ரவி புஷ்ய யோகம்... அதிர்ஷ்ட ராசிகளும்... சில பரிகாரங்களும்..!!

ஜூலை 7, ஞாயிற்றுக்கிழமை, சந்திரன் தனது ராசியான கடக ராசியில் சஞ்சரிக்க உள்ள நிலையில், ரவி புஷ்ய யோகம், சர்வார்த்த சித்தி யோகம், ஹர்ஷன யோகம் மற்றும் புஷ்ய நட்சத்திரம் ஆகிய மூன்றும் இணைந்த ஒரு சுபயோகம் உருவாக இருப்பதால் 5 ராசிகள் பெரும் பலனடைவார்கள். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 6, 2024, 08:46 PM IST
  • சமூகத்தில் உங்கள் மரியாதையும் அதிகரிக்கும்.
  • சொத்துக்களை வாங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
  • குழந்தைகளின் வளர்ச்சியைக் கண்டு மன மகிழ்ச்சி அடைவீர்கள்.
ரவி புஷ்ய யோகம்... அதிர்ஷ்ட ராசிகளும்... சில பரிகாரங்களும்..!! title=

ஜூலை 7, ஞாயிற்றுக்கிழமை, சந்திரன் தனது ராசியான கடக ராசியில் சஞ்சரிக்க உள்ள நிலையில், ரவி புஷ்ய யோகம், சர்வார்த்த சித்தி யோகம், ஹர்ஷன யோகம் மற்றும் புஷ்ய நட்சத்திரம் ஆகிய மூன்றும் இணைந்த ஒரு சுபயோகம் உருவாக இருப்பதால் 5 ராசிகள் பெரும் பலனடைவார்கள். நாளை அதாவது ஜூலை 7ம் தேதி எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் என்று தெரிந்து கொள்வோம்.

மேஷ ராசி

மேஷ ராசிக்காரர்களுக்கு நாளை அதாவது ஜூலை 7ம் தேதி மிகவும் சிறப்பான நாளாக இருக்கும். நாளை சூரியபகவானின் அருளால் மேஷ ராசிக்காரர்கள் எதிர்பார்த்ததை விட அதிக நிதி வரவு கிடைக்க வாய்ப்பு உள்ளது. இதனால் நிதி நிலைமை மேம்படும். உங்கள் குழந்தை தொடர்பான சில நல்ல செய்திகளை நீங்கள் கேட்கலாம். இதனால்,  உற்சாகம் அதிகரிக்கும். ஆன்மீக நிகழ்வுகளில் கலந்து கொள்வது உங்களுக்கு மன அமைதியை தரும். புதிய வேலையைத் தொடங்க நேரம் சாதகமாக உள்ளது. தாம்பத்ய வாழ்வில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும்

மேஷ ராசிக்கான ஞாயிற்றுக்கிழமை பரிகாரம்: வேலையில் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்பட, அரிசி மற்றும் சிவப்பு பூக்களை ஒரு செம்பு பாத்திரத்தில் தண்ணீரில் கலந்து சூரிய பகவானுக்கு அர்ப்பணிக்கவும்.

கடக ராசி

நாளை அதாவது ஜூலை 7ஆம் தேதி கடக ராசிக்காரர்களுக்கு மங்களகரமானதாகவும் பலன் தருவதாகவும் இருக்கும். உங்கள் எதிரிகள் தோற்றுப் போவார்கள், வாழ்க்கையும் சரியான திசையில் செல்லும். திட்டமிட்டபடி உங்கள் வேலைகள் நிறைவேறும். பணத்தை பிற திட்டங்களில் முதலீடு செய்வது குறித்து பரிசீலிக்கலாம். இது எதிர்காலத்தில் உங்களுக்கு நல்ல லாபத்தைத் தரும். குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவீர்கள். அவர்களுடன் வெளியே செல்ல திட்டமிடலாம். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

கடக ராசிக்கான ஞாயிற்றுக்கிழமை பரிகாரம்: இரண்டு செப்பு நாணயங்களை எடுத்துக் கொண்டு, இவற்றில் ஒன்றை உங்கள் கையில் எடுத்து, உங்கள் மன விருப்பத்தை நினைத்துக் கொண்டு ஓடும் நீரில் எறிந்துவிட்டு, மற்றொன்றை உங்கள் பாக்கெட்டில் வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் மன விருப்பங்கள் நிச்சயம் நிறைவேறும்.

சிம்ம ராசி

நாளை அதாவது ஜூலை 7ஆம் தேதி சிம்ம ராசிக்காரர்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும்.  வாழ்க்கை முறையில் சாதகமான மாற்றங்கள் தென்படும். ஆன்மீகம் சார்ந்த பயணம் செல்லும் வாய்ப்புகள் உள்ளன.  மன வலிமையால், சவால்களை முறியடிப்பதில் வெற்றி பெறுவீர்கள். வேலை மற்றும் வணிகத் துறையில் கணிசமான வெற்றியைப் பெறுவீர்கள். மகிழ்ச்சிக்கும் குடும்ப உறுப்பினர்கள் உறுதுணையாக இருப்பார்கள். சமூகத்தில் உங்கள் மரியாதையும் அதிகரிக்கும். சொத்துக்களை வாங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன. குழந்தைகளின் வளர்ச்சியைக் கண்டு மன மகிழ்ச்சி அடைவீர்கள், உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டிருப்பவர்களின் ஆரோக்கியம் மேம்படும்.

சிம்ம ராசிக்காரர்களுக்கான ஞாயிற்றுக்கிழமை பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமை சூரியனை வணங்கி, அருகில் உள்ள ஏதேனும் ஒரு கோயிலுக்கு சென்று வழிபடவும்

துலாம் ராசி

நாளை அதாவது ஜூலை 7 துலாம் ராசிகளுக்கு மகிழ்ச்சியான நாளாக இருக்கும். வேலையில் மிகுந்த ஆர்வத்துடன் இருப்பார்கள். வாழ்க்கையின் அனைத்து துறைகளிலும் வெற்றி பெறுவீர்கள், சூரியபகவானின் அருளால் உங்கள் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நிறைய பணம் சம்பாதிப்பதுடன் பணத்தையும் மிச்சப்படுத்துவீர்கள்.  நிலம் அல்லது வாகனம் வாங்கும் கனவு நாளை நனவாகும் என்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். நீங்கள் வீட்டில் சில சுப நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யலாம். குடும்பத்துடன் ஆன்மீக பயணத்திற்கு செல்லவும் திட்டமிடலாம்.

துலாம் ராசிக்கான ஞாயிறு பரிகாரம்: செம்பருத்திப் பூக்களை தண்ணீரில் நனைத்து சூரிய பகவானுக்கு அர்ப்பணித்து, சூரிய சாலிசாவை பாராயணம் செய்யவும்.

மேலும் படிக்க | சூரிய அஸ்தமனத்திற்கு பின்.. ‘இவற்றை’ தானம் செய்தால் லட்சுமி கடாட்சம் போய் விடும்..!!

கும்ப ராசி

நாளை அதாவது ஜூலை 7 ஆம் தேதி கும்ப ராசிகளுக்கு சாதகமாக இருக்கும். தங்கள் லட்சியத்தை அடைய இரவு பகலாக உழைத்து வெற்றி பெறுவார்கள். சூரிய பகவானின் அருளால், உங்கள் மன உறுதி அற்புதமாக இருக்கும். ஏராளமான செல்வத்தையும் புகழையும் சம்பாதிப்பதில் வெற்றி பெறுவீர்கள். உங்கள் திறமைக்கான அங்கீகாரம் கிடைக்கும். புதிய ஒப்பந்தம் நிறைவேறும். இது உங்கள் நிதி நிலைமையை பலப்படுத்தும். இந்த ராசி மாணவர்கள் நாளை உயர்கல்விக்காக வெளியூர் செல்லும் வாய்ப்பு கிடைக்கும். ஞாயிறு விடுமுறையை வீட்டின் குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக கழிப்பீர்கள்.  விருந்தினர் வருகை மனதிற்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும்

கும்ப ராசிக்கான ஞாயிற்றுக்கிழமை பரிகாரம்: பணம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து விடுபட, வெல்லம் மற்றும் நெய்யை சூரியனுக்கு அர்ப்பணித்து சூரிய சாலிசாவை பாராயணம் செய்யவும்.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

மேலும் படிக்க | 12 ஆண்டுகளுக்கு பின் இணையும் குரு - செவ்வாய்... இந்த ராசிகளுக்கு ஜாக்பாட்..!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News