இன்னும் 26 நாட்களில் குரு பெயர்ச்சி..இந்த ராசிகளுக்கு பண மழை ஜோராக கொட்டும்

Guru Gochar 2023 in mesh: ஏப்ரலில் குரு பகவான் மேஷ ராசியில் இடப்பெயர்ச்சி அடைகிறார். இந்த குரு பெயர்ச்சி 5 ராசிகளை சேர்ந்தவர்களின் அதிர்ஷ்டத்தை பிரகாசிக்க வைக்கும்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Mar 27, 2023, 04:32 PM IST
  • எந்த ராசிக்கு கோடீஸ்வர யோகம் கிடைக்கும் தெரியுமா.
  • குரு பெயர்ச்சி ஏப்ரல் 22ம் தேதி நடக்க உள்ளது.
  • குரு பெயர்ச்சியின் போது அவரின் பார்வை பலன் மிகவும் முக்கியமானதாகக் கவனிக்கப்படும்.
இன்னும் 26 நாட்களில் குரு பெயர்ச்சி..இந்த ராசிகளுக்கு பண மழை ஜோராக கொட்டும்

குரு பெயர்ச்சி 2023 - 2024: ஜோதிடத்தின் படி, குரு 12 ஆண்டுகளுக்குப் பிறகு மேஷ ராசியில் இடப்பெயர்ச்சி அடைகிறார். ஏப்ரல் 22, 2023 அன்று, குரு மேஷ ராசியில் பயணித்து மே 1, 2024 வரை இந்த ராசியில் இருப்பார். தனக்காரகன், தேவ குரு, பிரகஸ்பதி என அழைக்கப்படக்கூடியவர் குரு பகவான். இவர் தனுசு, மீன ராசிக்கு அதிபதியாவார். குரு பார்க்க கோடி புண்ணியம் என்பார்கள். குரு பெயர்ச்சியின் போது அவரின் பார்வை பலன் மிகவும் முக்கியமானதாகக் கவனிக்கப்படும். எனவே இந்த பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் சுப பலன்களைத் தரும். மேலும் இந்த பெயர்ச்சி ஏப்ரல் 22, 2023 அன்று அதிகாலை சரியாக 04:42 மணிக்கு நடைபெறும். இதனால் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட பலன்கள், கோடீஸ்வர யோகம் கிடைக்க உள்ளது என்பதை தெரிந்துக்கொள்வோம்.

மேஷ ராசி: குரு பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு பல நன்மைகளைத் தரும். உங்கள் இலக்கை அடைவதில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள். ஆரோக்கியம் மேம்படும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். உங்கள் தொழிலில் வெற்றியும் மரியாதையும் பெறுவீர்கள். பதவி உயர்வு - சம்பள உயர்வு கிடைக்கும்.

மேலும் படிக்க | ராம நவமியும் சர்வார்த்தசித்தி யோகமும்! ‘இந்த’ ராசிகளின் எண்ணம் அனைத்தும் நிறைவேறும்! 

மிதுன ராசி: குரு பெயர்ச்சி மிதுன ராசிக்காரர்களுக்குப் புதிய வருமானத்தைத் தரும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். செயல்களில் வெற்றி உண்டாகும். குறிப்பாக வியாபாரம் செய்பவர்கள் மகத்தான வெற்றியைப் பெறுவார்கள். குடும்பத்தின் ஒத்துழைப்பு சிறப்பாக கிடைக்கும். குறிப்பாக உங்களின் மூத்த சகோதரர்களின் ஆதரவும், வழிகாட்டுதல்களும் உங்களுக்கு கிடைத்து முன்னேற்றம் பெற வழிவகுக்கும்.

சிம்ம ராசி: குரு பெயர்ச்சி சிம்ம ராசிக்காரர்களுக்கு திடீர் செல்வத்தை தரும். தடைப்பட்ட பணமும் கிடைக்கும். கடன் தொல்லையிலிருந்து விடுபடுவீர்கள். எல்லாத் துறையிலும் வெற்றி கிடைக்கும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். திருமண வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும்.

கன்னி ராசி: குரு பெயர்ச்சி கன்னி ராசிக்காரர்களுக்கு புதிய வேலைகளில் வெற்றியைத் தரும். உங்கள் திட்டங்களை செயல்படுத்துவதில் வெற்றி பெறுவீர்கள். காதல் வாழ்க்கை நன்றாக இருக்கும். மதப் பயணம் செல்வது சுப பலன்களைத் தரும். எனவே உங்கள் ராசிக்கு குரு மேஷத்தில் சஞ்சரிக்கக்கூடிய காலம் மிகவும் யோக பலன்கள் உண்டாகும்.

மீன ராசி: மீன ராசியினருக்கு குரு பெயர்ச்சி சிறப்பான பலன்களை தரும். பண வரவு சாதகமாக இருக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். தொழிலில் வெற்றி கிடைக்கும். புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது. )

மேலும் படிக்க | வாஸ்து சாஸ்திரப்படி உங்கள் வீடு எப்படியெல்லாம் இருக்க வேண்டும்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

More Stories

Trending News