புனித் ராஜ்குமார் நினைவிடத்தில் விஜய் நேரில் அஞ்சலி!

மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் நினைவிடத்தில் விஜய் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 26, 2022, 04:00 PM IST
  • புனித் ராஜ்குமார்க்கு விஜய் அஞ்சலி
  • அவரின் நினைவிடத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்
புனித் ராஜ்குமார் நினைவிடத்தில் விஜய் நேரில் அஞ்சலி! title=

பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் கடந்த அக்.29ம் தேதி திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், ஆனாலும் சிகிச்சை பலனின்றி  இறந்தார்.  இந்த செய்தி திரையுலகத்தையே அதிர செய்தது.  பிறகு அவரது உடலுக்கு திரைஉலகத்தை சேர்ந்த பலரும், அரசியல் தலைவர்களும், பல்வேறு ரசிகர்களும் அஞ்சலி செலுத்தினர்.  46 வயதில் மாரடைப்பு ஏற்பட்டதை யாராலும் தாங்கி கொள்ள முடியவில்லை.  சென்னையில் பிறந்த நடிகர் புனித் ராஜ்குமார் கன்னட நடிகரான ராஜ்குமாரின் ஐந்தாவது மகன் ஆவார். நடிகர், பாடகர், தயாரிப்பாளர் தொலைக்காட்சி பிரபலம் என பல முகங்களை கொண்டிருந்தார் புனித் . பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் 2002-ம் ஆண்டு வெளியான 'அப்பு' படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.

மேலும் படிக்க | மறைந்த நடிகர் புனித் குறித்து உருக்கமாக பேசிய நடிகர் விஷால்!

புனித் ராஜ்குமார் உயிரிழந்த பின்பு தான் அவர் செய்து வந்த பல நல்ல விஷயங்கள் வெளியில் வந்தன.  பல குழந்தைகளின் படிப்பு செலவுகளை அவர் ஏற்றுவந்துள்ளார்.  சிறிது நாட்களுக்கு முன்னர் புனித் ராஜ்குமார் நடித்த கடைசி படமான ஜேம்ஸ் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களை கண் கலங்க வைத்தது.  "புனீத் ராஜ்குமார் அவர்களின் மரண சேதி கேட்டது எனக்கு மிகுந்த துயரத்தை அளித்தது. இந்த மீளா  துயரத்திலிருந்து இவரது குடும்பம் சீக்கிரம் மீண்டு வர வேண்டும்" என்று நடிகர் அஜித் மற்றும் அவரது மனைவி ஷாலினி கூறியிருந்தனர்.  சமீபத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் புனித் வீட்டிற்கு சென்று அஞ்சலி செலுத்தி இருந்தார். இந்நிலையில் தற்போது நடிகர் விஜய் புனித் ராஜ்குமார் நினைவிடத்தில் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி உள்ளார்.  இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது.  

 

மேலும் படிக்க | புனித் ராஜ்குமார் மறைவிற்கு அஜித் இரங்கல்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News