அண்ணா சீரியல்: அம்மாவை பார்க்க கிளம்பிய சண்முகம்.. அதிர்ச்சி கொடுத்த வைகுண்டம்

Anna Today's Episode Update: அம்மாவை பார்க்க கிளம்பிய சண்முகம்.. அதிர்ச்சி கொடுத்த வைகுண்டம் - அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்

Written by - Vijaya Lakshmi | Last Updated : Nov 14, 2023, 12:02 PM IST
  • இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா.
  • இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
  • அண்ணா சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
அண்ணா சீரியல்: அம்மாவை பார்க்க கிளம்பிய சண்முகம்.. அதிர்ச்சி கொடுத்த வைகுண்டம் title=

அண்ணா சீரியல் இன்றைய லேடஸ்ட் அப்டேட்: தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘அண்ணா' சீரியல்.

அண்ணா சீரியல் : இன்றைய எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினம்தோறும் இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் சண்முகம் கேரளா செல்வதாக சொல்லிய நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

அதாவது சண்முகம் வெளியே கிளம்புவதை பார்த்த வெட்டுக்கிளி எங்கே என்று விசாரிக்க கேரளா வரை சென்று வருவதாக சொல்ல வைகுண்டம் சூடாமணியை பார்க்க போவதாக நினைத்து சண்முகத்துடன் செல்ல முடிவெடுக்கிறார். 

ஆனால் சண்முகம் கீழக்கரை வரை சென்று வருவதாக சமாளித்து அங்கிருந்து கிளம்ப வைகுண்டம் நீ கேரளா தான் போற எனக்கு தெரியும் நானும் வரேன் என்று சொல்ல சண்முகம் இல்லை என மறுத்துவிட்டு கிளம்பிச் செல்ல வைகுண்டம் அவனுக்கு தெரியாமல் பின் தொடர்ந்து சொல்கிறார்.

மேலும் படிக்க | "தனி மனிதரைப் பற்றி தவறாக பேசினால் செருப்பால் அடிப்பார்கள்" - நடிகை ரோஜா

வீட்டில் ரத்னாவும் பரணியின் வெங்கடேசை சந்திக்க கிளம்புகின்றனர். மறுபக்கம் வெங்கடேஷ் குடும்பத்தோடு ஊரை விட்டு கிளம்ப வழியில் இவர்கள் சந்தித்து விடுவார்களா என பில்டப் எகிற கடைசியில் சந்திக்காமல் வெங்கடேஷ் வீட்டிற்கு வந்து பார்க்க அவர்கள் சொந்த ஊருக்கு சென்று இருப்பதாக அக்கம் பக்கத்தில் உள்ள சரி திரும்பி வந்துருவாங்க என நினைத்து இவர்களும் வீடு திரும்புகின்றனர். 

இங்கே சண்முகம் ஜெயிலுக்கு வந்து சூடாமணியை பார்க்க மனு கொடுத்துவிட்டு திரும்ப அங்கு வைகுண்டம் நிற்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறான். வைகுண்டம் நான் உன் அம்மாவ பார்க்கணும்டா அவள பாத்து 20 வருஷம் ஆயிடுச்சு என கெஞ்சுகிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

அண்ணா: சீரியலை எங்கு பார்ப்பது?

அண்ணா சீரியல் 2023 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது. 

மேலும் படிக்க | லண்டன் வீடு முதல் சென்னை பிளாட் வரை: கமல்ஹாசனின் சொத்து மதிப்பு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News