வட இந்தியாவில் பல மாநிலங்கள் கடும் குளிரை அனுபவித்து வரும் நிலையில், ஜம்மு காஷ்மீரில் பனி மூடிய தண்டவாளங்கள் வழியாக ரயில் ஓடும் வீடியோவை ரயில்வே அமைச்சகம் பகிர்ந்துள்ளது. வீடியோவில், அனைத்தும் பனியின் வெள்ளை போர்வையால் மூடப்பட்டிருக்கும். காஷ்மீரில் உள்ள ஒரு பள்ளத்தாக்கு வழியாக ஒரு ரயில் செல்வதைக் காணலாம்.
"பனிஹாலில் இருந்து ஜம்மு & காஷ்மீரின் பத்காம் வரை பனி படர்ந்த பள்ளத்தாக்கு வழியாக ரயில் இழுக்கும் அழகிய காட்சி" என்று அமைச்சகம் பதிவின் தலைப்பில் பதிவிட்டுள்ளது. இது 1,27,000 க்கும் மேற்பட்ட பார்வைகளையும் 5,400 க்கும் மேற்பட்ட விருப்பங்களையும் பெற்றுள்ளது.
வைரல் வீடியோவை இங்கே காணலாம்:
A picturesque view of train pulling through the snow laden valley from Banihal to Badgam, Jammu & Kashmir. pic.twitter.com/Gs7mOX80cv
— Ministry of Railways (@RailMinIndia) January 5, 2023
இணைய பயனர்கள் இந்த வீடியோவை மிகவும் ரசிக்கின்றனர். அவர்கள் கருத்துப் பகுதியை இதயம் எமோஜி மற்றும் பற்றி எரியும் தீ போன்றன் எமோஜிகளால் நிரப்பியுள்ளன. "இது கண்களுக்கு விருந்து. இது வெளிநாட்டு நிலம் அல்ல, இந்தியா" என்று ஒரு பயனர் எழுதினார். மற்றொருவர் "இந்த பகுதி வழியாக பயணம் செய்வது மிகவும் அற்புதமான அனுபவமாக இருக்கும்!" என்றும் மற்றொருவர் "ஆஹா! சுவிட்சர்லாந்து போல் தெரிகிறது. காஷ்மீரை விட சுவிட்சர்லாந்தை சிறப்பாக இருப்பது உள்கட்டமைப்புபினால் மட்டுமே. விரைவில் இந்தியா அந்த இடத்தை பிடிக்கும்." எனவும் பதிவிட்டுள்ளனர்.
மேலும் படிக்க | உங்களிடம் உள்ள ரூ.500 நோட்டு உண்மையானதா? போலியா? இப்படி கண்டறியலாம்
இதற்கிடையில், கடந்த சில நாட்களாக வட, வடமேற்கு மற்றும் மத்திய இந்தியாவில் குளிர் காற்று வாட்டி வதைக்கிறது. இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) படி, இந்த வாரமும் உறைபனி தொடரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. IMD வானிலை முன்னறிவிப்பின்படி, அடுத்த 2-3 நாட்களில் பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம், ராஜஸ்தான், பீகார், ஜம்மு மற்றும் காஷ்மீர், ஹிமாச்சலப் பிரதேசம், உத்தரகண்ட் மற்றும் வடக்கு மத்தியப் பிரதேசத்தின் சில பகுதிகளில் அடர்த்தியான முதல் மிக அடர்த்தியான மூடுபனி ஏற்படலாம். ஜனவரி இரண்டாவது வாரத்தில் ஜம்மு காஷ்மீரின் பல இடங்களில் லேசானது முதல் மிதமான மழை/பனிக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க | Viral Video: ஹூஹூம்.... இது தேர்ற கேஸ் இல்லை... குட்டியானையின் க்யூட் வீடியோ!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ