சிவகார்த்திகேயன் - விக்னேஷ் சிவன் கூட்டணியில் புதுபடம்...

லைகா நிறுவனம் தயாரிப்பில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் 17-வது திரைப்படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!

Updated: Mar 21, 2019, 05:32 PM IST
சிவகார்த்திகேயன் - விக்னேஷ் சிவன் கூட்டணியில் புதுபடம்...

லைகா நிறுவனம் தயாரிப்பில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் 17-வது திரைப்படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!

இயக்குநர் எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் – நயன்தாரா நடிப்பில் உருவாகிவரும் மிஸ்டர் லோக்கல் திரைப்படம் விரைவில் விரைவில் திரைக்கு வருகிறது.

இதனைத்தொடர்ந்து, சிவகார்த்திகேயன் இன்று நேற்று நாளை இயக்குநர் ரவிக்குமார் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். மேலும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டியராஜ் இயக்கும் படத்திலும், இரும்புத்திரை இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்நிலையில், லைகா தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நாயகனாக ஒப்பந்தமாகி உள்ளார். இதுதொடர்பான அறிவிப்பினை லைகா நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக தெரிவித்துள்ளது.

மேலும் இந்தப் படத்திற்கு அனிரும் இசையமைக்கிறார் எனவும், படத்தின் நாயகி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் லைகா நிறுவனம் தெரிவித்துள்ளது. 

விக்னேஷ் சிவன் இயக்குவதால், மீண்டும் நயன்தாராவுடன் சிவகார்த்திகேயன் நடிக்கவும் வாய்ப்புள்ளதாக தெரிகிறது. ஜூலை 2019-ல் படப்பிடிப்பு துவங்கப்பட்டு 2020-ல் வெளியாகும் என இப்போதே லைகா நிறுவனம் அறிவித்துள்ளது.