சனி ராசி மாற்றம், ஏழரை நாட்டு சனி, சனி தசை: ஜோதிடத்தில், சனி நீதியின் கடவுளாகக் கருதப்படுகிறார். ஏனெனில் அவர் மனிதர்களின் செயல்களுக்கு ஏற்ப பலன்களைத் தருகிறார். மேலும் சனி மிக மெதுவாக நகரும் கிரகமாகும். ஆகையால், சனியின் நிலையில் சிறிய மாற்றம் ஏற்பட்டாலும் 12 ராசிக்காரர்களுக்கும் பாதிப்பு ஏற்படும். தற்போது சனி பகவான் மகர ராசியில் இருக்கிறார், அக்டோபர் 23ம் தேதி முதல் வக்ர நிவர்த்தியாகி தனது இயல்பு பாதைக்கு திரும்பியுள்ளார். ஜனவரி 17, 2023 அன்று சனி பெயர்ச்சியாகி கும்ப ராசிக்குள் நுழைகிறார்.
சனியின் இந்த ராசி மாற்றம் சில ராசிகளுக்கு சுபமாகவும், சிலருக்கு அசுபமாகவும் அமையும். சில ராசிகள் மீதான ஏழரை நாட்டு சனி மற்றும் சனி தசையின் தாக்கம் விலகும், சில ராசிகளுக்கு இவை தொடங்கும். ஜனவரி 17 நடக்கவுள்ள சனி பகவானின் பெயர்ச்சியால் ராசிகளில் ஏற்படவுள்ள தாக்கத்தை பற்றி இந்த பதிவில் காணலாம்.
ஜனவரி 2023 முதல் சனியின் கோபத்தில் இருந்து விடுதலை கிடைக்கும்
ஜோதிட சாஸ்திரப்படி, ஜனவரி 17, 2023 இரவு 8 மணி 2 நிமிடத்தில் சனி பகவான் மகர ராசியில் இருந்து விலகி, கும்ப ராசிக்குள் நுழைவார். சனி மாறியவுடன் 2 ராசிக்காரர்களுக்கு சனி தசையிலிருந்தும் 1 ராசிக்கு ஏழரை நாட்டு சனியின் தாக்கத்திலிருந்தும் விடுதலை கிடைக்கும். இந்த ராசிக்காரர்களுக்கு ஏழரை நாட்டு சனி மற்றும் சனி தசையால் ஏற்பட்ட பல பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
மேலும் படிக்க | சுக்கிரன் புதன் இணைவதால் உருவாகும் லட்சுமி நாராயண யோகம்: இந்த ராசிகளுக்கு ஜாக்பாட்
3 ராசிக்காரர்களுக்கு சனிப்பெயர்ச்சி பலன் தரும்
2023 ஜனவரியில் சனி கும்ப ராசியில் நுழையும் போதே துலாம் மற்றும் மிதுன ராசிக்காரர்களுக்கு சனி தசையிலிருந்து விடுதலை கிடைக்கும். இத்துடன் தனுசு ராசிக்காரர்களுக்கு ஏழரை நாட்டு சனியின் தாக்கத்தில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
எழரை நாட்டு சனி மற்றும் சனி தசையின் தாக்கம் நீங்கிய உடனேயே இத்தனை நாட்களாக முடக்கப்பட்டிருந்த இந்த மூன்று ராசிக்காரர்களின் பணிகள் நடந்து முடியும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். பண வரவு சாதகமாக இருக்கும். மரியாதை அதிகரிக்கும். மொத்தத்தில், இந்த நேரம் அவர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும்.
இந்த ராசிகளுக்கு ஏழரை நாட்டு சனி, சனி தசையின் தாக்கம் துவங்கும்
சனி கும்ப ராசியில் பிரவேசித்தவுடன் 2023 ஜனவரி முதல் மீன ராசியில் ஏழரை நாட்டு சனியின் முதல் கட்டம் தொடங்கும். இதுதவிர மகரம், கும்ப ராசிகளிலும் ஏழரை நாட்டு சனியின் தாக்கம் இருக்கும். கடகம் மற்றும் விருச்சிக ராசியில் சனி தசை தொடங்கும். இத்தகைய சூழ்நிலையில், சனியின் தோஷங்களைத் தவிர்க்க, சனிக்கிழமையன்று சனி பகவானுக்கான பரிகாரங்களை செய்வது நல்லது. சனி பகவானுக்கு விளக்கு ஏற்றுவது, ஏழைகளுக்கு தானம் செய்வது, விலங்குகளுக்கு உணவளிப்பது ஆகிய பரிகாரங்களால் நன்மை கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ