Viral Video: மெட்டல் வேலியை திருட்டுத்தனமாக தாண்டும் தில்லாங்கடி முதலை..!

Viral video: அமெரிக்காவில் இரும்பு வேலியை தில்லாலங்கடி முதலை ஒன்று திருட்டுதனமாக தாண்டும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. 

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 4, 2023, 07:15 PM IST
Viral Video: மெட்டல் வேலியை திருட்டுத்தனமாக தாண்டும் தில்லாங்கடி முதலை..! title=

முதலைகள் தென்கிழக்கு அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட பெரிய, மாமிச ஊர்வன வகை. அவை அவற்றின் பரந்த முனகல்கள், சக்திவாய்ந்த தாடைகள் மற்றும் கடினமான செதில் தோல் ஆகியவை பார்ப்பவர்களை குலைநடுங்கச் செய்யும். வேட்டை என்று வந்துவிட்டால், நிலத்தில் இருக்கும் விலங்களுக்கு சளித்தது இல்லை முதலை. புலி மற்றும் சிறுத்தையை கூட நீருக்குள் அமுக்கி வேட்டையாடிவிடும். இதன் கொடூர தன்மையை இரையை வேட்டையாடும்போது பார்க்கலாம். அத்தகைய முதலை வீடியோக்கள் நிறைய சமூக ஊடகங்களில் இருக்கின்றன. 

மேலும் படிக்க | பெண்ணை சுற்றிக்கொண்டு படம் எடுத்த நாகப்பாம்பு: திகிலூட்டும் வைரல் வீடியோ

ஆனால் அவை செய்யும் சின்ன சின்ன சேட்டை வீடியோக்கள் தான் அதிகம் கவனம் பெறும். ஏனென்றால் வேட்டையாடும் விலங்கு என்று தெரிந்த ஒன்று தான். ஆனால், அவை அவற்றை தாண்டி செய்யும் சில சில்மிஷ விஷயங்கள் எல்லோரது கவனத்தையும் ஈர்க்கும். அந்தவகையில் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இரும்பு வேலியை முதலை ஒன்று தில்லாலங்கடி செய்து கடக்கும் வீடியோ காண்போரின் கவனத்தை ஈர்த்துள்ளது. 

@MattDevittWINK என்ற டிவிட்டர் பக்கத்தில் முதலை வீடியோ பகிரப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் ராட்சத முதலை ஒன்று இரும்பு வேலி முன்பு இருக்கிறது. அந்த வேலியை கடக்க முயற்சி செய்ய நினைத்த முதலை திடீரென இரும்பு கம்பிகளுக்குள் புகுந்து செல்கிறது. பார்க்கும்போது கடினமான கம்பிகளுக்குள் அந்த முதலை எப்படி செல்லும் என்ற எதிர்பார்ப்பு இருக்கும். ஆனால், முதலை தன்னுடைய ராட்ச பலத்தால் கம்பிகளை உடல் மூலம் வளைத்து நெளித்து அதற்குள் புகுந்து வேலியை கடக்கிறது. இந்த வீடியோ இதுவரை 1.2 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றிருக்கிறது. 1600க்கும் அதிகமான லைக்குகளையும் குவித்துள்ளது.  

மேலும் படிக்க | குழந்தையை சுற்றி வளைத்த மலைப்பாம்பு: திகிலூட்டும் வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News