின் தற்சார்பு பாரதம் என்ற குறிக்கோளின் கீழ் வேகமாக வளர்ச்சி பாதையில் இந்தியா செல்கிறது என்றார்.
மொத்த உற்பத்தியில், மொபைல் போன் (ரூ .15,000 மற்றும் அதற்கு மேற்பட்ட விலை மதிப்பு கொண்ட போன்கள்) பிரிவின் கீழ் ரூ .5,200 கோடிக்கு மேல் உற்பத்தி செய்வதற்கான திட்ட யோசனைகளை நிறுவனங்கள் வழங்கியுள்ளன. மொபைல் போன் (உள்நாட்டு நிறுவனங்கள்) பிரிவின் கீழ் ஒப்புதல் பெற்ற நிறுவங்கள், சுமார் 1,25,000 கோடி ரூபாய் அளவிற்கு உற்பத்தி செய்வதற்கான திட்ட யோசனைகளை வழங்கியுள்ளன.
மேலும் படிக்க | Watch: வானில் சாகசம் நிகழ்த்தி, எதிரிகளுக்கு எச்சரிக்கை விடுத்த ரபேல், தேஜஸ் ...!!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYe