சீதா ராமன் அப்டேட்: கல்யாணம் நடக்காது, ஷாக் கொடுத்த மகா.. அவமானப்படும் சத்யன்

தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘சீதா ராமன்’ சீரியல்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Aug 17, 2023, 12:06 PM IST
  • சத்யன் எடுத்து கொடுத்த புடவையை அணிந்து கொண்டு வரும் மீரா.
  • சீதா ஏன் நடக்காது என்ன காரணம்னு சொல்லுங்க என்று கேட்கிறாள்.
  • சீதா ராமன் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.
சீதா ராமன் அப்டேட்: கல்யாணம் நடக்காது, ஷாக் கொடுத்த மகா.. அவமானப்படும் சத்யன் title=

தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘சீதா ராமன்’ சீரியல்.

சீதா ராமன் : இன்றைய எபிசோட்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதாராமன். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சத்யன் கல்யாணத்திற்காக வீட்டிற்கு புடவைகளை கொண்டு வந்து இறக்கிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

ஆபிஸில் இருந்து வீட்டிற்கு வரும் மகாவிடம் காரை உள்ளே விட இடம் இல்லை, பார்க்கிங் புல் என்று சொல்ல மகா கோபப்பட்டு என் வீட்ல என் காரை விட இடம் இல்லையா என்று கோபப்பட்டு செக்யூரிட்டியை அறைகிறாள். பிறகு யார் வந்திருக்கா என்று கேட்க இதை முன்னாடியே கேட்டு நான் பதில் சொல்லி இருந்தா நீங்க சந்தோசப்பட்டு இருப்பீங்க என்று சொல்லி சத்யன் புடவைகளை எடுத்து வந்திருப்பதாக சொல்ல அர்ச்சனா செக்யூரிட்டியை அறைகிறாள். இதனால் செக்யூரிட்டி எனக்கு இந்த வேலையே வேணாம் என்று அங்கிருந்து நகர்கிறான். 

அடுத்ததாக வீட்டிற்குள் சத்யன் எடுத்து கொடுத்த புடவையை அணிந்து கொண்டு மீரா வந்து நிற்க சத்யன் உட்பட எல்லாரும் ஆச்சரியப்பட்டு அழகை புகழ்ந்து தள்ளுகின்றனர். மேலும் சத்யன் மீராவுடன் செல்பி எடுத்து கொண்டிருக்கும் போது வீட்டிற்குள் வரும் மகா இங்க என்ன நடக்குது என்று கோபப்படுகிறாள். சத்யன் புடவை எடுத்து வந்திருப்பதாக சொல்ல இந்த கல்யாணம் நடக்காது என்று சொல்கிறாள். 

சீதா ஏன் நடக்காது என்ன காரணம்னு சொல்லுங்க என்று கேட்க ராமும் அதையே கேட்க மகா ராம் நீ இதுல தலையிடாத என்று சொல்ல சீதா பாஸ் எதுக்கு தலையிட கூடாது என்று கேள்வி கேட்டு மகாவுடன் வாக்குவாதத்தில் ஈடுகிறாள். மகா சத்யனை அவனமானப்படுத்தி விட்டு உள்ளே செல்ல நான் இங்க ஒவ்வொரு முறையும் வரும் போதும் மகா என்னை அவமானப்படுத்தி தான் அனுப்பறாங்க என்று வருத்தப்பட்டு வெளியே கிளம்ப மீராவும் நடந்த சம்பவத்தால் அழ தொடங்க சீதா சமாதானம் செய்ய முயற்சி செய்கிறாள். 

மேலும் படிக்க | ரூ.400 கோடி வசூலை தாண்டிய ஜெயிலர்.. அதுவும் 6 நாளில்

அதனை தொடர்ந்து ரூமுக்குள் சென்று சீதா சுபாஷை மிரட்ட ஏதோ காரணம் கிடைத்திருக்கு, அது என்னனு கண்டுபிடிக்கும் என்று பிளான் போடுகின்றனர். இன்னொரு பக்கம் சுபாஷ் சேதுவை சிங் கெட்டப்பிற்கு மாற்றி சொப்னா வீட்டிற்கு கூட்டி வருகிறான். அங்கு சேது சுபாஷ் மற்றும் சொப்னா சேர்ந்திருக்கும் போட்டோவை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். 

இப்படியான நிலையில் அடுத்தாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சீதா ராமன் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

சீதா ராமன்: சீரியலை எங்கு பார்ப்பது?

சீதா ராமன் சீரியல் 2023 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது. 

மேலும் படிக்க | ஒரு வழியா வெளியான அப்டேட்… அஜித்தின் விடாமுயற்சி குறித்து சூப்பர் தகவல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News