இயக்குநர் வெற்றிமாறன் சூரி, விஜய் சேதுபதியை வைத்து விடுதலை என்ற படத்தை இயக்கிவருகிறார். எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய துணைவன் சிறுகதையை அடிப்படையாக வைத்து உருவாகியிருக்கும் இப்படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார். இந்தப் படமானது இரண்டு பாகங்களாக வெளியாகவிருக்கிறது. வெற்றிமாறனும், சூரியும் முதல்முதலாக இணைந்திருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதுமட்டுமின்றி ஜெயமோகனின் கதையை எந்த விதத்தில் வெற்றிமாறன் காட்சிப்படுத்தியிர்க்கிறார் என்பதை பார்க்கவும் ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.
ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மெண்ட் தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுவந்தது. கடந்த 3ஆம் தேதி சென்னை கேளம்பாக்கத்தில் நடைபெற்ற படப்பிடிப்பின்போது ரோப் கயிறு அறுந்து விழுந்து சுரேஷ் என்ற சண்டை கலைஞர் உயிரிழந்தார். ரோப் கயிறு அறுந்து கீழே விழுந்ததில் படுகாயமடைந்த சண்டை பயிற்சியாளர் சுரேஷ் சம்பவ இடத்திலேயே உயிரழந்தார். இவரின் இறப்பு பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது.
இந்நிலையில் இந்த விபத்து குறித்து விடுதலை பட தயாரிப்பு நிறுவனம் ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், சண்டை கலைஞர் சுரேஷ் 'விடுதலை' படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்தில் சிக்கி உயிரிழந்தது மிகப்பெரிய வருத்தத்தையும், வலியையும் ஏற்படுத்தியுள்ளது. படப்பிடிப்பு தளத்தில் பணியாளர்களின் பாதுகாப்பிற்காக, ஆம்புலன்ஸ் உள்ளிட்ட முதலுதவி சிகிச்சை போன்ற முன்னெச்சரிக்கைகள் நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதிலும், சுரேஷை காப்பாற்ற முடியாதது மிகப்பெரிய இழப்பு.
— RS Infotainment (@rsinfotainment) December 5, 2022
இந்த சம்பவம் எங்களது இதயத்தில் மாறாத வலியை ஏற்படுத்தியுள்ளது. மறைந்த சண்டை கலைஞர் சுரேஷ் மற்றும் அவருடைய குடும்பத்திற்கு இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | தவறான எண்ணத்தில் தொட்ட நபர்... பாலியல் சீண்டல் செய்தவரை அடித்து வெளுத்த ஐஸ்வர்யா
மேலும் படிக்க | தீ தளபதியால் அஜித் ரசிகர்களிடம் சிக்கிய சிம்பு, கிரீடத்தால் கடுப்பில் திமுகவினர்..!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ