SPB உடல் நலம் குறித்து MGM Healthcare-ன் அறிக்கை!!

எஸ்.பி.பி-யின் உடல் நிலை குறித்து MGM Healthcare சமீபத்திய அறிக்கையை வெளியிட்டுள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 24, 2020, 06:26 PM IST
  • பிரபல பின்னணிப் பாடகர் எஸ்.பி.பி கொரோனாவுக்கு எதிர்மறையாக பரிசோதித்துள்ளதாக தகவல்கள் வந்தன.
  • எஸ்.பி.பி-யின் உடல் நிலை குறித்து சரண் தினமும் மக்களுக்கு தன் வீடியோக்கள் மூலம் தெரியபடுத்துகிறார்.
  • ஆகஸ்ட் 5 ஆம் தேதி எஸ்.பி.பி-யின் COVID-19 சோதனைகள் நேர்மறையாக வந்தன.
SPB உடல் நலம் குறித்து MGM Healthcare-ன் அறிக்கை!! title=

சென்னை: பிரபல பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமண்யம் கொரோனா தொற்றால் (Corona Virus) பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். அவர் வைரஸுக்கு எதிர்மறையாக பரிசோதித்துள்ளதாகவும் தற்போது அவரது உடல்நிலை நல்ல முன்னேற்றத்தைக் கண்டுள்ளதாகவும் காலை முதல் சமூக ஊடகங்களில் பல செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

எனினும், இது குறித்து, எஸ்.பி.பி சிகிச்சைப் பெற்று வரும் மருத்துவமனையோ அல்லது அவரது மகன் எஸ்.பி. சரணோ (SP Charan) எதையும் கூறாமல் இருந்தனர்.

இந்நிலையில், எஸ்பிபி சிகிச்சைப் பெற்று வரும் MGM Healthcare தற்போது அவரது உடல் நிலை குறித்து ஒரு சமீபத்திய அறிக்கையை வெளியிட்டுள்ளது.

No description available.

முன்னதாக, சரண் ஒரு வீடியோவை வெளியிட்டு, வதந்திகளை நம்ப வேண்டாம் என மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

ALSO READ: Video! SPB உடல் நலம் பற்றிய தவறான தகவலை பரப்ப வேண்டாம்: மகன் சரண் கோரிக்கை

எஸ்.பி.பி-யின் உடல் நிலை குறித்து சரண் தினமும் மக்களுக்கு தன் வீடியோக்கள் மூலம் தெரியபடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தற்போது தான் தினமும் மருத்துவர்களுடன் ஆலோசித்த பிறகு எஸ்பிபி குறித்த புதுப்பிப்புகளை பகிர்ந்து கொள்வதாகவும், அதற்கு முன்னர் யாரும் எந்த தவறான, ஊர்ஜிதப்படுத்தப்படாத தகவல்களை பகிர வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஆகஸ்ட் 5 ஆம் தேதி எஸ்.பி. பாலசுப்ரமணியம் (SP Balasubramaniam) அவர்களின் COVID-19 சோதனைகள் நேர்மறையாக வந்தன. அவருக்கு கொரோனா வைரஸின் லேசான அறிகுறிகள் இருந்தன. ஆனால் அவரது நிலை பின்னர் மோசமடைந்தது.

எஸ்பிபி விரைவில் குணமடைய திரைப்பட பிரபலங்கள் உட்பட பலதரப்பட்ட மக்களும் தொடர்ந்து பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறார்கள்.

ALSO READ: 'பாடும் நிலா... எழுந்து வா' SPB-ஐ அழைக்கும் Super Star! ரசிகர்களிடம் பிரார்த்திக்குமாறு வேண்டுகோள்!!

Trending News