இளையராஜாவாகவே மாறிய தனுஷ்...இணையத்தில் வைரலாகும் AI புகைப்படங்கள்!

Dhanush As Ilaiyaraaja AI Images Latest News : இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிகர் தனுஷ் நடிக்கவுள்ளதை ஒட்டி, அவர் இளையராஜாவாக மாறினால் எப்படியிருக்கும் என்பதை வைத்து ரசிகர்கள் சில AI புகைப்படங்களை உருவாக்கியுள்ளனர்.   

Last Updated : Mar 21, 2024, 02:33 PM IST
  • இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படமாகிறது..
  • தனுஷ் கதாநாயகனாக நடிக்கிறார்
  • அருண் மாத்தேஸ்வரன் படத்தை இயக்குகிறார்
இளையராஜாவாகவே மாறிய தனுஷ்...இணையத்தில் வைரலாகும் AI புகைப்படங்கள்!  title=

Dhanush As Ilaiyaraaja AI Images Latest News : தமிழ் திரையுலகின் ஜாம்பவான் இசையமைப்பாளரான ‘இசைஞானி’ இளையராஜாவிற்கு தற்போது 80 வயதாகிறது. இந்த நிலையில், அவரது வாழ்க்கை வரலாறு படமாக மாற உள்ளது. இதில், நடிகர் தனுஷ் கதாநாயகனாக நடிக்கிறார்.

இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் தனுஷ்..

கோலிவுட் திரையுலகின் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷ், தமிழில் மட்டுமன்றி இந்தி, தெலுங்கு, ஆங்கிலம் என பல்வேறு மாெழி படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்த ஆண்டு, இவர் கைவசம் இருக்கும் படங்கள் மட்டுமே ஏராளம். அப்படி, இவர் நடித்து வரும் படங்களுள் ஒன்று, இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு குறித்த படம். இந்த படத்தில் நடிகர் தனுஷ் இளையராஜாவாக நடிக்க, இதனை அருண் மாத்தேஸ்வரன் இயக்குகிறார். 

அருண் மாத்தேஸ்வரன்-தனுஷ் கூட்டணியில் ஏற்கனவே கேப்டன் மில்லர் படம் உருவாகி கடந்த ஜனவரி மாதம் வெளியான நிலையில், தற்போது இரண்டாவது முறையாக இந்த கூட்டணி கைக்கோர்த்திருக்கிறது.

இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..

ரசிகர்கள், எந்த புதுப்படத்தின் அறிவிப்பு வெளியானாலும் அது குறித்த மீம்ஸ்களையும், ட்ரோல்களையும் ஆரம்பித்து விடுவர். அப்படி, புதிதாக ஆரம்பித்துள்ள ட்ரெண்ட்களில் ஒன்று படத்தில் நடிப்பவர்களின் புகைப்படங்களை வைத்து AI-ல் மறு உருவாக்கம் செய்து புகைப்படத்தை வெளியிடுவது. இது போன்ற ஒரு புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Ilayaraja Biopic

இந்த புகைப்படத்தின் ஒரிஜினல் இளையராஜாவினுடையது. அவரது இளமைக்காலத்தில் எடுக்கப்பட்ட இந்த புகைப்படத்தை தனுஷின் முகத்துடன் மெர்ஜ் செய்து, புதிதாக உருவாக்கி வைரலாக்கி வருகின்றனர், நெட்டிசன்கள். இவை, இணையத்தில் தற்போது ட்ரெண்டிங்கிள் உள்ளது. 

மேலும் படிக்க | இளையராஜா வாழ்க்கை வரலாற்றுத் திரைப்பட துவக்க விழா

படத்தின் ஃபர்ஸ் லுக் குறித்த விமர்சனம்..

இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு குறித்த முதல் போஸ்டர் நேற்று கமல் ஹாசனால் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் தனுஷ், ஜெயராம், இசையமைப்பாளர் இளையராஜா, இயக்குநர் அருண் மாத்தேஸ்வரன் உள்ளிட்ட படக்குழுவினரும் இன்னும் சில பிரபலங்களும் கலந்து கொண்டனர். 

படத்தின் முதல் போஸ்டரில், இளையராஜா வந்த புதிதில் மெட்ராஸ் எப்படியிருந்தது என காண்பிக்கப்பட்டிருந்தது. அதில், 70களில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் தோற்றம் காண்பிக்கப்பட்டிருந்தது. அது மட்டுமன்றி, அப்போதைய மெட்ராஸின் சாலை சேறும் சகதியும் இருப்பது போலவும் காண்பிக்கப்பட்டிருந்தது. இதைத்தான் தற்போது பலர் விமர்சித்து வருகின்றனர். 

ஒரு ரசிகர், “இளையராஜா 70களில் மெட்ராஸிற்கு வந்திருந்த போது சாலை ஒன்றும் சேறும் கதியுமாக இல்லையே…அழகான தார் சாலை போடப்பட்டு விட்டதே..” என்று தெரிவித்திருக்கிறார். இன்னுமொரு ரசிகரோ, “இளையராஜா மெட்ராஸிற்கு தனியாக வரவில்லையே..அவரது சகோதரர்களுடன்தானே வந்தார்..” என்று தெரிவித்திருக்கிறார். இப்படி மாற்றி மாற்றி நேற்று வெளியாகியிருக்கும் போஸ்டரை ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். 

சரியான ஆராய்ச்சி இல்லையா? 

எந்த படம் எடுக்க வேண்டும் என்றாலும் அதற்கு பின்னால் பல நாட்கள் செலவு செய்யப்பட்டு ஆராய்ச்சி செய்ய வேண்டும், அப்பாேதுதான் படத்தின் கதை நேர்த்தியாக இருக்கும் என்பது இயக்குநர்களின் கருத்து. சாதாரண கதைக்கொண்ட படத்திற்கு இந்த நிலை என்றால், ஒருவரது வாழ்க்கை வரலாறு குறித்த படத்தை எடுக்கும் போது அவர்கள் குறித்த கதையில் சின்ன பிசகு இருந்தாலும் பெரிய பிரச்சனை ஆகிவிடும். நேற்று வெளியான முதல் போஸ்டரை பார்த்த ரசிகர்கள் அதை கடுமையாக விமர்சனம் செய்தது மட்டுமல்லாது, படத்தின் இயக்குநர் அருண் மாத்தேஸ்வரன் சரியாக ஆராய்ச்சி செய்யவில்லை என்று கூறி வருகின்றனர். 

மேலும் படிக்க | CWC 5 : குக் வித் கோமாளி 5-ல் புதிய கோமாளி! இவங்கள எதிர்பார்க்கவே இல்லையே!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News