அன்பில் உருகும் யானையின் பரிவு! வெட்கி தலைகுனிய வேண்டாமா? வீடியோ வைரல்

Trending Elephant Save: யானைகளின் வழித்தடத்தை அளித்த மனிதர்களுக்கு சூடு கொடுக்கும் வீடியோ! இந்த அன்புக்கு மனிதர்களுக்கு ஏதேனும் தகுதி இருக்கிறதா? வெட்கி தலை குனிய வைக்கும் வீடியோ வைரல்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Sep 6, 2023, 12:00 PM IST
  • அய்யோ பாவம்! மனிதனை காப்பாற்றும் யானைகுட்டி
  • நீரில் மூழ்கும் மனிதனை காப்பாற்றும் யானை வீடியோ
  • இந்த உதவிக்கு மனிதர்களுக்கு தகுதி இருக்கிறதா?
அன்பில் உருகும் யானையின் பரிவு! வெட்கி தலைகுனிய வேண்டாமா? வீடியோ வைரல் title=

இன்றைய வைரல் வீடியோ: உலகில் வாழும் உயிரினங்களிலேயே மிகவும் புத்திசாலித்தனமானவை யானைகள். அவை மனிதர்களைப் போலவே தங்கள் குடும்பத்தை பாதுகாப்பவை. தற்போது இணையத்தில் வைரலாகும் ஒரு யானையின் வீடியோ யானைகளின் அன்பையும் உதவும் குணத்தையும் காட்டுகிறது. விலங்குகள் தொடர்பான தகவல்கள், வியப்பை அளிப்பவை. இது, யானைகளின் வழித்தடத்தை அளித்த மனிதர்களுக்கு சூடு கொடுக்கும் வீடியோ! இந்த அன்புக்கு மனிதர்களுக்கு ஏதேனும் தகுதி இருக்கிறதா? வெட்கி தலை குனிய வைக்கும் வீடியோ இது.

காட்டு பகுதியில் உள்ள ஆற்றில் ஒருவர் நீச்சலடித்துக் கொண்டிருக்கிறார். அவர் நீரில் மூழ்குவதாக நினைத்த ஒரு குட்டி யானை, தண்ணீருக்குள் இறங்கி அந்த மனிதனை காப்பாற்றும் யானை வீடியோ நெஞ்சை நெகிழச் செய்கிறது. இந்த வீடியோவில் எடுக்கப்பட்ட இடம் தொடர்பான தகவல்கள் தெரியவில்லை.

உதவ நினைக்கும் யானை 
இந்த வீடியோவில், ஆற்றங்கரையில் மந்தையாக வந்த யானைகளை பார்க்க முடிகிறது. அதில் ஒரு யானை, தொலைவில் இருக்கும் மனிதர் ஒருவர் ஆற்றுக்குள் செல்வதைப் பார்க்கிறது. பாவம் அவர், ஆற்றில் அடித்துச் செல்லப்படுகிறார் என்று நினைத்த அந்த யானை, காப்பாற்ற களம் இறங்கிவிட்டது.

ஓடும் ஆற்றில் நீந்திக் கொண்டிருக்கும் மனிதரை காப்பாற்ற நினைத்த யானை, கஷ்டப்பட்டு, நஷ்டப்பட்டு, தண்ணீருக்குள் நடந்து சென்று காப்பாற்றும் வீடியோவைப் பார்த்தால், யானையின் உயிர் காக்கும் மாண்பை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.  

 வைரலாகும் குட்டியானை வீடியோ

யானையின் இந்த வீடியோ 22 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது, பலர் தங்கள் கருத்துக்களைக் கருத்துத் தெரிவித்தனர். இயற்கையில் இது போன்ற தருணங்கள் மனதைத் தொடும் என்று ஒருவர் கூறினார். இன்று மனிதர்களிடையே கூட பார்க்க முடியாத ஒரு அற்புதமான மனிதாபிமான பண்பு, யானைக்குள் இருப்பது அதிசயம் என்று ஒருவர் பதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்க | கிளைமேக்ஸில் என்ட்ரியாகி கடத்தல்காரர்களுக்கு செக் வைத்த நாய் வீடியோ வைரல்

இது மிகவும் பாராட்டப்படக்கூடிய செயல், ஆனால், மனிதர்களுக்கு இந்த அன்புக்கு தகுதி உண்டா? யானைகளை அவற்றின் போக்கில் வாழவிடாமல், அவற்றின் வாழ்விடத்தை துவம்சம் செய்யும் மனிதர்களை காப்பாற்ற நினைக்கும் இந்த அப்பாவி யானையை என பலர் கருத்து பதிவிட்டிருக்கின்றனர்.  

யானைகள், குரங்குகள் மற்றும் டால்பின்கள் போன்றவை மற்ற விலங்குகளை போல அன்றி, விதிவிலக்காக புத்திசாலித்தனமான உயிரினங்கள் என விலங்குகளை ஆராய்ச்சி செய்யும் நிபுணர்கள் கணித்துள்ளனர்.

யானைகளும் நம்மைப் போலவே எண்ணங்கள், ஆழமான உணர்வுகள் மற்றும் உணர்ச்சிகளை அனுபவிக்கும் திறன் கொண்டவை. ஆனால், காப்பாறும் எண்ணம், அதிலும் மனிதர்களை காப்பாற்றும் யானையின் அன்பு வியக்க வைக்கிறது.

சமூக ஊடகங்களில் தினம் தினம் எண்ணிலடங்காத வீடியோக்கள் ஆடியோக்கள் மற்றும் பிற தகவல்கள் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன. எனினும் அதன் சில வீடியோக்கள் மட்டுமே வைரல் ஆகின்றன.  அதிலும் காட்டு வாழ்க்கையை காட்டும் வீடீயோக்களுக்கு ரசிகர்கள் ஏராளம். குறிப்பாக பாம்பு, யானை, குரங்கு ஆகியவற்றின் தாக்குதல் அல்லது சேட்டைகள் குறித்த வீடியோக்கள் எளிதில் வைரலாகும். அந்த வகையில் யானையின் வீடியோ ஒன்று இங்கு வைரலாகி வருகின்றது.

மேலும்  படிக்க |  கலிகாலம் தான்... நூடுல்ஸ் போல் பாம்பை உயிருடன் கபளீகரம் செய்யும் தவளை... திகிலூட்டும் வீடியோ!

(இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News