முகப்பரு பிரச்சனையா? கவலை வேண்டாம்! இதை மட்டும் ஃபாலோ பண்ணுங்க..

Pimple Tips: முகப்பரு பிரச்சனை உள்ளோர் அதை தீர்க்க முடியாமல் காலம் காலமாக கவலலைப்பட்டுக்கொண்டு இருக்கின்றனர். கவலை வேண்டாம், இங்கே கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸை உபயோகித்து பயன் பெறுங்கள்.  

Written by - Yuvashree | Last Updated : Jun 1, 2023, 05:25 PM IST
  • முகப்பரு பிரச்சனைக்கு தீர்வு.
  • முகப்பருவை ஒழிப்பதற்கான சில டிப்ஸ்.
  • முகப்பரு வந்தால் தவிர்க்க வேண்டிய சில உணவு பொருட்கள்.
முகப்பரு பிரச்சனையா? கவலை வேண்டாம்! இதை மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. title=

பொதுவாக நிறைய பேர் குறிப்பாக பெண்கள் கூறுவது எப்போதும் முகத்தில் முகப்பரு வந்து கொண்டிருக்கிறது, முகத்தில் என்னை வடிந்துகொண்டே உள்ளது நான் என்ன செய்தாலும் இந்தக முகப்பரு போகவில்லை. அப்படியே போனாலும் மீண்டும் மீண்டும்  முகப்பரு வந்து கொண்டிருக்கிறது இத்துடன்  சில சமயங்களில் கரும்புள்ளிகள்  வருகிறது என பல பெண்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.   

முகப்பரு வருவதற்கான காரணம்…

எப்படியாவது முகப்பருவை முகத்திலிருந்து நீக்க வேண்டும் என்றால் அடிப்படையாக பார்க்க வேண்டிய சில விஷயங்கள் உள்ளது. முகப்பருக்கள் முதலில் வருவதற்கு காரணம் பெரும்பாலும் முகத்தில் உள்ள எண்ணை பசை தான்.  எண்ணெய் பசையில்  ஆளுக்கு, மாசு, தூசி போனற்றவை  சேர்வதால் முகத்தில் முகப்பருக்கள் வருகிறது. அதுமட்டுமின்றி   மன அழுத்தம், தூக்கமின்மை  பருக்கள் வர  முக்கிய காரணமாக உள்ளது. 

பொதுவாக முகத்தை  இங்கு பல நேரங்களில் சரியாக பராமரிப்பதில்லை, இந்த இயந்திர வாழ்வில்  அதற்கு போதுமான   நேரமும் இருப்பதில்லை.  சரியான பராமரிப்பு இல்லை என்றால் கூட  பருக்கள் வர கூடும். முகம் பார்க்க  வெள்ளை, பளபளப்பாக இருந்தாலும் கூட நம் கண்ணுக்கு தெரியாத பல பாக்ட்ரியா, கிருமிகள், மாசுக்கள் முகத்தில் இருக்கும்.  

மேலும் படிக்க | கோடிக்கணக்கில் உயிரிழப்பு... இருந்தாலும் கோடியில் புரளும் சிகரெட் கம்பெனிகள்!

முகப்பருவை எப்படி தடுப்பது? 

முகப்பருவை  குணப்படுத்த, ஒரு நாளைக்கு 2 முறை சரியான pH மதிப்புள்ள சோப் அல்லது FACS wash பயன்படுத்தி  முகத்தை கழுவி கொள்ள வேண்டும். 
இதை தாண்டி முகத்தை குளிர்ந்த நீரில் கழுவி கொள்ளலாம். முடிந்தவரை 
மிகவும் கடினமான  சோப் பயன் படுத்துவதை தவிர்க்கவும்.  

அதிக அளவில் தண்ணீர் குடிப்பது  வருவதை தடுக்கிறது. நீர் சத்து குறையும்போது  தோலில்  எண்ணெய் பசை சுரக்க ஆரம்பமாகிறது.  
முடிந்தவரை பகல் நேரத்தில் வெளிய செல்வதை தரவிக்கவும். அதிகமாக  எண்ணெயில் செய்த உணவுகள் மற்றும்  பதப்படுத்தப்பட்ட  எடுத்துக்கொள்வது   முகப்பருக்கள் வர வழிவகுக்கும். அதனால்  முடிந்த வரை இதுபோன்ற எண்ணெயில் செய்த பதப்படுத்தப்பட்ட உன்ன வேண்டாம்.

முகப்பரு வந்தால் தவிர்க்க வேண்டிய உணவுகள்..

நவீன உணவில் சர்க்கரை பானங்கள் மிக மோசமான உணவு பொருட்களில் ஒன்றாகும். முகப்பரு வரவேண்டாம் என நினைத்தால் கண்டிப்பாக சில உணவுகளை நீங்கள் தவிர்த்தாக வேண்டும். சர்க்கரை பானங்கள் அதிக கொழுப்பு நிறைந்த உணவு பொருட்களுள் ஒன்று. மேலும் அவற்றை அதிக அளவில் குடிப்பதால் கொழுப்பு அதிகரிப்பு மற்றும் உடல் பருமன் ஏற்படலாம். சர்க்கரை அதிக அளவில் உட்கொள்ளும்போது, நீரிழிவு நோய் மற்றும் இதய நோய் உள்ளிட்ட பல்வேறு தீவிர நோய்க்கு அது வழிவக்கும். இது உங்களுக்கு முகப்பரு வருவதற்கும் வழிவகுக்கும். 

பீட்சாக்கள் ஆரோக்கியமற்ற பொருட்களால் தயாரிக்கப்படுகின்றன. இதில் அதிக பதப்படுத்தப்பட்ட மாவு மற்றும் அதிக பதப்படுத்தப்பட்ட இறைச்சி ஆகியவை இருக்கும். பீட்சாவில் கலோரிகள் மிக அதிகமாக இருக்கும். எனவே இதை தவிர்ப்பது நல்லது. எண்ணெயில் பொரிக்கப்பட்ட சிப்ஸ், ஃப்ரெஞ்சு ஃப்ரைஸ் போன்ற உணவுகளை முகப்பரு வராமல் இருக்க சாப்பிடாமல் இருக்க வேண்டும். 

மேலும் படிக்க | 7th Pay Commission மகிழ்ச்சி செய்தி: AICPI எண்களில் ஏற்றம், டிஏ அதிரடியாக அதிகரிக்கும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News