சீதா ராமன்: பூஜை கெட்டப்பில் சீதா போட்ட பிளான்.. நான்சிக்கு காத்திருக்கும் சிக்கல்

Seetha Raman Today's Episode Update: பூஜை கெட்டப்பில் சீதா போட்ட பிளான்.. நான்சிக்கு காத்திருக்கும் சிக்கல் - சீதா ராமன் இன்றைய எபிசோட் அப்டேட் 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 12, 2024, 01:34 PM IST
  • ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதா ராமன்
  • சீதா ராமன் இன்றைய எபிசோட் அப்டேட்
  • சீதாவின் நடவடிக்கையால் நான்சிக்கு ஏதோ சந்தேகமும் எழுகிறது.
சீதா ராமன்: பூஜை கெட்டப்பில் சீதா போட்ட பிளான்.. நான்சிக்கு காத்திருக்கும் சிக்கல் title=

Seetha Raman Today's Episode Update: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதா ராமன், இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சீதாவின் ஏற்பாட்டின் படி மகளிர் குழுவினர் வீட்டிற்கு வந்திருந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

 சீதா ராமன் சீரியலின் இன்றைய எபிசோடில்அதாவது, வந்தவர்கள் எல்லாரும் மஞ்சள் புடவையில் வர சீதாவும் மஞ்சள் கலர் புடவையில் உட்கார்ந்து வீட்டில் பூஜை செய்ய எல்லாரும் எதுவும் புரியாமல் நிற்கின்றனர், பிறகு பஜனை பாட நான்சி இது என்ன பஜனை மடமா என்று கோபப்படுகிறாள். அதே சமயம் சீதாவின் நடவடிக்கையால் நான்சிக்கு ஏதோ சந்தேகமும் எழுகிறது. 

இதனையடுத்து சீதா எல்லாரையும் அழைத்து கொண்டு கோவிலுக்கு கிளம்ப நான்சி தடுத்து நிறுத்தி அதான் இங்கயே எல்லா பூஜையும் பண்ணிட்டயே அப்புறம் கோவிலுக்கு எதுக்கு என்று கேட்க நாங்க போயிடு வருவோம் என்று சொல்லி கிளம்பி செல்கிறாள். இதனால் நான்சியின் சந்தேகம் அதிகமாகிறது. 

வெளியே வந்த சீதா எல்லாரையும் எக்ஸ்போர்ட் கம்பெனிக்கு அழைத்து வந்து சுத்தம் செய்து வேலையை தொடங்க தயாராக சேது அங்கு வருகிறார். சீதாவை பாராட்டி நமக்கு லாபம் கூட வேண்டாம், லாபத்தை இவர்களுக்கே கொடுத்திடலாம். நாம இந்த ஆர்டரை முடித்து கொடுத்தால் மட்டும் போதும் என்று முடிவெடுக்கிறாள். 

மேலும் படிக்க | Manjummel Boys : ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ ஓடிடியில் ரிலீஸாவது எப்போது? வெளியானது தகவல்..

இதனை தொடர்ந்து நான்சி அர்ச்சனா மற்றும் சுபாஷை கூப்பிட்டு எனக்கு என்னமோ அவங்க கோவிலுக்கு போற மாதிரி தெரியவில்லை , ஏதோ பிளான் போட்டு இருக்கா என்று சுபாஷை தேட சொல்லி அனுப்பி வைக்கிறாள். மறுபக்கம் சீதா மகளிர் குழுவினரை வைத்து வேலைகளை செய்து கொண்டிருக்க திடீரென கரண்ட் கட் ஆகிறது. 

ஜெனரேட்டர், பவர் பேக்கப் எதுவும் இல்லாத நிலையில் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் இவர்கள் திகைத்து நிற்கின்றனர், இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சீதா ராமன் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

சீதா ராமன்: சீரியலை எங்கு பார்ப்பது?

சீதா ராமன் சீரியல் 2023 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது. 

மேலும் படிக்க | Oscar 2024 List : ஆஸ்கர் விருதுகளின் வெற்றியாளர்கள் யார்? எந்த படத்திற்கு என்ன விருது கிடைத்தது? முழு லிஸ்ட்..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News