3 நாள்களுக்கு பிறகு விமர்சியுங்கள் - ஊடகங்களுக்கு திரையரங்கு உரிமையாளர் சங்கம் கோரிக்கை

புதிய திரைப்படங்களின் விமர்சனங்களை 3 நாட்களுக்கு பின்னரே ஊடகங்கள் வெளியிட வேண்டும் என தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.  

Written by - க. விக்ரம் | Last Updated : Sep 21, 2022, 05:31 PM IST
  • திரையரங்கு உரிமையாளர்கள் சங்க செயற்குழு கூட்டம் இன்று நடந்தது
  • படம் வெளியாகி மூன்று நாள்களுக்கு பிறகு விமர்சனம் செய்ய கோரிக்கை
  • அதேபோல் 8 வாரங்களுக்கு பிறகே ஓடிடியில் வெளியிட வேண்டுமென்றும் கோரிக்கை
3 நாள்களுக்கு பிறகு விமர்சியுங்கள் - ஊடகங்களுக்கு திரையரங்கு உரிமையாளர் சங்கம் கோரிக்கை title=

கொரோனா உலகத்தை சிறைப்பிடித்ததை அடுத்து திரையரங்குகள் மூடப்பட்டன. அந்த சமயத்தில் ஓடிடி தளங்கள் அதிகளவு பெருகின. அதனையடுத்து பல படங்களும் ஓடிடி தளங்களில் வெளியாகின. ஒருகட்டத்தில் ஓடிடியின் அசுர வளர்ச்சி காரணமாக திரையரங்குகள் இனி நிலைக்குமா என்ற கேள்வியும்கூட பலரிடம் எழுந்தது. இப்படிப்பட்ட சூழலில் கொரோனாவின் தாக்கம் குறைந்ததை அடுத்து திரையரங்குகள் வெளியாகின. பல படங்கள் திரையரங்குகளில் வெளியாக ஆரம்பித்திருக்கின்றன. ரசிகர்களும் செல்ல ஆரம்பித்திருக்கின்றனர். இதனால் திரையரங்கு உரிமையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதேசமயம், சில கோரிக்கைகளையும் வைத்திருக்கின்றனர்.

மேலும் படிக்க | பொன்னியின் செல்வனில் வைரமுத்துவுக்கு கல்தா - ஏ.ஆர்.ரஹ்மான்தான் காரணம்?

இந்தச் சூழலில், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்கத்தின் சிறப்பு செயற்குழு கூட்டம் அச்சங்கத்தின் பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது  பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய  பன்னீர்செல்வம், “திரையரங்கில் வெளியாகும்   திரைப்படங்களை 8 வாரத்திற்கு பிறகே OTTயில் வெளியிட வேண்டும். எந்த OTTயில் படம் வெளியாகிறது என்பது குறித்து முன்னரே அறிவிக்கக்கூடாது.

படம் வெளியான மூன்று நாட்களுக்கு  பின்னரே விமர்சனங்களை ஊடகங்கள் வெளியிட வேண்டும் என்ற தயாரிப்பாளர் சங்கத்தின் கோரிக்கையை நாங்களும் ஆதரிக்கிறோம். கொரோனா காலக்கட்டத்திற்கு பிறகு தற்போதுதான்  திரையரங்குகள் மீண்டு வரும் நிலையில் சொத்து வரி உயர்வு  மற்றும் மின்சாரக் கட்டண உயர்வால் திரையரங்குகள் மீண்டும் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்படும்.

மேலும் படிக்க | இறங்கி செய்யணும் - கொந்தளித்த கௌதம் மேனன்; சண்டைக்கு தயாரான ப்ளூ சட்டை மாறன்

பெரிய திரையரங்குகளை இரண்டு திரையரங்குகளாகவோ அல்லது மூன்று திரையரங்குகளாகவோ பிரிப்பதற்கான அனுமதியை பொதுப்பணித்துறையிடம் பெற வேண்டும். ஆண்டுக்கு ஒரு முறை ஆய்வு என்பதை மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை ஆய்வு என மாற்றம் செய்து தர வேண்டும்” என்றார்.

மேலும் படிக்க | நடிச்சா ஹீரோவாகத்தான் நடிப்பேன் - அடம்பிடித்த ராமராஜன்; ட்ராப் ஆன கரகாட்டக்காரன் 2

மேலும் படிக்க | வைரமுத்துவை விட பெஸ்ட் இருக்காங்க; இயக்குநர் மணிரத்னம் ஓபன் டாக்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News