Actor Rajinikanth PM Narendra Modi : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், வருடா வருடம் இமயமலைக்கு செல்வது வழக்கம். அந்த வகையில், இந்த வருடமும் அவரது பயணம் தொடங்கியிருக்கிறது. இதையடுத்து, அவர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
வேட்டையன் படத்தில் ரஜினிகாந்த்:
டி.ஜே.ஞானவேல் இயக்கும் வேட்டையன் படத்தில் ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்திருக்கிறார். இதில் அவருடன் அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா டகுபதி, துஷாரா விஜயன், மஞ்சு வாரியர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு சில வாரங்களுக்கு முன்பு நிறைவடைந்தது. பெரிய ஸ்டார்கள் நடிக்கும் இந்த படம், பெரிய பட்ஜெட்டில் உருவாகியிருக்கிறது. இப்படம், இந்த ஆண்டின் அக்டோபர் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இமயமலைக்கு கிளம்பினார்..
பொதுவாகவே, அதிக பக்தி நிறைந்த திரையுலக பிரபலங்களுள் ஒருவர் நடிகர் ரஜினிகாந்த். வருடா வருடம் இமயமலைக்கு சென்று அங்குள்ள கோயில்களில் சாமி தரிசனம் செய்வதும், தியானம் செய்வதும் இவரது வழக்கம். இந்த நிலையில், அவர் இன்று இமயமலைக்கு கிளம்பியிருக்கிறார். அப்போது சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.
மோடி குறித்த கேள்வி..
ரஜினிகாந்த், பத்திரிகையாளர்களை சந்தித்த போது அவரிடம், “இந்தியாவிற்கு ஆன்மிகம் எவ்வளவு முக்கியம்?” என கேள்வி கேட்கப்பட்டது அதற்கு அவர், “இந்தியாவிற்கு மட்டுமல்ல, உலகத்திற்கே ஆன்மிகம் முக்கியம்” என்று கூறினார். இதைத்தொடர்ந்து அவரிடம், “தமிழகத்தில் மோடி ஆட்சி அமைப்பாரா?” என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், “நோ பொலிடிகல் கமெண்ட்ஸ்” என்று கூறி “அண்ணா..” என சிரித்துக்கொண்டே கையெடுத்து கும்பிட்டார். இறுதியாக “நல்லா இருங்க..நல்லா இருங்க..” என்று கூறி விட்டு காரில் கிளம்பி சென்றார்.
மேலும் படிக்க | தலைவர் 171 படத்திற்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
ரஜினியும் அரசியலும்..
நடிகர் ரஜினிகாந்த், அரசியலில் பிரவேசிப்பார் என பல ஆண்டுகளாக எதிர்பார்க்கப்பட்டது. தனது படங்களில் அரசியல் வசனங்கள் பேசுவது, தான் அரசியலுக்கு வரப்போவதை மறைமுகமாக கூறுவது போன்ற வேலைகளை செய்து கொண்டிருந்தார். இறுதியில், ஒரு கட்டத்தில் “நான் அரசியலுக்கு வருவது உறுதி..” என்றும் ரசிகர்களை கூட்டி தெரிவித்தார். ஆனால், இந்த நிலைமை சில நாட்களிலேயே தலைகீழாக மாறியது. இவரது ‘ஆன்மிக அரசியல்’ கொள்கைகள் குறித்து பெரிய விவாதங்கள் எழுந்தன. இதனால், இனி தான் அரசியலில் களமிறங்கப்போவது இல்லை என்று கூறிவிட்டார். இவர், பாஜக ஆதரவாளர் என்றும் பேசப்படுகிறது. ஆனால், இது குறித்து வெளிப்படையாக ரஜினிகாந்த் எங்கும் பேசியதில்லை. அரசியல் கேள்விகளுக்கு பதில் கூறி, தான் முன்னர் சந்தித்த பிரச்சனைகளின் காரணமாக, அது போன்ற கேள்விகளை அப்படியே தவிர்த்து வருகிறார், ரஜினி.
அடுத்தடுத்த படங்கள்:
ரஜினிகாந்திற்கு அரசியல் வாழ்க்கைதான் கைக்கொடுக்கவில்லையே தவிர, சினிமா வாழ்க்கை தனது ஏகபோக வரவேற்பினை கொடுத்துக்கொண்டுதான் இருக்கிறது. தற்போது 73 வயதாகும் ரஜினி, முதுமை தன் முகத்தில் தெரியாத அளவிற்கு உடலையும் மனதையும் பத்திரமாக பார்த்துக்கொள்கிறார். வேட்டையன் படத்தை அடுத்து, இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘கூலி’ படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் இவர் ஒரு கேங்ஸ்டராக தோன்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | ஜெயிலர் 2 படத்தில் ரஜினி கேட்ட சம்பளம் எவ்வளவு தெரியுமா? கேட்டா ஆடிப்போவீங்க..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ