சீதா ராமன் அப்டேட்: வார்னிங் கொடுத்த சீதா.‌.. பழி தீர்க்க வேற மாதிரி ப்ளான் போடும் மகா

Seetha Raman Today's Episode Update: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதா ராமன். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Nov 24, 2023, 12:05 PM IST
  • சீதா ராமன் : இன்றைய எபிசோட்.
  • மகாவுக்கு அதிர்ச்சி கொடுக்கும் சீதா.
  • ராம், சீதாவை பிரிக்க திட்டம்.
சீதா ராமன் அப்டேட்: வார்னிங் கொடுத்த சீதா.‌.. பழி தீர்க்க வேற மாதிரி ப்ளான் போடும் மகா title=

தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘சீதா ராமன்’ சீரியல்.

சீதா ராமன் : இன்றைய எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதா ராமன். நேற்றைய எபிசோடில் சிங் கெட்டப்பில் ரவுடி வெளியே கிளம்ப சீதா தடுத்து நிறுத்திய நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

சந்தேகப்படும் சீதா

அதாவது, சீதா இதே ட்ரஸ்ஸ எங்கயோ பார்த்த மாதிரி இருக்கே என கேட்க சுபாஷ் சிங் எல்லாரும் இப்படி தான் டிரெஸ் போடுவாங்க என சமாளித்து அனுப்ப சீதாவுக்கு சந்தேகமாகவே இருக்கு. அடுத்து அஞ்சலி, ப்ரியா, காவ்யா என மூவரும் இதே கடத்தல் பற்றி பேச சீதாவுக்கு மகா வேலை தான் என்பது உறுதியாகிறது.  ‌ 

மகாவுக்கு அதிர்ச்சி கொடுக்கும் சீதா

அதை தொடர்ந்து சீதா மகாவை சந்தித்து என்னை கடத்தியது நீங்க தான் எனக்கு நல்லா தெரியும் என அதிர்ச்சி கொடுக்கிறார். நீங்க என்னை டிஸ்டர்ப் பண்ணாமல் இருந்தால் நல்லது என வார்னிங் கொடுக்க மகா இல்லன்னா என்னடி பண்ணுவ என மிரட்டுகிறாள். 

மேலும் படிக்க | மன்னிப்பா, மீண்டும் சர்ச்சையா? - 'சக திரைநாயகி திரிஷாவே' மன்சூர் பரபர அறிக்கை

ராம், சீதாவை பிரிக்க திட்டம்

கொலை கேஸ்ல உள்ள போய்டுவீங்க, உங்க கிட்ட ஒவ்வொருத்தரையா பிரிச்சு தனிமரமா ஆக்கிடுவேன் என எச்சரிக்கிறார். அதை தொடர்ந்து அர்ச்சனா, மகா, சீதா ஆகியோர் முதலில் ராம், சீதாவை பிரிக்கணும் என யோசிக்கின்றனர். 

சேதுவை ஆயுர்வேத சிகிச்சைக்கு அனுப்பி ராம், துரையை கூட அனுப்பி சீதாவை பழி தீர்க்க ப்ளான் போடுகின்றனர். டாக்டரை வைத்து கேரளா போக சொல்ல சேதுவும் சம்மதம் தெரிவிக்கிறார். ராம் கூட செல்வதாக சொல்ல துரை மறுப்பு தெரிவிக்கிறார். 

காணத்தவறாதீர்கள்

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சீதா ராமன் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

சீதா ராமன்: சீரியலை எங்கு பார்ப்பது?

சீதா ராமன் சீரியல் 2023 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது. 

மேலும் படிக்க | விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் சிம்பு அல்ல..’இந்த’ ஹீரோதான் நடிக்க இருந்தார்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News