மாயாவுக்காக ஜானகி எடுத்த முடிவு - சந்தியா ராகம் சீரியல் அப்டேட்!

Sandhya Raagam TV Serial: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சந்தியா ராகம். திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகிறது.  

Written by - RK Spark | Last Updated : Nov 9, 2023, 12:02 PM IST
  • மாயாவுக்காக ஜானகி எடுத்த முடிவு.
  • ஷாக்கான ரகுராம் குடும்பம்.
  • சந்தியா ராகம் இன்றைய எபிசோட் அப்டேட்.
மாயாவுக்காக ஜானகி எடுத்த முடிவு - சந்தியா ராகம் சீரியல் அப்டேட்! title=

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சந்தியா ராகம். திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் முந்தைய எபிசோடில் மாயா கிஷோரிடம் இங்கே இருக்க வேண்டாம் என சொல்லி பேச கிஷோர் நான் ஆஸ்திரேலியா கிளம்பிடுவேன் நீங்கதான் இருக்கணும் என்று சொல்லி கீழே வந்து ஜானகியிடம் பேசிக் கொண்டிருக்கும் போது ஜானகி மாயா இங்கதான் இருக்கணும், சந்தியாவுக்கு நான் சத்தியம் செய்து கொடுத்து இருக்கேன் இனிமே அவ என்னுடைய பொண்ணு நான் தான் அவளை பார்த்துக்குவேன் என்று சொல்ல கிஷோர் அவளையும் சமாளித்து இந்த குடும்பத்தையும் எப்படி சமாளிக்க போறீங்க என்று கேட்க சமாளித்து தான் ஆக வேண்டும் என ஜானகி சொல்கிறாள். 

மேலும் படிக்க | சீதா ராமன் அப்டேட்: மகாலட்சுமியை புலம்ப விட்ட சீதா.. ராமின் தங்கைகளுக்கு காத்திருந்த ஷாக்

இந்த ஷாக்கான நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது, வீட்டில் உள்ள எல்லாரும் மாயா இனிமே இங்கே இருக்க கூடாது, அமெரிக்கா கிளம்பி போகட்டும் என்று சொல்ல ஜானகி ரகுராமிடம் சந்தியாவுக்கு செய்த சத்தியத்தை பற்றி சொல்கிறாள். யாரை கேட்டு நீ சத்தியம் செய்த என கோபப்பட அந்த சமயத்தில் எனக்கு வேற வழி தெரியல என்று சொல்கிறாள். 

santhiyaragam

மேலும் ரகுராம் மாயா இங்க இருந்தால் அவளை பார்த்து நம்ம பொண்ணும் கெட்டு போய்டுவா என்று சொல்ல அப்படி ஏதாவது நடந்தால் நான் இந்த வீட்டை விட்டு வெளியே போயிடுறேன் என்று ஜானகி ஷாக் கொடுக்க ரகுராம் மாயா இருக்க சம்மதம் சொல்கிறார். பிறகு ஜானகி இவர்கள் நனைந்து போய் வந்ததால் ஜலதோஷம் பிடிக்காமல் இருப்பதற்காக கஷாயம் தயார் செய்து தனத்திடம் கொடுத்து மாயாவுக்கு கொடுத்து அனுப்புகிறாள். 

மாயா குடித்து பார்த்து விட்டு கீழே துப்பி என்ன இது? எனக்கு வேண்டாம் என்று ஆர்ப்பாட்டம் செய்ய ஜானகி அங்கு வந்து நான் உன் அம்மா சந்தியாவை விட உன்னை ரொம்ப நல்லா பார்த்துப்பேன் என்று பேச மாயா  கொள்ளாமல் இருக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சந்தியா ராகம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

மேலும் படிக்க | தமயந்தி தான் ஓனர் என்ற உண்மை தெரிய வந்தது! குடும்பமா? மெஸ்ஸா? நளதமயந்தி சீரியல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News