தமிழ் சினிமாவில் கவனம் செலுத்தும் கேரள ஹீரோக்கள்!

கேரள ஹீரோக்களுக்கு தமிழகத்தில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. கொரோனா காரணமாக போடப்பட்ட ஊரடங்கும் ஒடிடி தளங்களின் எழுச்சியும் இந்த வரவேற்பை மேலும் அதிகபடுத்தியுள்ளன.  

Written by - ZEE Bureau | Last Updated : Aug 3, 2021, 04:53 PM IST
தமிழ் சினிமாவில் கவனம் செலுத்தும் கேரள ஹீரோக்கள்!

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை வில்லன் வேடங்களில் பெரும்பாலும் மற்ற மாநில மற்றும் பிற மொழிகளின் நடிகர்களை நடிக்க வைப்பது வழக்கமாக உள்ளது.  இது படங்கள் மற்ற மொழிகளில் டப் செய்யப்பட்டு ரிலீஸ் செய்யப்படும் போது அந்த இடங்களில் படம் வெற்றி பெற உதவியாக இருக்கிறது.  

இதேபோல் மற்ற மாநில நடிகர்களும் தமிழ் சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.  தமிழ் படங்கள் அண்டை மாநிலமான கேரளத்தில் நன்றாக வசூல் செய்யக்கூடியவை. அதுவும் குறிப்பாக விஜய், சூர்யா (Surya) படங்கள் கேரளத்தில் உள்ள மாஸ் ஹீரோக்களின் படங்களை காட்டிலும் அதிக வசூல் சாதனை படைக்கின்றன.   

அதேபோல் கேரள ஹீரோக்களுக்கும் தமிழகத்தில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. கொரோனா காரணமாக போடப்பட்ட ஊரடங்கும் ஒடிடி தளங்களின் எழுச்சியும் இந்த வரவேற்பை மேலும் அதிகபடுத்தியுள்ளன.  

தளபதி படம் தொடங்கி தற்போது வரை கேரள  நடிகர்கள் தமிழ் சினிமாவில் முக்கிய பங்காற்றியுள்ளனர்.  

ALSO READ: Nivin Pauly: ராம் இயக்கத்தில் நடிக்கும் நிவின் பாலி

மம்முட்டியின் (Mammootty) மகனான துல்கர் சல்மானின் அனைத்து படங்களும் தமிழிலும் ரிலீஸ் செய்யப்படுகின்றன. நேரடி தமிழ்ப் படங்களில் நடிக்கவும் அதிகம் ஆர்வம் காட்டுகிறார் துல்கர் சல்மான்.  2020 ஆம் ஆண்டு தமிழில் துல்கர் சல்மான் நடித்து வெளியான ’கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ திரைப்படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது.  தற்போது நடன மாஸ்டர் பிரிந்தா இயக்கத்தில் ஹே சினாமிகா என்ற படத்திலும் நடித்து வருகிறார். 

இந்த லாக்டவுனில் அதிகமாக ஒடிடியில் படங்களை ரிலீஸ் செய்தவர் நடிகர் பகத் பாசில். தமிழில் வேலைக்காரன், சூப்பர் டீலக்ஸ் என நேரம் கிடைக்கும் போதெல்லாம் தமிழ் படங்களிலும் கவனம் செலுத்துகிறார்.  தற்போது கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் பகத் பாசில். 

நேரம் படத்தின் மூலம் தமிழக மக்களுக்கு அறிமுகமான நிவின் பாலி (Nivin Pauly),  ரிச்சி என்ற தமிழ் படத்தில் நடித்தார். தற்போது ராம் இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் இவர் நடிக்கும் தமிழ் படத்திற்கான அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. 

ராவணன், மொழி, சத்தம் போடாதே, நினைத்தாலே இனிக்கும் என்று பல தமிழ் படங்களில் நடித்தவர் பிரித்திவிராஜ்.  சமீபகாலத்தில் தமிழ் சினிமாவில் கவனம் செலுத்தாமல் இருந்த இவர் தற்போது மீண்டும் தமிழ் படங்களின் கதைகளை கதை கேட்டு வருகிறார்.

ALSO READ: Pushpa Update: புஷ்பா படத்தின் முக்கிய அப்டேட் இதோ

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News