மெர்சல் மாஸ்: 1 கோடி பார்வையாளர்கள் கடந்த ‘ஆளப்போறான் தமிழன்’ பாடல்!!

Last Updated : Sep 9, 2017, 02:02 PM IST
மெர்சல் மாஸ்: 1 கோடி பார்வையாளர்கள் கடந்த ‘ஆளப்போறான் தமிழன்’ பாடல்!! title=

விஜய் நடிக்கும் மெர்சல் படத்தின் ஆளப்போறான் தமிழன் பாடலை 10 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்துள்ளதாக சோனி இசை நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆளப்போறான் தமிழன் பாடல் தமிழர்களின் பெருமையை சொல்லும்படி இருந்ததால் பெரும் வரவேற்பு பெற்றது. மேலும் இந்த பாடல்  வெளியான வாரத்தில் கூகுள் டிரெண்ட்ஸில் வாரம் முதலிடத்தில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் விஜய் 61 படம் மெர்சல். சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன், வடிவேலு, எஸ்.ஜே.சூர்யா, சத்யராஜ், யோகிபாபு உள்ளிட்ட பலர் விஜய்யுடன் நடித்துள்ளார். தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இப்படத்தின் பாடல்கள் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகியுள்ளது.

 

 

Trending News