சீதா ராமன் அப்டேட்: மகாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி... சீதா வைத்த செக்

Seetha Raman Today's Episode Update: ஸ்டேஷனில் மகாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி... சீதா வைத்த செக் - சீதாராமன் இன்றைய எபிசோட் அப்டேட்  

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jul 20, 2023, 11:57 AM IST
  • சீதா ரிலீஸ்: சந்தோஷத்தில் ராம்
  • ஆதாரத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த மகா.
  • உச்சகட்ட கோபத்தோடு வீட்டுக்கு போகும் மகா.
சீதா ராமன் அப்டேட்: மகாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி... சீதா வைத்த செக் title=

தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘சீதா ராமன்’ சீரியல்.

சீதா ராமன் : இன்றைய எபிசோட்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதாராமன். 

நேற்றைய எபிசோடில் சேது மற்றும் சுபாஷ் இருவரும் போலீசாரால் கைது செய்யப்பட்ட நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

போலீஸ் இருவரையும் கைது செய்து அழைத்து வர மகா இவங்களை எதுக்கு கைது பண்ணீங்க நான் டிஎஸ்பிக்கு போன் செய்கிறேன், இவங்க தப்பு பண்ணதுக்கு உங்ககிட்ட என்ன ஆதாரம் இருக்கு என கேள்வி கேட்க அவர்கள் இவர்களை கைது செய்ய சொன்னது டிஎஸ்பி தான் நீங்கள் எதுவாக இருந்தாலும் ஸ்டேஷனுக்கு வாங்க உங்களுக்கு ஆதாரத்தை நாங்க காட்டுவோம் என்று சொல்லி இருவரையும் கைது செய்து அழைத்துச் செல்கின்றனர். 

சீதா ரிலீஸ்: சந்தோஷத்தில் ராம்

மறுபக்கம் ஸ்டேஷனில் சீதா ரிலீஸ் ஆகி வெளியே வந்தது தெரியாமல் அவளுக்காக ராம் மற்றும் மதுமிதா இருவரும் வெகுநேரமாக காத்துக் கொண்டிருக்கின்றனர். அப்போது வெளியே வரும் செல்லம்மா நீங்க தான் ராமா ரொம்ப அழகான பையனா இருக்கீங்க. சீதா உங்கள பத்தி நிறைய சொல்லி இருக்கா, அவ ரொம்ப நல்ல பொண்ணு என்று சொல்ல இவர்கள் சீதா எங்கே என கேட்க செல்லம்மா ரிலீஸ் ஆகி வெளியே போயிட்டா என்று சொல்ல அதைக் கேட்டு சந்தோஷப்படுகின்றனர்.

மேலும் படிக்க | பாலா To லோகேஷ்..முதல் படத்திலேயே மாஸ் ஹிட் கொடுத்த முத்தான இயக்குநர்கள்..!

ஆதாரத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த மகா

மேலும் அப்படி என்றால் யார் கைது பண்ணி இருக்காங்க என்று கேட்க செல்லம்மா அது எனக்கு தெரியாது தப்பு பண்ணவங்களை கைது பண்ணி இருப்பாங்க என்று சொல்கிறாள். அதன் பிறகு ஸ்டேஷனுக்கு வரும் மகா நான் அமைச்சருக்கு போன் பண்றேன், இதை செய்கிறேன் அதை செய்கிறேன் என்ன ஆதாரம் இருக்கு என்ன சத்தம் போட போலீஸ் இருவரும் கஞ்சா வைத்தது பற்றி பேசிய வீடியோ ஆதாரத்தை காட்ட அதை பார்த்து மகா அதிர்ச்சி அடைந்து நிற்கிறாள். 

உச்சகட்ட கோபத்தோடு வீட்டுக்கு போகும் மகா

நீங்க எங்க வேணாலும் போங்க ஆனா கோர்ட்ல இந்த ஒரு ஆதாரம் போதும் உங்களால எதுவும் செய்ய முடியாது என சொல்ல மகா ஜெயிலில் இருக்கும் சுபாஷ் மற்றும் சேதுபதியை பிடித்து சத்தம் போடுகிறாள். அவர்கள் நாங்க பேசுனது உண்மைதான், ஆனால் நம் ஆபீஸ்ல கேமரா வச்சது யாரு முதல்ல அதை போய் கண்டுபிடி அப்புறம் வந்து எங்கள பாரு அதுவரைக்கும் வராதே என சொல்லி அனுப்ப உச்சகட்ட கோபத்தோடு வீட்டுக்கு வருகிறாள். 

வீட்டுக்கு வந்த மகா துரை தான் இதுக்கெல்லாம் காரணம் என அவனை பிடித்து ஓவராக சத்தம் போட சீதா தப்பு பண்ணவங்கள கைது பண்ணி இருக்காங்க, அவங்கள கைது பண்ண உதவியா இருந்த இவரை எதுக்கு திட்டுறீங்க என மகாவிடம் வாக்குவாதம் செய்ய இருவருக்கும் இடையே விவாதம் அதிகமாகிறது.

மகா கோபத்தில் பூச்சட்டி எல்லாம் தூக்கி போட்டு உடைக்கிறாள். பிறகு சீதா உங்க டிராமா எல்லாம் இருக்கட்டும், இப்போ பாஸ் வந்து எதுக்காக இவங்கள கைது பண்ணாங்கன்னு கேட்டா நீங்க என்ன பதில் சொல்லப் போறீங்க என்று கேட்டு அதிர்ச்சி கொடுக்கிறாள். 

காணத்தவறாதீர்கள்

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சீதா ராமன் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்

சீதா ராமன்: : சீரியலை எங்கு பார்ப்பது?

சீதா ராமன் சீரியல் 2023 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது. 

மேலும் படிக்க | லியோ படத்தில் த்ரிஷாவுக்கு என்ன ஆகும்..? லோகேஷ் கனகராஜ் சொன்ன தகவல்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News