ஆக்ஷன் கிங் மகளுக்கு கொரோனா தொற்று உறுதி...கவலையில் குடும்பத்தினர்

அதிரடி மன்னர் அர்ஜுனின் மகள் நடிகை ஐஸ்வர்யா அர்ஜுனுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Last Updated : Jul 21, 2020, 11:41 AM IST
ஆக்ஷன் கிங் மகளுக்கு கொரோனா தொற்று உறுதி...கவலையில் குடும்பத்தினர் title=

அதிரடி மன்னர் அர்ஜுனின் மகள் நடிகை ஐஸ்வர்யா அர்ஜுனுக்கு கொரோனா வைரஸ் (Coronavirus) தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

ஐஸ்வரியா அர்ஜூன் இந்தியாவின் தமிழ் நடிகையாவார். இவர் இந்திய நடிகரான அர்ஜூனின் மகளாவார். தமிழ் திரையுலகில் பட்டத்து யானை என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக 2013ல் அறிமுகம் ஆனார். சந்தன் குமார் ஜோடியாக தனது இரண்டாவது படமான சொல்லிவிடவா படத்தில் நடித்தார். இந்தப் படத்தை அர்ஜுன் இயக்கி இருந்தார். இந்தப் படம் பிரேமா பரஹா என்ற தலைப்பில் கன்னடத்திலும் வெளியானது. 

 

ALSO READ | கன்னட நடிகர் துருவா சர்ஜா மற்றும் அவரது மனைவிக்கு கொரோனா பாசிட்டிவ்.....

இந்நிலையில் தற்போது இவர் கொரோனா வைரஸால் பாதிக்கபட்டுள்ளார். இது தொடர்பாக அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில்,

 

சமீபத்தில் எனக்கு கொரோனா வைரஸ் (Coronavirus) தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவக் குழுவினர் அளித்த ஆலோசனையின்படி வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். கடந்த சில நாட்களாக என்னோடு தொடர்பில் இருந்தவர்கள் கொஞ்சம் உங்களை பார்த்துக் கொள்ளுங்கள். எல்லோரும் பாதுகாப்பாக இருங்கள், தயவுசெய்து முகமூடி அணியுங்கள்! அன்புடன், ஐஸ்வர்யா அர்ஜுன்” என்று பதிவிட்டுள்ளார். 

 

ALSO READ | வில்லன் கொரோனாவுடன் மருத்துவமனையில் போராடும் நடிகர் அமிதாப் பச்சன்

ஐஸ்வர்யா அர்ஜுனின் உறவினர் துருவ் சர்ஜா கரோனாவால் பாதிக்கப்பட்ட  சில நாட்களுக்குப் பிறகு ஐஸ்வர்யா அர்ஜூன் குறித்த செய்தி வந்துள்ளது. 5 நாட்களுக்கு முன்பு துருவ் சர்ஜாவும் அவரது மனைவியும் கொரோனா வைரஸ் (Coronavirus) சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 

Trending News