உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் நெஞ்சுக்கு நீதி படம் ரிலீஸாகியுள்ளது. இந்தியில் வெளியான ஆர்ட்டிக்கிள் 15 படத்தின் ரீமேக்காக உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படத்தை இயக்குநர் அருண்ராஜா காமராஜ் இயக்கியிருக்கிறார். வலிமை படத்தை தயாரித்த போனிக் கபூர் இந்தப் படத்தையும் தயாரித்திருக்கிறார். ரெட் ஜெயண்ட் மூவிஸ் தமிழகம் முழுவதும் படத்தை ரிலீஸ் செய்துள்ளது.
மேலும் படிக்க | வெற்றிமாறனின் விடுதலைக்காக உருவாகும் கிராமம்
இந்தப் படத்தை அமைச்சர்கள் உள்ளிட்டோரும் பார்த்து உதியநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில், தமிழ் ஹீரோக்களின் பெரிய பட்ஜெட் படங்களின் தோல்வி குறித்து பேசியிருக்கும் உதய நிதிஸ்டாலின், சம்பளத்தை குறைத்தால் மட்டுமே படம் ஓடும் எனத் தெரிவித்துள்ளார். படத்தின் ஹீரோக்களுக்கு பெரிய தொகையை சம்பளமாக கொடுப்பதால், மேக்கிங்கில் சமரசம் செய்ய வேண்டியிருப்பதாக தெரிவித்துள்ளார். நல்ல படமாகவும், கன்டென்ட் தரமானதாகவும் இருக்க வேண்டும் என்றால், சம்பளம் குறைக்கப்படுவது மட்டுமே வழி எனவும் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
மேலும், கேஜிஎப் படத்தின் ஹிட் பற்றிப் பேசிய அவர், அந்தப் படத்தின் யாஷ் சம்பளத்தை ஒப்பிட்டு பேசினார். அண்மையில் வெளியான ஒரு தகவலின்படி, தமிழகத்தின் உட்ச நட்சத்திரங்களாக இருக்கும் விஜய் மற்றும் அஜித், ரஜினிகாந்த் ஆகியோர் சுமார் 100 கோடி ரூபாய்க்கும் மேலம் சம்பளம் பெறுவதாக கூறப்பட்டிருந்ததது. அதிக சம்பளம் வாங்குபவர்கள் பட்டியலில் விஜய் முதல் இடத்திலும், அஜித் மற்றும் ரஜினிகாந்த் அடுத்தடுத்த இடங்களிலும் இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அவர்களின் சம்பளமே 100 கோடி ரூபாயைக் கடந்திருப்பதால், அந்தளவுக்கான தொகையை செலவழித்தாலும், தயாரிப்பாளர்களுக்கான லாபம் கிடைப்பதில்லை என தயாரிப்பாளர்கள் கூறுகின்றனர். லாபம் கொடுக்காதபோது இவ்வளவு தொகையை செலவழித்து ஏன்? படமெடுக்க வேண்டும் என்றும் சிலர் விமர்சிக்கின்றனர்.
மேலும் படிக்க | யுவன் - விஜய் சேதுபதி கூட்டணியின் லேட்டஸ்ட் அப்டேட் - ரசிகர்கள் ஹேப்பி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR