பீஸ்ட் vs KGF2: ஏப்ரலில் ரிலீஸ் செய்வதற்கான பின்னணி

பீஸ்ட் மற்றும் கேஜிஎப் 2 என மிகப்பெரிய பட்ஜெட் திரைப்படங்கள் அடுத்த மாதம் ரிலீஸாக உள்ளதால், தியேட்டர்கள் களைகட்ட காத்திருக்கின்றன.

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 18, 2022, 08:18 PM IST
  • பீஸ்ட் ஏப்ரல் 13 ஆம் தேதி ஏன் ரிலீஸாகிறது?
  • விடுமுறையை குறி வைத்திருக்கும் சன்பிக்சர்ஸ்
  • கேஜிஎப் 2 திரைப்படமும் ரிலீஸாக உள்ளது
பீஸ்ட் vs KGF2: ஏப்ரலில் ரிலீஸ் செய்வதற்கான பின்னணி title=

கொரோனா வைரஸ் பரவலால் ஒத்திவைக்கப்பட்ட பெரிய படங்கள் வரிசையாக தியேட்டர்களில் ரிலீஸாகி வருகின்றன. டாக்டர், மாஸ்டர் படங்களில் தொடங்கிய தியேட்டர் திருவிழா, வலிமை வரை களைகட்டியது. இரண்டு மூன்று ஆண்டுகளாக வெறிச்சோடிக் கிடந்த தியேட்டர்கள் ரசிகர்கர்களின் வருகையாலும், பெரிய படங்களின் ரிலீஸாலும் வார வாரம் ஒரு திருவிழாவை தியேட்டர்கள் கொண்டாடிக் கொண்டிருகின்றன.

மேலும் படிக்க | பிரபல தமிழ் நடிகரை மணக்கும் நடிகை நிக்கிகல்ராணி?

கூட்டம் குறையாமல் இருப்பதற்கு முக்கிய காரணம் வாரம் ஒரு மிகப்பெரிய படங்கள் ரிலீஸாகிக் கொண்டே இருக்கின்றன. சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் அண்மையில் தியேட்டரில் ரிலீஸானது. ஓடிடியில் வரிசையாக படத்தை வெளியாகி வந்த சூர்யாவின் திரைப்படம், திடீரென தியேட்டரில் ரிலீஸூக்கு வந்தது, அவரின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது. அடுத்ததாக ஆர்ஆர்ஆர் உள்ளிட்ட படங்கள் திரைக்கு வர காத்திருகின்றன.

அடுத்த மாதத்தில் இரண்டு மிகப்பெரிய படங்கள் தியேட்டரில் ரிலீஸாக உள்ளன. நீண்ட நாட்களாக ரிலீஸூக்கு காத்திருந்த கே.ஜி.எப் 2 திரைப்படம் ஏப்ரல் 14 ஆம் தேதி உலகம் முழுவதும் பல்வேறு மொழிகளில் ரிலீஸாக உள்ளது. யாஷ் நடிப்பில் ஆக்ஷன் பிளாக் பஸ்டராக திரைக்கு வர இருக்கிறது. இந்தப் படத்தை கொண்டாட காத்திருக்கும் ரசிகர்களுக்கு மேலும் ஒரு சர்பிரைஸாக இளைய தளபதி விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கியிருக்கும் ‘பீஸ்ட்’ படம் ஏப்ரல் 13 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. முன்னதாக ஏப்ரல் 14 ஆம் தேதியில் ரிலீஸ் செய்ய சன்பிக்சர்ஸ் முடிவு செய்திருந்தது.

ஆனால், கே.ஜி.எப் 2 ரிலீஸ் செய்யப்படுவதால், வசூலில் பாதிப்பு ஏற்படாமல் இருக்க ஒருநாள் முன்னதாக பீஸ்ட் ரிலீஸ் செய்யப்படுகிறது. இரண்டு படங்களும் ஒரே வாரத்தில் ரிலீஸ் செய்யப்படுவதற்கு முக்கிய காரணம், அந்த வாரத்தில் விடுமுறைகள் அதிகம் இருக்கின்றன. ஏப்ரல் 14 ஆம் தேதி தமிழ் புத்தாண்டு, ஏப்ரல் 15 புனித வெள்ளி, அடுத்ததாக சனி மற்றும் ஞாயிறு விடுமுறை நாட்கள் வருவதால், இந்த விடுமுறை வசூலை அள்ளிவிடலாம் என்ற கணக்கில் இரண்டு மிகப்பெரிய படங்களும் போட்டிப் போட்டுக்கொண்டு ரிலீஸ் செய்யப்படுகின்றன.

மேலும் படிக்க | மாறனை தொடர்ந்து தனுஷின் அடுத்த படம் தியேட்டரா, ஓடிடியா?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News