விஜயுடன் வாரிசு படத்தில் நடித்த விஜய் டிவி பிக்பாஸ் பிரபலம்; படம் குறித்து சுவாரஸ்ய தகவல்

தளபதி விஜயுடன் வாரிசு படத்தில் நடித்த விஜய்டிவி பிக்பாஸ் பிரபலம், படம் குறித்த சுவாரஸ்ய தகவல் ஒன்றை கூறியுள்ளார்.  

Written by - S.Karthikeyan | Last Updated : Oct 19, 2022, 12:27 PM IST
  • விஜய்யின் வாரிசு படத்தின் அப்டேட்
  • விஜய் டிவியில் சொன்ன பிக்பாஸ் பிரபலம்
  • விஜய் ரசிகர்கள் மிக்க மகிழ்ச்சி
விஜயுடன் வாரிசு படத்தில் நடித்த விஜய் டிவி பிக்பாஸ் பிரபலம்; படம் குறித்து சுவாரஸ்ய தகவல் title=

தளபதி விஜய் நடிப்பில் வாரிசு படம் உருவாகிக் கொண்டிருக்கிறது. தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபல்லி இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடித்திருக்கிறார். சரத்குமார், பிரகாஷ் ராஜ், பிரபு உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் நடிக்கும் வாரிசு படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்ற சூட்டிங் விரைவில் முடிவடையபோகிறது. 

மேலும் படிக்க | பிக்பாஸில் ஜிபி முத்துவுக்கு ஒருநாள் சம்பளம்! அமுதவாணன் - ரக்ஷிதாவுக்கு இவ்வளவா?

அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸாகும் இப்படத்தில் முதல் சிங்கிள் வரும் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது. வாரிசு படத்தில் விஜய் டிவி பிக்பாஸ் பிரபலம் சம்யுக்தாவும் நடித்திருக்கிறார். அவர் இப்போது படம் குறித்து சர்பிரைஸான தகவல் ஒன்றை பகிர்ந்திருக்கிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ’ஊ சொல்றியா.. ஊஊ சொல்றியா’ நிகழ்ச்சியில் சிறப்பு போட்டியாளராக கலந்து கொண்டார். அப்போது, வாரிசு படத்தில் நடித்த அனுபவம் குறித்து சம்யுக்தா பகிர்ந்து கொண்டார்.

வாரிசு படத்தில் நடித்து கொண்டிருப்பது குறித்து மாகாபா அவரிடம் கேட்டார். அதற்கு பதில் அளித்த சம்யுக்தா, " மேம் நீங்க ரொம்ப அழகா இருக்கீங்கனு சொன்னார். எனக்கு அது ஒரு சூப்பரான அனுபவம். படம் ரொம்ப பிரம்மாண்டமாக வந்திருக்கிறது. விஜய் சார் ரொம்ப புரொபஷ்னல். 7 மணிக்கெல்லாம் செட்டுக்கு வந்திருவாரு. அவரு டான்ஸ் பன்றதை நேரடியாக பார்க்குற வாய்ப்பு கிடைத்தது. அது வேறலெவல் அனுபவம். அவரு ஒருமுறை டான்ஸ் ஆடி முடிச்சும் மொத்த செட்டும் கைதட்டும்" என வாரிசு படத்தின் அப்டேட்டை கொடுத்திருக்கிறார். சம்யுக்தா கொடுத்த அப்டேட்டால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மேலும் படிக்க | இந்த வாரம் கண்ணீர் கடல்ல மிதக்கப்போகும் பிக்பாஸ் ஹவுஸ்மேட்ஸ்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News