ஆபாசப்பட நடிகருடன் நித்தியானந்தாவை ஒப்பிடுவதா? -சிவசேனா

யோகி பாபு, வருண் நடிப்பில் உருவாகி வரும் பப்பி திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சிவசேனா கட்சியினர், சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளனர்!

Updated: Aug 20, 2019, 09:44 AM IST
ஆபாசப்பட நடிகருடன் நித்தியானந்தாவை ஒப்பிடுவதா? -சிவசேனா
Screengrab

யோகி பாபு, வருண் நடிப்பில் உருவாகி வரும் பப்பி திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சிவசேனா கட்சியினர், சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளனர்!

ஐசரி கணேஷ் தயாரிக்கும் இப்படத்தின் மோஷன் போஸ்டர் கடந்த ஆகஸ்ட் 16 அன்று வெளியிடப்பட்டது, இந்த மோஷன் போஸ்டரில் பிரபல ஆபாச நடிகர் ஜானி சின்ஸ் மற்றும் நித்தியானந்தா புகைப்படங்கள் இடம்பெற்று இருந்தது. மத போதகருக்கு அருகில் ஒரு அபாச பட நடிகரை வைத்து ஒப்பிடுவதா என கூறி, சிவசேனா அமைப்பை சேர்ந்த செல்வம் என்பவர் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார்.

இந்த புகாரில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது., "அமெரிக்காவில் முழு நீல நிர்வாண படங்களில் நடிக்கும் ஜானி சின்ஸ் என்பவரையும், இந்து மத பிரசாரங்கள், போதனைகள் வழங்கும் சுவாமி நித்யானந்தாவையும் இணைத்து பப்பி படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டுள்ளது.

இது இந்துக்கள் மனதை புண்படுத்தும் வகையிலும், இளைஞர் மனதில் வக்கிர எண்ணங்களை ஏற்படுத்தும் விதத்திலும் உள்ளது. சர்ச்சைக்குரிய காட்சிகளை வெளியிட்டுள்ள படக்குழுவினர், இயக்குநர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

நித்யானந்தா இந்து மதம் குறித்த சொற்பொழிவுகளை நடத்தி வருபவர், சமீபத்தில் வெளியான இவரது E=MC^2 சொற்பொழிவு வீடியோ மிகவும் பிரபலமானது. ஜானி சின்ஸுடன் அவரது உருவத்தை ஒப்பிட்டு இருப்பது பல இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தியது மட்டுமல்லாமல், இளைஞர்களின் இதயங்களில் ஆபாச எண்ணங்களை உருவாக்கியிருப்பதாக கூறப்படுகிறது. 

முன்னதாக, கடந்த வெள்ளிக்கிழமை திரைக்கு வந்த ஐசரி கணேஷின் மற்றொரு தயாரிப்பான கோமலி, அதன் ட்ரெய்லரில் இடம்பெற்ற ஒரு வசனம் தொடர்பாக ரஜினிகாந்த் ரசிகர்களிடம் சிக்கல் உண்டானது. பின்னர் தயாரிப்பாளர் அந்த வரியை அகற்ற ஒப்புக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.