தொலைந்து போன ஸ்மார்ட்போனை எவ்வாறு பெறுவது என்பது உங்களுக்குத் தெரியுமா? அதுமட்டுமல்ல, தொலைந்து போன தொலைபேசியில் உள்ள உங்களுடைய தனிப்பட்ட தரவுகளை எப்படி நீக்குவது என்பதையும் தெரிந்துக் கொள்ள வேண்டியது இன்றைய காலகட்டத்தில் மிகவும் அவசியமானது.
ஐரோப்பாவில் சமீபத்திய வறட்சி மற்றும் வெப்ப அலைகள் 2,000 ஆண்டுகளில் மோசமானவை என்று ஆய்வு கூறுகிறது. கடந்த ஏழு ஆண்டுகளில் ஐரோப்பாவை பாதித்த வெப்ப அலைகள் மற்றும் வறட்சிகள் இப்பகுதியில் 2,000 ஆண்டுகளில் இல்லாத அளவில் இல்லாத அளவில் தீவிரமானதாக இருப்பதாக ஒரு ஆராய்ச்சி கூறுகிறது.
தென்மேற்கு துருக்கியில் உள்ள இந்த சால்டா ஏரியில் காணப்படும் தாதுக்கள் மற்றும் பாறைகள் செவ்வாய் கிரகத்தின் ஜசீரோ பள்ளத்தில் (Jezero Crater) உள்ளதைப் போன்றவை என நாசா கூறுகிறது.
சமீபத்தில், அமெரிக்க விண்வெளி ஏஜென்சி (நாசா) தனது மிக லட்சிய பணிக்கு ஒரு ரோவரை அனுப்பியுள்ளது.நாசா இந்த Perseverance ரோவர் (NASA Mars Perseverance Rover) மூலம் ஸெவ்வாய் கிரகத்தில் (Mars) உயிர் இருப்பதற்கான ஆதாரங்களை சேகரித்து வருகிறது. . மறுபுறம், சில விஞ்ஞானிகள் செவ்வாய் கிரகத்தில் இருக்கும் உயிர்கள் இருக்கிறதா என்பதை (NASA Mars Mission) பூமியில் இருக்கும் ஒரு சால்டா ஏரியின் உதவியுடன் புரிந்து கொள்ள முயற்சிக்கின்றனர். இந்த குறிப்பிட்ட ஏரி துருக்கியில் அமைந்துள்ளது. இந்த ஏரி செவ்வாய் கிரகத்திற்கு எவ்வளவு நெருக்கமானது என்பதை அறிந்து கொள்ளலாம்
ஆறு பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர், பால்வீதியின் புறப் பகுதிகள் வாழ்வதற்கு சாத்தியமான பாதுகாப்பான இடங்களாக இருந்தன, அவை பிரபஞ்சத்தில் ஏற்பட்ட வெடிப்பினால் மாறிவிட்டன. காமா-கதிர் வெடிப்புகள் (gamma-ray bursts) மற்றும் சூப்பர்நோவாக்கள் (supernovae) போன்றவற்றால் இந்த மாற்றங்கள் ஏற்பட்டன.
பண்டைய எகிப்தியர்களை மரணத்திற்குப் பிந்தைய வாழ்க்கைக்கு தயாரிக்க பயன்படும் எம்பாமிங் செயல்முறையின் முக்கியமான நடவடிக்கைகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
மனிதன் விண்வெளியில் பல சாதனைகளை படைத்து வருகிறான். இதுவரையில் இல்லாத வகையில், விண்வெளி ஓட்டல் ஒன்றை உருவாக்குவதற்கான பணிகள் துவங்கவுள்ளன. இந்த ஓட்டலில் உணவகங்கள், ஒரு திரையரங்கம், ஸ்பா மற்றும், 400 பேரை உள்ளடக்கக்கூடிய அறைகள் ஆகியவை இருக்கும்.
குரங்குகளை தேடும் ஆராய்ச்சியாளர்களைத் தெரியுமா? குரங்குகளின் பற்றாக்குறையால், மருத்துவ கண்டுபிடிப்புகள் முடங்குவது தெரியுமா? ஏன் என்ற கேள்வி எழுகிறதா? இதோ பதில்…
குறுகிய தூர வான் இலக்குகளை தாக்கி அழிக்கும் SRSAM ஏவுகணை சோதனை வெற்றி. இந்திய கடற்படைக்காக உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட ஏவுகணை வெற்றிகரமாக சுட்டு பரிசோதிக்கப்பட்டது.
அரிய வகை கருப்பு-கால் ஃபெரெட்டை விஞ்ஞானிகள் வெற்றிகரமாக குளோன் செய்துள்ளனர். இந்த ஆராய்சி, மனிதர்களின் க்ளோனிங்கும் சாத்தியமா என்ற கேள்விகளை எழுப்புகிறது.
பிப்ரவரி 19 வெள்ளிக்கிழமை செவ்வாய் கிரகத்தில் ரோவர் தரையிறங்கிய முதல் படத்தை உலகம் கண்டது. சிவப்பு கிரகத்தின் தூசி நிறைந்த மேற்பரப்பில் ஒரு ரோவர் இறங்கும் ஒரு 'அசத்தல்' படத்தை நாசா வெளியிட்டுள்ளது. செவ்வாய் கிரகத்தில் 'பெர்சவரன்ஸ்' ரோவர் தரையிறங்கிய 24 மணி நேரத்திற்குள் இந்த படம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ரோவர் பண்டைய வாழ்க்கையின் தடயங்களைக் கண்டுபிடிக்கும். மேலும் செவ்வாய் கிரகத்தில் உள்ள பாறையின் உண்மையான மாதிரிகளை பூமிக்கு கொண்டு வர முயற்சிக்கும்.
இந்த வரலாற்று சிறப்புமிக்க பணியில் பங்கெடுத்துள்ள விஞ்ஞானிகளில், இந்திய-அமெரிக்கர் டாக்டர் சுவாதி மோகன் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறார். இவர் உயர் கட்டுப்பாடு மேம்படுத்தல் மற்றும் ரோவருக்கான தரையிறங்கும் முறைமைக்கு தலைமை தாங்கினார்.
சில மாதங்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்ட ரோவர், செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் உள்ள பழங்கால டெல்டாவான ஜெசெரோ க்ரேட்டரில் வெள்ளிக்கிழமை அதிகாலை 2:25 மணியளவில் இறங்கும் என்று நாசா உறுதிப்படுத்தியுள்ளது.
பெர்முடா முக்கோண பகுதிக்கும் வரும் விமானங்கள் கப்பல்கள் காணாமல் போவதைப் போல, செயற்கை கோள்களும் காணமல் போகின்றன. இந்த பகுதியை கடக்கும் போதும் செயற்கைக் கோள்களுக்கும் பூமிக்கும் இடையிலான தொடர்பு துண்டிக்கப்படுகிறது.
பெரு நாட்டின் அமேசான் நதிகளின் ஆச்சரியம் ஏற்படுத்தும் புகைப்படத்தை நாசா வெளியிட்டுள்ளது. அதில் நதியில் இருப்பது மணலும், நீரும் மட்டுமல்ல, தங்கமும் என்பது தெரிகிறது.
பாரம்பரிய வழிகள் ஒருபுறம் இருக்க, இப்படிப்பட்ட புதிய வழிகளால், வித்தியாசமான விவசாய வழிமுறைகளும், அதிகப்படியான மகசூலும், வளங்களின் அதிகப்படியான பயன்பாடும் ஏற்படுகின்றது என்பதை மறுப்பதற்கில்லை.
11,000 க்கும் அதிகமான தீவிர வானிலை நிகழ்வுகளின் பகுப்பாய்வு, 2000 ஆம் ஆண்டிலிருந்து, இந்த நிகழ்வுகளால் சுமார் 480,000 இறப்புகள் ஏற்பட்டுள்ளதாகக் கூறியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.