அதிரடியாக வெளியானது Snakes & Ladders திரில்லர் வெப் சீரிஸ் ட்ரைலர்!

பிரைம் வீடியோவில் வெளியிடப்படும் ஸ்னேக்ஸ் & லாடர்ஸ் தமிழ் டார்க்-ஹியூமர் த்ரில்லர் ஸ்னேக்ஸ் & லாடர்ஸ் இந்தியா மற்றும் உலகம் முழுவதும் அக்டோபர் 18 முதல் வெளியிடப்படுகிறது.   

Written by - RK Spark | Last Updated : Oct 9, 2024, 09:18 PM IST
  • பிரைம் வீடியோ ஸ்னேக்ஸ் & லாடர்ஸ்.
  • திரில்லர் வடிவில் வெப் சீரிஸ் உருவாகி உள்ளது.
  • இதன் ட்ரைலர் தற்போது வெளியாகி உள்ளது.
அதிரடியாக வெளியானது Snakes & Ladders திரில்லர் வெப் சீரிஸ் ட்ரைலர்!

இந்தியாவின் மிகவும் அதிகளவில் விரும்பப்படும் பொழுதுபோக்கு தளமான பிரைம் வீடியோ, அதன் தமிழ் ஒரிஜினல் திரில்லர் தொடரான ஸ்னேக்ஸ் & லாடர்ஸ் தொடரின் மனதைக் கவரும் டிரெய்லரை இன்று வெளியிட்டது. கல்யாண் சுப்ரமணியன் (ஒரு ஸ்டோன்பெஞ்ச் புரொடக்‌ஷன்) தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் (Karthik Subbaraj), தொகுத்த இந்த தமிழ் ஒரிஜினல் தொடர் அசோக் வீரப்பன், பரத் முரளீதரன் (Ashok Veerappan, Bharath Muralidharan) மற்றும் கமலா அல்கெமிஸ் இயக்கத்தில், கமலா அல்கெமிஸ் & திவாகர் கமல் (Kamala Alchemis & Dhivakar Kamal) ஆகியோரால் உருவாக்கப்பட்டது. 

Add Zee News as a Preferred Source

மேலும் படிக்க | நெருங்கி வரும் புஷ்பா 2 படத்தின் ரிலீஸ் தேதி! படம் எப்படி வந்துள்ளது?

எதிர் வரவிருக்கும் இந்த டார்க் ஹியூமர் த்ரில்லரில் நவீன் சந்திரா (Naveen Chandra), நந்தா (Nandha), மனோஜ் பாரதிராஜா (Manoj Bharathiraja), முத்துக்குமார் (Muthukumar), ஸ்ரீந்தா(Srinda), ஸ்ரீஜித் ரவி (Sreejith Ravi), சம்ரித் (Samrith), சூர்யா ராகவேஷ்வர் (Surya ragaveshwar), சூர்யகுமார்,(Surya kumar), தருண் மற்றும் சாஷா பரேன் (Tarun and Sasha Bharen) ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் தோன்றி நடித்துள்ளதை பெருமையோடு அறிவிக்கிறது. 2000 ஆண்டு கால மத்தியில் நடைபெறுவதாக அமைக்கப்பட்ட இந்த திரில்லர் கதைக் களம்.. நட்பை அதன் அனைத்து வடிவங்களிலும் கொண்டாடுகிறது. கடினமான வாய்ப்புகளினூடே லாகவமாக செல்லவும், சிக்கலான மர்மங்களை கட்டவிழ்க்கவும், தங்களின் மிக மோசமான தேர்வுகளை எதிர்கொள்ளவும் வலுக்கட்டாயமாக நிர்பந்திக்கப்படும் நான்கு பள்ளி நண்பர்களின் வாழ்க்கைப் பயணத்தை இது பின்தொடருகிறது. 

இந்தியா மற்றும், உலகம் முழுவதும் 240 க்கும் அதிகமான நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் ஸ்னேக்ஸ் & லாடர்ஸ் தமிழிலும் மற்றும் தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் டப் செய்யப்பட்டும் அக்டோபர் 18 முதல் பிரைம் வீடியோவில் பிரத்யேகமாக ஸ்ட்ரீம் செய்யக் கிடைக்கும். இந்த ஒன்பது-எபிசோடுகளைக் கொண்ட த்ரில்லர் பிரைம் மெம்பர்ஷிப்பில் சமீபத்திய சேர்க்கையாகும். இந்தியாவில் உள்ள பிரைம் உறுப்பினர்கள், ஒரு உறுப்பினருக்கான தொகையாக ஆண்டுக்கு ₹1499 மட்டும் செலுத்தி, சேமிப்பு, வசதி மற்றும் அனைத்து பொழுதுபோக்கு அம்சங் களையும் அனுபவித்து மகிழலாம்
நான்கு பள்ளி மாணவ நண்பர்கள் -கில்லி, இறை, சாண்டி மற்றும் பாலா - தங்களின் கவனக்குறைவால் ஒரு புதிரான சூழலில் சிக்கி, அதிலிருந்து விடுபட போராடும் நிகழ்வுகளின் ஒரு பார்வையை.

இந்த டிரெய்லர் காட்சிப்படுத்துகிறது. காவல்துறையினர் மற்றும் ரௌடி கும்பல்களால் துரத்தப்படும் அவர்கள் தப்பிச்செல்லும் பாதையில் ஒரு மர்மமான மற்றும் புத்திசாலித்தனமான கதாபாத்திரம், லியோ (நவீன் சந்திரா) வை சந்திக்க நேரும் போது சற்றும் எதிர்பாராத ஒரு திருப்பம் ஏற்ப்படுகிறது, அவரது கணிக்க முடியாத வித்தியாசமான ஒவ்வொரு செயல்பாடுகளின் போதும், அதிரடி திருப்பங்கள் ஏற்ப்படுகின்றன. இதன் கதாபாத்திரங்கள் அனைவரும் கால அவகாசமின்றி நேரத்திற்கு எதிராக இடைவிடாது ஓடிக்கொண்டிருக்கும் சோக நிகழ்வுகளை நகைச்சுவையாக சித்தரிக்கும் காட்சிகள் நிறைந்த, இந்த த்ரில்லர்… பார்வையாளர்களின் ஆர்வத்தைத் தூண்டி அவர்களின் மனதைக் கட்டிப்போட்டு, இருக்கையின் விளிம்பில் அமரவைக்கும் சாகசங்கள் நிறைந்த ஒன்றாகவும் இருப்பதற்கு உத்திரவாதம் அளிக்கிறது.

நடிகர் நவீன் சந்திரா தனது கதாபாத்திரம் குறித்த தனது நுண்ணறிவை பகிர்ந்து கொண்டு கூறினார், “அதன் எதிர்பாரா திருப்பங்கள், தீவிரமான கதாபாத்திரங்களின் இயக்க ஆற்றல் மற்றும் அடுக்கடுக்காக வெளிப்படும் மர்மங்கள் நிறைந்த கதைக்களத்தைக் கொண்ட இந்தத் தொடர், சாகசம், டிராமா மற்றும் மர்மம் ஆகியவற்றின் சில்லிடவைக்கும் ஒரு அற்புதமான கலவையாகும். அனைவரையும் முழுமையாக கவர்ந்திழுக்கும் என் கதாபாத்திரம் கதைக்கு ஒரு உத்வேகத்தை அளித்து தொடர் முடியும் வரை முழுவதுமாக பார்வையாளர்களை கட்டிப்போட்டுவிடும். விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்கள் இருவர் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்ற இன்ஸ்பெக்டர் ரிஷியின் குறிப்பிடத்தக்க அமோக வெற்றிக்குப் பிறகு, பிரைம் வீடியோவுடன் மீண்டும் இணைந்ததில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். நட்பு, ஆபத்து மற்றும் தன்னை அறிதலின் உணர்வுகள் நிறைந்த ஸ்னேக்ஸ் & லாடர்ஸ் தொடரை அனைவரும் ஆழ்ந்து அனுபவிப்பதை காண நான் ஆவலோடு காத்திருக்கிறேன்!"

மேலும் படிக்க | ரெட் புடவையில் ஜொலிக்கும் நயன்தாராவின் நவராத்திரி கிளிக்!

 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Trending News